நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

சி.பி.சி.ஐ.டி விசாரணையில் உண்மை வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்

கடந்த 19.7.13 அன்று சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். தடையம் ஏதும் கிடைக்காத நிலையில் ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் ஆகிய இரண்டு நபர்களின் கொலை வழக்கை விரைவாக கண்டுபிடிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்திரவிட்டது.இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி குழுவின் விசாரணை முஸ்லிம்களை குறிவைக்கும் நோக்குடன் போலியான அணுகுமுறையிலிருந்து துவங்கியுள்ளது. சமீபத்தில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் 5 பேர் மீது 17 கிலோ வெடிப்பொருட்கள் வைத்திருந்தனர் என பொய்யான வழக்கை பதிந்து UAPA (Unlawful Activities Prevention Act) எனும் கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.


காவல்துறை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் பதட்டத்தை ஏற்படுத்தி அச்சுறுத்தும் விதமாக கூட்டம் கூட்டமாக வீடுகளில் புகுந்து , எந்த நீதிமன்ற ஆவணமும் இல்லாமல் சோதனை நடத்தியுள்ளனர். இது சங்கபரிவார இயக்கங்களின் அழுத்தங்களுக்காக முஸ்லிம்களை பழி வாங்கும் செயலாகத் தெரிகிறது. இச்செயலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வண்மையாக கண்டிக்கிறது.

கடந்த காலங்களில் வழக்குகளை விசாரிக்க தமிழக முதல்வர் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவின் செயல்பாட்டிற்கும் , சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள இந்தக் குழுவின் செயல்பாட்டிற்கும் நிறைய வித்தியாசமும் பல்வேறு சந்தேகமும் உள்ளது. கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு குற்றவாளிகளை சரியாக அடையாளம் கண்டு தப்பிவிடாத முறையில் அணுகினார்கள். ஆனால் தற்பொழுதுள்ள சிறப்பு புலனாய்வு குழுவோ முஸ்லிம்கள் நிறைந்த பகுதியில் இளைஞர்களை வேட்டையாடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலை முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு விசாரணையின் கோணத்தை சரிசெய்ய வேண்டும் , உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் மற்றும் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

A.S.இஸ்மாயில்
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா