நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 3 ஆகஸ்ட், 2013

கட்டபஞ்சாயத்துகளால் கொல்லப்பட்டவர்களை பி.ஜெ.பி அரசியல் கொலையாக மாற்ற முயற்சி செய்வது ஏன் ?




பாரதிய ஜனதாவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் 19.7.2013 அன்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலை யாரால் நடத்தப்பட்டது. எந்த பின்னணியில் நடத்தப்பட்டது என்று விசாரணை நடைபெறுவதற்கு முன்னே இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் முஸ்லிம்கள் மீது இப்படுகொலையை திணிக்க முற்பட்டு வருகிறது.


இதற்கு முன் வேலூர் அரவிந்த ரெட்டி, நாகை புகழேந்தி, பரமக்குடி முருகன், ராமேஸ்வரம் குட்ட நம்பு, வேலூரில் வெள்ளையப்பன் ஆகியோரை கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகள் தான் ஆடிட்டர் ரமேஷையும் கொலை செய்திருக்கிறார்கள் என அனைத்து இந்துத்துவ தலைவர்களும் கூப்பாடு போட்டனர்.


அதை தொடர்ந்து இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் பந்த் நடத்தியது. பந்தின் போது பொது சொத்துக்கள், அரசு பஸ்கள் ஆகியவற்றை சேதப்படுத்தினர். முஸ்லிம்களின் கடைகள் திட்டமிட்டு அடித்து நொறுக்கப்பட்டன. ஃபாஸிஸ பயங்கரவாதிகள் கோவை துடியலூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினர். ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றும் தீக்கிறைக்யாக்கப்பட்டது. காரைக்காலில் முஸ்லிம் வியாபாரி கத்தியால் தாக்கப்பட்டார்.


அதுமட்டுமல்லாமல் பந்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது. பல இடங்களில் குஜராத்தில் கண்டுமா நீங்கள் திருந்தவில்லை? நீங்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி கலவர சூழலை உருவாக்கினார்கள். ஆனால் தமிழக மக்கள் இவர்களின் சதித்திட்டங்களை முறியடித்துவிட்டனர். தமிழக காவல்துறை உயர் அதிகாரி டி.ஜி.பி.ராமானுஜம் அவர்கள் தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்க யார் முற்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து பாசிச வெறிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


கொலைகளும் காரணங்களும்:

தமிழகத்தில் பல அரசியல் கட்சி பிரமூகர்களும் பல காரணங்களுக்காக படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த கொலைகளுக்கெல்லாம் உட்கட்சி மோதல், கட்டப்பஞ்சாயத்து, நிலத்தகராறு, கள்ளத்தொடர்பு போன்ற பல காரணங்கள் கண்டறியப்பட்டது. அது போன்றுதான் பா.ஜ.கவின் பிரமூகர்களின் தொடர் படுகொலைகளும் காரணங்களாக அமைந்துள்ளது.


நாகப்பட்டிணத்தில் கடந்த 4.7.2013 அன்று பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி படுகொலை செய்யப்பட்டார். நிலத்தகராறு மற்றும் பணம் கொடுக்கல் வாங்களில் ஏற்பட்ட தகராறு தான் காரணம் என உறுதிசெய்யப்பட்டது. இது தொடர்பாக சேகர், சந்தோஷ் குமார், கார்த்திகேயன் ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

வேலூரில் கடந்த 23.10.2013 அன்று பா.ஜ.கவின் மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி மூன்று நபர்களால் கைதுசெய்யப்பட்டார். இதனை தொடர்ந்து முஸ்லிம்கள் தான் படுகொலை செய்தார்கள் என்று கடையடைப்பு நடத்தினார்கள். பின் விசாரணையில் பெண் விவகாரத்தில் தான் இப்படுகொலை நடந்தது என்று கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வசூல் ராஜா, உதயகுமார், தங்கராஜ், சந்திரன், ராஜா, பிச்சைபெருமாள், தரணி குமார் ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.


