டெல்லி:காங்கிரஸ் கட்சி பார்ப்பணர்களின் ஆதிக்க கட்சி என்பதை மீண்டும் நிரூபிக்க தயாராகி வருகிறது. இதற்கு முன்னோட்டமாக டெல்லியில் அண்மையில் ராகுல்காந்தி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த சாதி ஆயுதம் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது ராகுல்காந்தி சட்டென “நான் ஒரு பிராமின்… அப்புறம்தான் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர்” என்று கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுபான்மை முஸ்லிம்களின் தோழன் வேடம் போட்ட காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் பல வித்தைகளை பயிற்றுவித்த போதும் எதுவும் சாதிக்க இயலவில்லை. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு, தலித்துகளின் குடிசைக்குள் திடீரென நுழைந்து சாப்பிடுதல் போன்ற நாடகங்களை மேற்கொண்டபோதும் மக்களின் விழிப்புணர்வால் காங்கிரஸால் சிறுபான்மை, தலித்து வாக்குகளை பெற இயலாமல் போய்விட்டது.