நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 27 ஜூன், 2013

உண்மையும் உரிமையும் " என்ற தலைப்பில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மாபெரும் பொதுக்கூட்டம்


பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் இஸ்மாயில் அவர்கள் உரையாற்றிய பொழுது


தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்டம் லாரிப்பேட்டையில் 16.06.2013 அன்று மாலை 5.00 மணி அளவில் "உண்மையும் உரிமையும் " என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முஹம்மது ஹனீஃபா தலைமை தாங்கினார்.


இப்பொதுக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயீல் , தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் P.அப்துல் சமது , NCHRO வின் தமிழ்மாநில தலைவர் பவானி.பா.மோகன், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் S.M.பாக்கர் , வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் S.N.சிக்கந்தர், SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் S.M.ரஃபீக் அஹமது , மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் கோவை M.ஜெயனுலாப்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில தலைவர் பாத்திமா முஸஃபர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் ஃபாரூக், ஐக்கிய சமாதான பேரவையின் தலைவர் மௌலவி.ஹாமித் பக்ரி மற்றும் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் S.J.இனாயத்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் , அரசியல் கட்சி நிர்வாகிகள் , ஜமாஅத்தார்கள் , பொதுமக்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.