சென்னை: மத்தியிலும் மாநிலத்திலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று 5 மண்டலங்களில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடக்க இருக்கிறது.
இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில், செயலாளர் முஹம்மது ஷேக் அன்சாரி, சென்னை மாவட்ட தலைவர் ஜே.முஹம்மது நாஜிம் மற்றும் செயலாளர் ஷாஹித் ஆகியோர் கலந்து கொண்டனர். திரளான பத்திரிக்கை நிருபர்கள் கலந்து கொண்டு மாநில தலைவரிடம் பேட்டி கண்டனர்.
இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
இந்திய முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு நிலை பற்றி அறிய மத்திய அரசு 2006ம் ஆண்டு நீதிபதி இராஜேந்திர சச்சார் தலைமையில் கமிஷன் ஒன்றை நியமித்தது.
சச்சார் கமிஷன் தனது அறிக்கையை நவம்பர் 2006ல் மத்திய அரசிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் கல்வி, அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் இந்தியாவில் அவர்களின் விகிதாச்சாரத்தை காட்டிலும் மிகவும் கீழான நிலையில் இன்னும் சொல்லப்போனால் தலித்கள், மலைவாழ் மக்களை விடவும் பின் தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர் என்பதை படம் பிடித்துக்காட்டியது.
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 13.4% முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஆனால் ஐ.ஏ.எஸ் பணியில் முஸ்லிம்கள் 3%, பட்டப்படிப்பு படித்தவர்கள் 3%, இரயில்வே துறையில் 4.5% (அதில் 98.7% பேர் கடை நிலை ஊழியர்கள்) இருந்து வருகின்றனர். 25.2% முஸ்லிம்கள் வாழக்கூடிய மேற்கு வங்கத்தில் முஸ்லிம் அரசு ஊழியர்கள் 4.7% ஆவார்கள்.18.5% முஸ்லிம்கள் வாழும் உத்திர பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் 7.5% ஆவார்கள் என்று முஸ்லிம்களின் அவல நிலையை பட்டியலிட்டது சச்சார் கமிஷன்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் இந்தியாவில் ஓரளவு நல்ல நிலையை அடைந்துள்ளதற்கு காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடுதான் என்பதனையும் குறிப்பிட்டிருந்த நீதிபதி இராஜேந்திர சச்சார் முஸ்லிம்கள் இவ்வளவு கீழான நிலையில் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர் என பட்டவர்த்தனமாக அறிவித்தும் துரதிஷ்டவசமாக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக எந்த பரிந்துரையும் செய்யவில்லை. இந்நிலையில் தான் 2007ல் மற்றொரு கமிஷனான நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது, இந்நிலை மாற முஸ்லிம்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்திருந்தது.
நீதிபதி சச்சார் கமிஷன் இந்திய சமூகன்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு எனும் நோயைக் கண்டறிந்தது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனோ அந்நோய்க்கான நிவாரணம் இடஒதுக்கீடுதான் என்றது. ஆனால் இந்த கமிஷன்களின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளதுடன், மத்திய அரசு தேர்தல் நேரத்தில் மட்டும் இடஒதுக்கீடு என்று வாய்ஜாலம் காட்டி முஸ்லிம்களை ஏமாற்று வருகின்றது.
அதே போன்று தமிழகத்திலும் முஸ்லிம்களின் நிலை கவலைக்கிடமாகத்தான் உள்ளது. 1948ல் தமிழகத்தில் வகுப்புரிமை ஆணை மூலம் முஸ்லிம்களுக்கு 7% இடஒதுக்கிடு இருந்தது. 1950ல் வகுப்புரிமை ஆணை ரத்து செய்யப்பட்டது. பின்னர் அரசியல் சாசன சட்டத்தில் 15(4) சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்ட பின் 1951ம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி (அரசு ஆணை எண் 2432) தாழ்த்தப்பட்டோருக்கு 16%, பிற்படுத்தப்பட்டோருக்கு 25% என மொத்தம் 41% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் முஸ்லிம்களுக்கு வழங்க்கப்பட்டிருந்த 7% இடஒதுக்கீட்டை மட்டு மீண்டும் அமலபடுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார்கள்.
அதன் பின் முஸ்லிம்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு 2007ம் வருடம் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5% தனி இடஒதுக்கீடு முந்தைய திமுக அரசால் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின் தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக தமிழக முதல்வர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியாக வழங்கினார். ஆக, பல்வேறு இனத்தவர் வேறுபட்ட மொழியினர், மாறுபட்ட கலாச்சாரத்தில் பலரும் கலந்து பரவி வாழ்கின்ற ஒரு நாட்டில் எல்லோரு சம உரிமையோடு வாழ்வதற்கு வழிவகைகள் செய்யப்பட வேண்டும். மேலும் தேசம் வளம் பெற வேண்டுமெனில் தேசத்தில் அனைவருக்கும் அவர்களின் விகிதாச்சாரத்திற்கேற்ப உரிமைகல் வழங்கப்பட வேண்டும் என்பதைத்தான் அரசியல் சாசனத்தின் 16(1) பிரிவு வலியுறுத்துகின்றது.
அதற்கான வழிமுறைதான இடஒதுக்கீடாகும். இந்த வரலாற்று பின்னனியின் அடிப்படையில் தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லிம்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், தமிழ் நாட்டில் 3.5% இடஒதுக்கீட்டை 7% உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வரும் ஏப்ரல் 22ம் தேதி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான இப்போராட்டத்தில் பங்கெடுக்க தமிழக முஸ்லிம்கள், சமூக நீதி ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் என அனைவரையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அன்புடன் அழைக்கின்றது.