அது போல் ராமநாதபுரம் பரமக்குடியில் 19.3.2013 அன்று பா.ஜ.கவின் முன்னாள் கவுன்சிலர் தேங்காய் கடை முருகன் படுகொலை செய்யப்பட்டார். இதில் நான்கு நபர்கள் மனோகரன், ரபீக்ராஜா, சாகுல், ராஜா ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலை 6 ஏக்கர் நிலத்தகராறு தான் காரணம் என்று காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


அடுத்து ராமேஸ்வரத்தை சார்ந்த இந்து முன்னணி ஒன்றிய துணைத்தலைவர் குட்டநம்பு என்பவர் 7.7.2013 அன்று கொலை செய்யப்பட்டார். காவல்துறையின் துரித நடவடிக்கையில் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்த குற்றவாளிகளான ராமச்சந்திரன் மற்றும் சண்முகநாதன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.


மேற்குறிப்பிட்ட அனைத்து படுகொலையும் முஸ்லிம்கள்தான் என்று ஃபாசிசவாதிகள் கூக்குரலிட்டனர். ஆனால் அவை அனைத்தும் சமூக விரோத செயல்பாடுகளான கட்டப்பஞ்சாயத்து, நிலத்தகராறு, கள்ளத் தொடர்பு போன்ற காரணங்களால் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


வரலாறு ரீதியாக ஃபாசிசவாதிகளின் அணுகுமுறை


இந்துத்துவ ஃபாசிச பயங்கரவாதிகளை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்தால் இவர்களின் சதி புரியும். கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி கொண்டு தேசத்தந்தை காந்தியை கொன்ற கோட்சே இந்துத்துவ பாசறையில் வளர்ந்தவன். அன்றைய தினத்தில் காவல்துறையிடம் பிடிபடாமலோ அல்லது அவன் படுகொலை செய்யப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? தேசப்பிதா காந்தியை கொலை செய்த குற்றவாளிகளாக முஸ்லிம்கள் பார்க்கப்படுவார்கள்.


சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பை காரணம் காட்டி குஜராத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்த சங்பரிவார்களால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். மேலும் முஸ்லிம் பெண்கள் கூட்டாக கற்பழிக்கப்பட்டார்கள். ஆனால் நீதிபதி பானர்ஜி கமிஷனால் சபர்மதி ரயிலில் ஏற்பட்ட தீ என்பது யாரும் வெளியிலிருந்து வைக்கவில்லை என்று வேதியியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. அது போல் 2003ல் குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்த பா.ஜ.கவின் ஹரேன் பாண்டியா படுகொலை செய்யப்பட்டார். அவரின் கொலைக்கு முஸ்லிம்கள் தான் காரணம். 2002 கலவரத்திற்கு பழிவாங்கவே நடத்தப்பட்டது என்று முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இப்போது அதன் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதில் முஸ்லிம்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்று குஜராத் பொடா நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட அனைவரையும் அப்பாவிகள் என குஜராத் உயர்நீதிமன்றம் விடுவித்தது. ஹரேன் பாண்டியாவின் மனைவி ஜக்ருதி பாண்டியா கூட சங்பரிவார்களின் நிலைபாட்ட நம்பவில்லை. தன் கணவன் கொலையில் முஸ்லிம்களுக்கு சம்மந்தமில்லை என்று நம்புவதாகவும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று நீதி தேடி அலைகிறார்.


தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மற்றும் பஸ்நிலையத்தில் 24.1.2008 அன்று குண்டுகள் வெடித்தன. ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் என்றால் முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று பொது புத்தி உருவாகியிருப்பதை உருவாகியிருப்பதை பயன்படுத்தி இதனை முஸ்லிம்கள் மீது திணித்து கலவரத்தை ஏற்படுத்த சங்பரிவார்களால் திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் நெல்லை சரக டி.ஐ.ஜி. கண்ணப்பன் தலைமையில் துரிதமாகவும், நேர்மையாகவும் செயல்பட்டு உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட ரவி பாண்டியன், கே.டி.சி.குமார், நாராயண சர்மா உள்ளிட்டோர் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்த இந்துத்துவ பயங்கரவாதிகள் என்ற உண்மை வரலாற்று முக்கியதுவம் வாய்ந்தது என்பதை நினைவுபடுத்துகின்றோம்.


