02-03-2013 அன்று செங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சி நெல்லை மேற்கு
மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி அவர்களின் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் கீழ் வரும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
தென்காசி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.
அரசு சம்மந்தப்பட்ட மாவட்ட ரீதியிலான அத்தியாவசிய
தேவைக்கு மக்கள் திருநெல்வேலிக்கே
செல்ல வேண்டிய நிர்பந்தமுள்ளது. இதனால், இலகுவாக கிடைக்க வேண்டிய அரசின்
திட்டங்களை இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு பிறகே
அடையமுடிகின்றது. இப் பகுதியில் வசிக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் முதியவர்கள்,பெண்கள்
என பலர்கள் பயணம் செய்வதற்கு இயலாமல் அரசின் திட்டங்களை பெற முடியாமல் அவதி
படுகின்றனர்.
தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்வதற்கு 2.00மணி நேரமும், கடையநல்லூர்
புளியங்குடி பகுதியிலிருந்து 2.30 மணி நேரம் முதல் 3.00மணி நேரம் வரை ஆகிறது.
இதனால் பல அரசு பணிகள் தொய்வுடன் நடக்கின்றது. மேலும், குற்றாலம் போன்ற சுற்றுலாத்
தலங்களும், மத வழிப்பாட்டு தலங்களும் அதிகமாக இருப்பதால் மக்கள் போக்குவரத்தும்
அதிகம் உள்ளது. இவைகளை கருத்தில் கொண்டு வரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க இம்
மாவட்ட செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தென்காசியில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் தென்காசி செய்யது அலி, மாவட்ட
துணைத் தலைவர் யாசர்கான், மாவட்ட பொருளாளர் நயினாமுகம்மது (எ) கனி, மாவட்ட
செயலாளர்கள் நாகூர் கனி, ஹக்கீம்,அஜிஸ் மற்றும் கடையநல்லூர்
சட்டமன்ற தொகுதி தலைவர் நல்லூர் உசேன், மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர்.