பாரதிய ஜனதாவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் 19.7.2013 அன்று
மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலை யாரால் நடத்தப்பட்டது.
எந்த பின்னணியில் நடத்தப்பட்டது என்று விசாரணை நடைபெறுவதற்கு முன்னே
இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் முஸ்லிம்கள் மீது இப்படுகொலையை திணிக்க
முற்பட்டு வருகிறது.
இதற்கு முன் வேலூர் அரவிந்த ரெட்டி, நாகை புகழேந்தி, பரமக்குடி முருகன்,
ராமேஸ்வரம் குட்ட நம்பு, வேலூரில் வெள்ளையப்பன் ஆகியோரை கொன்ற முஸ்லிம்
தீவிரவாதிகள் தான் ஆடிட்டர் ரமேஷையும் கொலை செய்திருக்கிறார்கள் என அனைத்து
இந்துத்துவ தலைவர்களும் கூப்பாடு போட்டனர்.
அதை தொடர்ந்து இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் பந்த் நடத்தியது. பந்தின்
போது பொது சொத்துக்கள், அரசு பஸ்கள் ஆகியவற்றை சேதப்படுத்தினர்.
முஸ்லிம்களின் கடைகள் திட்டமிட்டு அடித்து நொறுக்கப்பட்டன. ஃபாஸிஸ
பயங்கரவாதிகள் கோவை துடியலூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு
ஒன்றை வீசினர். ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றும்
தீக்கிறைக்யாக்கப்பட்டது. காரைக்காலில் முஸ்லிம் வியாபாரி கத்தியால்
தாக்கப்பட்டார்.