ஆக சங்கபரிவார பாசிச பயங்கரவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள். தமிழகத்தில் அரசியல் அனாதையாக்கப்பட்ட பா.ஜ.கவிற்கு அரசியல் களம் தேவை அதற்கு குஜராத் மாதிரியை பின்பற்றி நடப்பதாக இருக்குமோ. சமீபத்தில் நடந்த படுகொலைகள்? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. ஆனால் சங்கப்பரிவாரங்களின் ஊதுகுழலாக செயல்படும் பெரும்பாலான பத்திரிக்கைகள் முஸ்லிம்கள் தான் இக்கொலைகளை செய்தார்கள் என்ற தோற்றத்தை மீண்டும் மீண்டும் எழுப்புகிறது. டி.ஜி.பி. அவர்களின் உறுதிமிக்க அறிக்கை வெளிவந்த பின்னும் பத்திரிக்கைகள் இக்கொலை சம்பவத்தை முஸ்லிம்கள் மீது திருப்பிவிட காரணம் யாரை திருப்திபடுத்த என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.


பாதுகாப்பு தராததால் போலிஸூக்கு பாடம் புகட்டவே கடத்தல் நாடகமாடினோம் – அனுமன் சேனா நிர்வாகியின் நண்பர் பரபரப்பு தகவல்:



கோவை குனியமுத்தூர் மையில்கல் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். அனுமன் சேனாவின் மாநில அவைத்தலைவராக உள்ளார். இவர்து நண்பர் ராமராஜ் இவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெற்ற அனுமன் சேனா கொடியேற்ற விழாவில் கலந்துகொள்ள சென்றனர். அதன் பின்னர் இவர்கள் வீடு திரும்பவில்லை.


தேடுதல் வேட்டை:

இது குறித்து சக்திவேலின் மனைவி குனியமுத்தூர் போலிஸில் புகார் செய்தார். போலிஸார் அவர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் சக்திவேல் நேற்று காலை கட்சி நிர்வாகிகளுடன். கோவை கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு நிருபர்களிடம் அவர் தன்னை போலிஸ் உடையில் வந்தவர்கள் காரில் கடத்தி சென்றனர். அவர்களிடமிருந்து தப்பி வந்தேன் என்ற அதிர்ச்சித் தகவலை கூறினார்.

நண்பர் சிக்கினார்:

இந்த தகவலில் போலிஸாருக்கு நம்பிக்கையில்லை. எனவே உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டுவர அவரது நண்பரை பிடித்து விசாரணை செய்ய முடிவு செய்தனர். கோவையை அடுத்த இடையர் பாளையத்தில் உள்ள மகன் வீட்டில் ராமராஜ் தங்கியிருப்பது தெரியவந்தது. போலிஸார் அவரை குனியமுத்தூர் போலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

விசாரணை:

அவரிடம் அப்போது ராமராஜ் “கடத்தல்” எதுவும் நடக்கவில்லை. பாதுகாப்பு தராத போலிஸூக்கு பாடம்புகட்டவே கடத்தல் நாடகமாடினோம் என்று கூறினார். கடத்தல் நாடகம் குறித்து ராமராஜ் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு.

பாடம் புகட்ட:

நானும் சக்திவேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோத்தகிரியில் நடைபெற்ற அனுமன் சேனா கொடியெற்று நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட்டோம். அப்போது சக்திவேலுக்கு பாதுகாப்புக்கு வந்த போலிஸ்காரர் நகர எல்லை முடிந்துவிட்டது, இனிமேல் உங்களுடன் வரமுடியாது, நீங்கள் நகர எல்லைக்கு திரும்பும் போது எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். பாதுகாப்பு தராத போலிஸூக்கு பாடம் புகட்ட எண்ணிய நாங்கள் கடந்தல் நாடகமாட முடிவு செய்தோம்.


