ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பழைய நகரத்தில் உள்ள மதண்ணாபேட் மற்றும் சயீதாபாத் பகுதிகளில் வகுப்புக்கலவரம் நடந்து வருகிறது.
அங்குள்ள அனுமார் கோவிலில் மாட்டு இறைச்சி துண்டுகளை போட்டதால் கலவரம் நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் கலவரம் பரவ காரணம் வி.ஹெச்.பி ஹிந்துத்துவா இயக்கத்தின் தலைவர் பிரவீன் தொகாடியாவின் வெறியூட்டும் பேச்சிதான் முக்கிய காரணமாக அமைந்தது என்கிற குற்றச்சாட்டு இப்போது எழுந்துள்ளது.
விஸ்வ ஹிந்து பரிசத்தின் தலைவர் பிரவின் தொகாடியாவின் வெறியூட்டும் பேச்சுக்கு பிறகு வி.ஹெச்.பி தலைவர் கோவிந்த்சிங், லோக்கல் பா.ஜ.க கவுன்சிலர் ஸஹதேவ் யாதவ் ஆகியோரின் தலைமையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இதை ஹைதராபாத்தில் மனித உரிமை அமைப்பான PUCL யின் கண்காணிப்பு கமிட்டி போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் பலமுறை பிரவின் தொக்காடியா உரை நிகழ்த்தியுள்ளார். இது குறித்து இவர் மீது பல வழக்குகள் பதியப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு அனுமதி வழங்கி போலீசார் இந்த கலவரத்திற்கு வித்திட்டுள்ளனர்.ஹனுமான் கோயிலுக்கு அருகே மாட்டிறச்சியை ஹிந்துதுவாவினரே போட்டுவிட்டு அதை முஸ்லிம்கள் செய்ததாக சொல்லி கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்று மாட்டிறைச்சி போட்டு பலமுறை கர்நாட்டகா மாநிலத்திலும் ஹிந்துதுவாவினர் கலவரங்களை நடத்தி வந்தனர். குறிப்பாக கடந்த சுதந்திர தினத்தில் கர்நாடகா மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றி அந்த பழியை முஸ்லிம்கள் மீது போட்டு கலவரம் செய்ய தயாராக இருந்த ஸ்ரீராம சேனா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளை காவல்துறை கைது செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
போலீசார் முன்னிலையில் கலவரம் நடந்துள்ளது. அதை காவல்துறை வேடிக்கை பார்த்துள்ளது. குர்மாங்குடா மற்றும் ஸஈதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகமாக தாக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் வீடுகளில் அத்துமீறி நுழைந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தி யுள்ளனர். கலவரக்காரர்களை தடுக்க வேண்டிய போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை அதிகமாக கைது செய்துள்ளது. ஹிந்துத்துவாவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து போலீஸ் செயல்படக்கூடாது. முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று சிவில் லிபர்டீஸ் மானிட்டரிங் கமிட்டி தலைவர் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
மதவெறி ஊட்டி மக்களை பிளக்கும் சதிகாரர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்என்பதே நமது வேண்டுகோள்!.
நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.