சென்னை: வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது. சங்கை மிகு இப்புனித ரமலான் மாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி 31.7.2013 நடைபெற்றது.