எகிப்தில் முதன் முறையாக ஜனநாயக ரீதியில் தேந்தெடுக்கப்பட்ட எகிப்து ஜனாதிபதியை ஆயுத படையை (இராணுவத்தை) கொண்டு வெளியேற்றியது மிகவும் கவலைக்குரியது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் தெவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறிகையில் "ஹாஸ்னி முபாரக் வெளியேற்றப்பட்டதிலிருந்து, அதிகாரத்தை மோசமான முறையில் தவறவிட்ட முபாரக்கின் விசுவாசிகளான இராணுவ தலைவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டமிட்ட சதி இது என்பதே உண்மை. ஜனாதிபதி முஹம்மது முர்ஸியின் அரசாங்கத்தை கவிழ்த்ததும், அரசியலமைப்பை இடைநீக்கம் செய்ததும் எகிப்திற்கு மட்டுமல்ல அரபுலக ஜனநாயக முறைக்கே பின்னடைவாக அமைந்துள்ளது.
எகிப்துடைய ஜனாதிபதியாக சட்ட ரீதியாக தேந்தெடுக்கப்பட்ட முர்ஸியை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும். மேலும் உள் அமைப்பின் மூலம் மீண்டும் ஜனநாயகத்தை கொண்டுவர வேண்டும் அதற்கு இந்திய அரசாங்கம் எகிப்திய படையின் மீது தூதரக அழுத்தம் கொண்டுவர வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.