திருவனந்தபுரம்:நேற்று(30/05/2013)
கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த
யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்குஎதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின்
இறுதியில் நடந்த பேரணி, மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான
மக்கள் திரள், பொய்க்கதைகளை ஜோடித்தும், கறுப்புச் சட்டங்களை பிரயோகித்தும்
நவீன சமூக எழுச்சிக்கு தடை போட்டுவிடலாம் என்று கனவு காணும் அதிகார, ஆளும்
வர்க்கத்திற்கு பதிலடியாக அமைந்தது. யு.ஏ.பி.ஏ என்ற கறுப்புச்
சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரண யாத்திரா’ என்ற மக்கள் விசாரணை பயணத்திற்கு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில தலைவர் கரமன அஷ்ரஃப்
மவ்லவி தலைமை வகித்திருந்தார்.