நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 9 மார்ச், 2013

இலங்கை போர் குற்றவாளிகளை விசாரணையின் முன் நிறுத்த வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு தீர்மானம்!

புது டெல்லி :-  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் தேசிய தலைமையகத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்று வரும் மரண தண்டனைக்கெதிரான பிரச்சாரத்திற்கு இச்செயற்குழு முழுமையான ஆதரவை வழங்கியது. 
தற்போதைய அரசியல் மற்றும் சமூக சூழலில் ஏழை மற்றும் சட்ட பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிராகத்தான் மரண தண்டனை வழங்கப்படுகிறது. தங்களுக்கு எதிரானவர்கள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அரசாங்கம் இதனை பயன்படுத்தி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மரண தண்டனையை ஒழித்திருப்பதை இச்செயற்குழு சுட்டிக்காட்டியது. சட்ட புத்தகங்களில் இருந்து மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு செயற்குழு கோரிக்கை வைத்தது.

வெள்ளி, 8 மார்ச், 2013

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?


தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல்மருத்துவம்உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ் என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

வியாழன், 7 மார்ச், 2013

குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லீம்களை குறை கூறி செய்தி வெளியிடுவதை நிறுத்துங்கள்! – பிரஸ் கவுன்சில் தலைவர்

டெல்லி :- நாட்டில் நடக்கும் அத்தனை குண்டுவெடிப்புச் சம்பவங்களின் போதும் உடனடியாக முஸ்லீம்களை குறை கூறி செய்தி வெளியிடுவதை மீடியா நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் வேண்டும் என்று முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
மார்க்கண்டேய கட்ஜூ
கட்ஜூவுக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து பாப்பலர் ஃப்ரண்ட் நடத்திய தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்.

சென்னை :-  கடந்த 22.01.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் நடந்த ஊர்வலத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஒரு தரப்பினரான முஸ்லிம்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டு மாணவர்கள் உட்பட 72 நபர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டார்கள்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை இழந்துவிட்டோம் – இ.அபூபக்கர் இரங்கல்!

புதுடெல்லி:- பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து அமெரிக்காவின் திமிரை எதிர்த்த தீரமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை சாவேஸின் மரணத்தின் மூலம் உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் இழந்துவிட்டார்கள் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இ.அபூபக்கர்
சோவியத் யூனியன் மற்றும் உலக கம்யூனிச இயக்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து புதிய உலக ஒழுங்குமுறை என்ற செல்லப் பெயரிட்டு அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு முயற்சிகளை திட உறுதியுடன் எதிர்த்த சாவேஸ் 3-ஆம் உலக நாடுகளின் தோழன் ஆவார்.

புதன், 6 மார்ச், 2013

ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றிணைய வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு!


புதுடெல்லி :- ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே உண்மையான சக்திப்படுத்துதல் சாத்தியமாகும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் கூறியுள்ளார்.
புதுடெல்லி இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்பாடுச் செய்த  ஒன்று கூடல்(get-together) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார் அவர். பல்வேறு துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் மூலமாக ஏகபோக குத்தகைகளுக்காக நாட்டின் செல்வம் செலவிடப்படுவதை எதிர்த்து போராடுவது கட்டாயம் என்று துணை தலைவர் பேராசிரியர் பி.கோயா கூறினார்.

பைப் வெடிகுண்டு சதிகாரர்கள் கைது! புதுவை ரயிலில் குண்டு வைத்தது அம்பலம்!


திருச்சி:- ஹைதராபாத் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்துவரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 
where-the-pipe-bomb-was-found
மும்பையிலிருந்து புதுவை வரும் தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் மதுரையில் பா.ஜ.கவின் அத்வானி வருகையின் போது பைப் வெடிக்குண்டு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.

64 வது குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் வடகரை மாணவிகள் சாதனை

வடகரை :- நாட்டின் 64 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற பாரதியார் நினைவு விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் குங்ஃபு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலிமிருந்து 722 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பண்பொழி செயிண்ட் ஜோசப் மேல்நிலை பள்ளியின் சார்பில் வடகரையை சார்ந்த சகோதரிகள் ரிஷிகா மற்றம் ஷபானா ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர். இருவரும் சிற வயதிலிருந்தே கராத்தே, குங்ஃபு, டேக்வோண்டா போட்டிகளில் மாநில அளவில் முதல் மூன்று இடத்தை மாறிமாறி தக்க வைத்து வருகின்றனர்.

செவ்வாய், 5 மார்ச், 2013

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி & பாப்புலர் ஃப்ரண்ட் இணைந்து நடத்திய புனித ஹஜ் பயண பாஸ்போர்ட் விழிப்புணர்வு முகாம்

காஞ்சிபுரம் : பாஸ்போர்ட் இல்லாத முஸ்லிம்கள், உடனடியாக பாஸ்போர்ட் பெறுவதற்கு வசதியாக “ஹஜ் மேளா”வை அரசு நடத்துகிறது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் மார்ச் 2ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஹஜ் மேளா நடைபெற உள்ளது. இதில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் பங்கேற்று, உடனடியாக பாஸ்போர்ட் கிடைக்க ஆவண செய்கிறார்கள்.
இதனை முன்னிட்டு ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, புனித ஹஜ் பயண மேற்கொள்பவர்களுக்கு உதவி செய்வதற்காக

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயற்குழு கோரிக்கை.


02-03-2013 அன்று செங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சி நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி அவர்களின் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ் வரும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
 
தென்காசி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அரசு சம்மந்தப்பட்ட மாவட்ட ரீதியிலான அத்தியாவசிய