புதுடெல்லி :- ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே உண்மையான சக்திப்படுத்துதல் சாத்தியமாகும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் கூறியுள்ளார்.
புதுடெல்லி இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்பாடுச் செய்த ஒன்று கூடல்(get-together) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார் அவர். பல்வேறு துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் மூலமாக ஏகபோக குத்தகைகளுக்காக நாட்டின் செல்வம் செலவிடப்படுவதை எதிர்த்து போராடுவது கட்டாயம் என்று துணை தலைவர் பேராசிரியர் பி.கோயா கூறினார்.
உரிமைகள் மறுக்கப்படுகிறது என்ற உண்மையை சிறுபான்மை சமூகத்தினரும், தலித்துகளும் புரியத் துவங்கியுள்ளனர் என்று பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம் தனது உரையில் குறிப்பிட்டார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகிகளை முன்னாள் தேசிய தலைவர் இ.எம்.அப்துல் ரஹ்மான் அறிமுகப்படுத்தினார். செயலாளர்களான முஹம்மது அலி ஜின்னா, இல்யாஸ் முஹம்மது, பொருளாளர் முஹம்மது ஷிஹாபுத்தீன், டெல்லி தலைவர் அன்ஸாருல் ஹக் ஆகியோர் பங்கேற்றனர்.
ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.