நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 27 ஜூன், 2013

கோத்ரா சம்பவம்:விசாரணை நடத்திய நீதிபதி யு.சி.பானர்ஜியை கொலைச் செய்ய முயன்ற ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!



குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்கு காரணமான கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் எரிபொருளை முஸ்லிம்கள் வெளியே இருந்து ஊற்றவில்லை,ரெயிலுக்கு உள்ளேயிருந்தே ஊற்றப்பட்டுள்ளது என்று கண்டுபிடித்த நீதிபதி யு.சி. பானர்ஜியை ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலைச் செய்ய திட்டமிட்டிருந்தான் என்று சாட்சி ஒருவர் கூறியதாக 2006 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையில் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கூறுகிறது.

உண்மையும் உரிமையும் " என்ற தலைப்பில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மாபெரும் பொதுக்கூட்டம்


பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் இஸ்மாயில் அவர்கள் உரையாற்றிய பொழுது


தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்டம் லாரிப்பேட்டையில் 16.06.2013 அன்று மாலை 5.00 மணி அளவில் "உண்மையும் உரிமையும் " என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முஹம்மது ஹனீஃபா தலைமை தாங்கினார்.

UAPA சட்டம் என்றால் என்ன?அது உருவானது எப்படி?ஒரு விரிவான பார்வை

நவம்பரில் (2009)மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஒன்றைத் தொடங்குவதற்கான சட்டம், ஏற்கெனவே இருந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை திருத்தி புதிய சட்டம் (UAPA) பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை இந்திய அரசு அவசரமாக உருவாக்கியுள்ளது. உருப்படியாக எந்த விவாதமுமின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டங்களின் மூலம், நாட்டை அரசு பயங்கரவாத அரசாக காங்கிரஸ் அரசு மாற்றியமைத்துள்ளது.

இதன் சிறப்பம்சம் என கருதப்படுபவை:

அணுவிசை பாதுகாப்பு, விமானக் கடத்தல் தடுப்பு, கொடிய பேரழிவுக்கான ஆயுதங்கள் தடுப்பு, நக்சல் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு தொடர்பான 8 வகை சட்டங்களால் தண்டிக்கப்படக் கூடிய பயங்கரவாதக் குற்றங்கள் நிகழ்ந்திருந்தால், அவற்றை இனி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும். இந்த அமைப்பின் சட்டப்படி, சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு, அவை இரகசியமாக விசாரணையை நடத்தும். சி.பி.ஐ. போன்ற மையப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு மாநில அரசின் ஒப்புதல் தேவை என்று ஏற்கெனவே இருந்த நடைமுறை மாற்றப்பட்டு, தற்போதைய தேசிய புலனாய்வு அமைப்பு மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளை வெறும் தகவல் தெரிவிக்கும் உறுப்புகளாக மாற்றிவிட்ட இச்சட்டம், மாநில அரசுகளின் பெயரளவிலான உரிமைகளைக் கூட முடக்கி, மைய அரசிடம் வரம்பற்ற அதிகாரத்தைக் குவிக்கிறது.