நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 7 ஆகஸ்ட், 2013

கழுநீர்குளம் என்ற கிராமத்தில் முஸ்லிம் பெண்களிடம் அநாகரீகம்




நெல்லை மேற்கு மாவட்டத்தில் உள்ள  கழுநீர்குளம் என்ற கிராமத்தில் 06-08-2013 மதியம் 3-00 மணியளவில் பள்ளிவாசல் தெற்கு தெருவில் (மாற்று பாதை இருந்தும்) பிரச்சனை செய்யும் நோக்கில் தேவர் சமுதாயத்தைச் சார்ந்த சிலர் சவ ஊர்வலம் சென்று முஸ்லிம் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட விஷயத்தை கேள்விப்பட்டவுடன் நெல்லை மேற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டத் தலைவர் செய்யது இப்ராஹிம் உஸ்மானி,மாவட்ட செயலாளர் லுக்மான் ஹக்கீம் மற்றும் SDPI கட்சியின்   மாவட்டத் தலைவர் ஜாபர் அலி உஸ்மானி, மாவட்ட துணைத் தலைவர் யாசர் கான், ஆகியோர் கழுநீர்குளம் ஜமாத்தை சந்தித்து விபரங்களை கேட்டறிந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர் DSPயை நேரடியாக சந்தித்து நிலைமைகளை எடுத்துக்கூறி தேவர் சமுதாயத்தைச் சார்ந்த குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய கோரினர். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

சி.பி.சி.ஐ.டி விசாரணையில் உண்மை வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்

கடந்த 19.7.13 அன்று சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். தடையம் ஏதும் கிடைக்காத நிலையில் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் ஆகிய இரண்டு நபர்களின் கொலை வழக்கை விரைவாக கண்டுபிடிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்திரவிட்டது.இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி குழுவின் விசாரணை முஸ்லிம்களை குறிவைக்கும் நோக்குடன் போலியான அணுகுமுறையிலிருந்து துவங்கியுள்ளது. சமீபத்தில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் 5 பேர் மீது 17 கிலோ வெடிப்பொருட்கள் வைத்திருந்தனர் என பொய்யான வழக்கை பதிந்து UAPA (Unlawful Activities Prevention Act) எனும் கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


காவல்துறை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் பதட்டத்தை ஏற்படுத்தி அச்சுறுத்தும் விதமாக கூட்டம் கூட்டமாக வீடுகளில் புகுந்து , எந்த நீதிமன்ற ஆவணமும் இல்லாமல் சோதனை நடத்தியுள்ளனர். இது சங்கபரிவார இயக்கங்களின் அழுத்தங்களுக்காக முஸ்லிம்களை பழி வாங்கும் செயலாகத் தெரிகிறது. இச்செயலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வண்மையாக கண்டிக்கிறது.

மேலப்பாளையத்தில் மீண்டும் காவல்துறை அட்டகாசம் நடு இரவில் அப்பாவி முஸ்லிம் கைது:காவல்துறை முற்றுகை

நெல்லை மாவட்டம் மேலப்பாளைத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்ள் கைது செய்யப்படுவது  தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தக்வா பள்ளிவாசல் வளாகத்தில் கஞ்சி மற்றும் சஹர் நேர சமையல்களை செய்து வந்த RSK ரஹ்மான் சமையல் குழுவைச் சார்ந்த காட்டு தெருவில் வசித்து வரும் பிலால் என்ற அப்பாவி இளைஞரை சமையல் செய்து கொண்டிருந்த போது காவல்துறையினர் நள்ளிரவு 1.15 மணியளவில் அடித்து இழுத்து சென்றனர். நேற்றைய தினத்தில் சஹர் நேர உணவின் தேவை அதிகமாக இருந்ததால் இவர் சமையல் கூடத்தில் சமைத்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினர்  அனைவரும் ஃபஜர் தொழுகையை தொடர்ந்து தக்வா பள்ளி வளாகாத்தில் ஒன்றுகூடி இஸ்லாமிய கூட்டமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளாராகிய K.S.ஷாகுல் ஹமீது உஸ்மானி அவர்களின் தலைமையில் சுமார் 5.30 மணியளவில் மேலப்பாளையம் காவல்நிலையத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டு காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதில் பாப்புலர் ஃப்ரண்ட், SDPI கட்சி, தக்வா ஜமாத், தமுமுக, மமக, மமமுக மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கருத்து சுதந்திரம்:இதனை முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும் பயன்படுத்துவது ஏன்?




அமெரிக்காவை சேர்ந்த அமீனா வதூத் என்பவர், ஆண்களைப் போல பெண்களும் இமாமாக இருந்து தொழுகை நடத்தலாம்,
இதுவரை இஸ்லாத்தில் யாரும் செய்யாத,ஆண்களும் பெண்களும் இரண்டரக் கலந்து தொழ வைப்பது, பெண்களைக் கொண்டு தொழுகைக்கான அழைப்பான 'பாங்கு' சொல்வது, ஜுமுஆ (வெள்ளிக்கிழமை) தொழுகைக்கு இவரே சொற்பொழிவை ஆற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு முஸ்லிம்களை வழிகெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இது தவிர, al.fatiha foundation,gaymuslim organisation என்கிற இரண்டு அமைப்புகளோடு இணைந்து இயங்குகிறார் அமீனா.


இந்த அமைப்புகள் முற்போக்கு, பெண்ணுரிமை,தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் லெஸ்பியன், கே செக்ஸ், பாலின மாற்றம் போன்ற செயல்களுக்கு ஊக்கம் அளித்து வருபவை. இந்த அமைப்புகள் அமீனாவிற்கு நிறைய விருதுகளும் வழங்கி இருக்கின்றன. இந்த அமைப்புகள் அமேரிக்கா பெர்க்ளியை மையமாக வைத்து செயல்பட்டு வருகின்றன. 
என்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருபவர்.Sisters in Islam, என்ற அமைப்பை நடத்தி வரும் அமீனா, 

  (29/07) அன்று  சென்னையிலுள்ள "மெட்ராஸ் யூனிவெர்சிட்டி"யில் சென்னை பல்கலைக்கழக இஸ்லாமிய ஆய்வுத்துறையும், JABS கல்லூரியும் இணைந்து இஸ்லாம் , பாலியல் மற்றும் சீர்திருத்தம் என்ற தலைப்பில் ‘தலைப்பில் உரை நிகழ்த்தவிருந்தார்.மேலும் பெண்களின் அனுபவங்கள் மற்றும் இஸ்லாத்தில் அவர்களின் அதிகாரம் சார்ந்த பிரச்சினைகள்” என்ற தலைப்பில் வட்டமேசை கலந்தாய்வு நடக்க இருந்தது இதற்காக, கேரள மாநிலம் கோழிக் கோட்டிலிருந்து சென்னை வரவிருந்த அவரை நிகழ்ச்சிக்கு வரவேண்டாம் என 28/07 அன்று இரவு, பல்கலைக்கழக துணை வேந்தர் தாண்டவன் கேட்டுக் கொண்டார்.சர்ச்சைக்குரிய அமீனாவின் நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெற்றால் 'சட்டம் ஒழுங்கு' பிரச்சினை உண்டாகும் என உயர் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதையடுத்து, நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக தெரிவித்தார், ஆர்.தாண்டவன்.

தேஜஸ் பத்திரிகைக்குச் சிவசேனா கொலைமிரட்டல்!


  

கேரளா: திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவில் புதையலுக்குப் பாதுகாப்பு தொடர்பான செய்தியினை வெளியிட்ட தேஜஸ் பத்திரிகைக்கு சிவசேனா கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் கோட்டையினுள் பத்மனாப சுவாமி கோயில் உள்ளது. இங்கு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரண, தங்க நாணய புதையல் கண்டுபிடிக்கப்பட்டது. இப்புதையலைப் பாதுகாப்பது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க அமிக்கஸ் க்யூரியினை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த அமிக்கஸ் க்யூரி அளித்த பாதுகாப்பு அறிக்கையினை விரிவாக தேஜஸ் பத்திரிகை வெளியிட்டது. 


இதனைத் தொடர்ந்து நேற்று காலை தேஜஸ் பத்திரிகை தலைமை அலுவலகம் மற்றும் அதன் செய்தியாளர்களின் கைப்பேசி எண்களுக்கு சிவசேனையைச் சேர்ந்தவர்கள் அழைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக தேஜஸ் பத்திரிகை ஆசிரியர் திருவனந்தபுரம் சிட்டி கமிசனர் பி. விஜயனைச் சந்தித்து புகார் அளித்தார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிசனர் பி. விஜயன் உறுதியளித்தார். 

புதிய தலைமுறையில் தமிழகத்தில் அதிகரிக்கும் கொலை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவரின் பேட்டி