நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 7 மார்ச், 2013

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை இழந்துவிட்டோம் – இ.அபூபக்கர் இரங்கல்!

புதுடெல்லி:- பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து அமெரிக்காவின் திமிரை எதிர்த்த தீரமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை சாவேஸின் மரணத்தின் மூலம் உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் இழந்துவிட்டார்கள் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இ.அபூபக்கர்
சோவியத் யூனியன் மற்றும் உலக கம்யூனிச இயக்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து புதிய உலக ஒழுங்குமுறை என்ற செல்லப் பெயரிட்டு அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு முயற்சிகளை திட உறுதியுடன் எதிர்த்த சாவேஸ் 3-ஆம் உலக நாடுகளின் தோழன் ஆவார்.
ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக நின்ற நாடுகளுடன் நல்லுறவை பேணிய சாவேஸ், ஏகாதிபத்திய திமிருக்கு எதிரான துணிச்சலான குரலாக திகழ்ந்தார். அமெரிக்கா ஆதிக்கத்தின் முன்னால் மண்டியிடாத முஸ்லிம் நாடுகளுடன் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தவும் சாவேஸ் தயங்கவில்லை. சாவேஸின் மரணத்தால் கவலையில் ஆழ்ந்துள்ள உலக ஒடுக்கப்பட்ட மக்களின் துயரத்தில் எஸ்.டி.பி.ஐயும் பங்கேற்கிறது. இவ்வாறு இ.அபூபக்கர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.