கன்னியாகுமரி சென்றோம்:


கோத்தகிரியில் கொடியெற்றுவிழா முடிந்ததும் கோவை காந்திபுரத்திற்கு திரும்பினோம் அங்கிருந்து பஸ்ஸில் கன்னியாகுமரிக்கு சென்றோம். விவேகானந்தர் பாறைக்கு சென்று வழிபட்டோம். பின்னர் சுசிந்தரம் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தோம். கோவிலுக்கு வெளியில் வந்தபோது திருவனந்தபுரம் பஸ் நின்றுகொண்டிருந்தது, அந்த பஸ்ஸில் ஏறி திருவனந்தபுரம் சென்றோம். அங்கு சாபிட்டுவிட்டு இரயிலில் பாலக்காடு வந்து சேந்தோம் அங்கு சிறுது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பஸ்ஸில் ஏறி மதுக்கரை வந்து சேந்தோம். சக்திவேல் கலெக்டர் அலுவலகத்திற்கு நிருபர்களை சந்திக்க சென்றுவிட்டார். நான் இடையூர்பாளையத்தில் உள்ள எனது மகன் வீட்டிற்கு சென்று விட்டேன். மேற்கண்டவாறு ராமராஜ் கூறினார். (மாலைமலை 1.8.2013)



பி.ஜெ.பி பிரமுகர்கள் கொலைகள் குறித்து டி.ஜி.பி விளக்கம்



முன்னதாக பாப்புலர் ப்ரண்ட் வெளியிட்ட துண்டு பிரசுரங்கள்
முன்னதாக பாப்புலர் ப்ரண்ட் வெளியிட்ட துண்டு பிரசுரங்கள்


மேலும் பி.ஜெ.பி நிர்வாகிகள் கொலை குறித்து சில செய்திகள்:


சேலத்தில் பி.ஜே.பி.கொலை வழக்கில் கைதானவர்கள் ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை






ரமேஷ் கொலை வழக்கில் தீ குளித்து இறந்த ராஜே ராஜேஸ்வரியிடம் விசரணை குறித்து வந்த செய்தி

தினமணி - ஷாருக்கான் என்பவன் கைது - பச்சைப்பொய்
மாலை மலர் - சங்கர் என்ற ஷாருக்கான் - கொஞ்சம் எடிட்டிங்


இந்த சங்கர் கைது செய்யப்பட்ட பின்னர் தீனதயாளன் மற்றும் சிவசங்கரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் தான் அத்வானி மதுரைக்கு வருகை தந்த போது பைப் வெடிகுண்டு வைத்தார்களா என்றும் விசாரணை நடப்பதாக தகவல் வருகிறது.இச்செய்தியை எத்தனை மீடியாக்கள் வெளியிட்டுள்ளன?இதுவே இம்மூவரும் முஸ்லிம்களாக இருந்திருந்தால்இன்று இது தான் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய செய்தியாக ஆக்கியிருப்பார்கள் மீடியாக்கள்.

இச்செய்தியை வெளியிட்ட தினமணியும் மாலைமலரும் கூட மக்களின் மனதில் நஞ்சை விதைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டுள்ளனர். அதாவது ஷாருக்கான் என்ற முஸ்லிம் பெயரை போட்டால் இப்போதும் பொதுமக்களிடம் இதனை செய்ததும் முஸ்லிம்கள் தான் என்ற கெட்டபெயரை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.



காந்தியை கொன்றதில் இருந்து தொடங்கி தென்காசியில் குண்டுவைத்து, தற்போது நடக்கும் அரசியல் படுகொலைகள் என அரசியல் குளிர் காய்வதற்காக தொடர்ந்து நடத்தப்படும் சங்பரிவார்களின் சதி நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சங்பரிவார்களின் நாடகத்தை மக்கள் அறிந்து பா.ஜ.கவை தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்!