நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 28 ஜூலை, 2012

அஸ்ஸாம் கலவரத்தை கண்டித்து அமைதிப்பேரணி - ஏ.ஐ.ஐ.சி

குவாஹாத்தி: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் (ஏ.ஐ.ஐ.சி) சார்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்து குவாஹாத்தியில் அமைதிப்பேரணி நடைபெற்றது. 
பெரும்பாலான அம்மாநில ஊடகங்கள் இச்செய்தியை ஒளிபரப்பியது. இப்பேரணியில் சுமார் 500 நபர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் இறுதியாக அஸ்ஸாம் மாநில கவர்னர் மற்றும் முதலமைச்சருக்கு துணை ஆணையாளர் மூலமாக மனு அளிக்கப்பட்டது. கலவரம் நடைபெற்ற பின்பு இதனை கண்டித்து நடைபெற்ற முதல் போராட்டம் இதுவேயாகும்.

அஸ்ஸாம் இனக்கலவரம் குறித்து விரைவான நடவடிக்கை தேவை


சமூக விரோத இனவாத சக்திகளின் சதியினால் அஸ்ஸாமில் துரதிஷ்டவசமாக நடந்து வரும் கலவரத்தில் பல பேர் கொல்லப்பட்டுள்ளதும், பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதும் குறித்து தனது ஆழ்ந்த வேதனையை தெரியப்படுத்தியுள்ளார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர். கோக்ரஜார், துப்ரி, சிராங் மற்றும் போங்கைகாவ்ன்  



போன்ற மாவட்டங்களில் பரவி வரும் கலவரத்திற்கு மாநில அரசின் பொறுப்பற்ற தன்மைதான் காரணம் என்றும் உள்ளூர் அளவில் சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சில அசம்பாவிதங்களை தொடந்து உருவான கலவர சூழலை அறிந்தும் அனைத்து சமூக மக்களுக்கும் போதிய பாதுகாப்பை வழங்கிட மாநில அரசு தவறிவிட்டது.

அஸ்ஸாமில் நடந்தது குஜராத் மாடல் முஸ்லிம் இனப்படுகொலை!


குவஹாத்தி: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை 
Assam Muslim genocide has same model as Gujarat genocide!

பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள். கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின் நுழைவு பாதைகளில் பாதுகாப்பிற்காக நின்றனர்.

ஞாயிறு, 22 ஜூலை, 2012

அஸ்ஸாமில் வன்முறை:11 பேர் பலி!


கொக்ராஜர்(அஸ்ஸாம்): அஸ்ஸாம் மாநிலம் கொக்ராஜர் மாவட்டத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் பலியானார்கள். 15 பேர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.
6
இதனைத்தொடர்ந்து அங்கு அமைதியை ஏற்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும்  சனிக்கிழமை பகல் 12 மணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

அரபு வசந்தத்தின் இறுதி மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலையாக அமையும்!


காஸ்ஸா:அரபுலகில் நடந்துகொண்டிருக்கும் வசந்த புரட்சிகள் தற்போதைய சூழலுடன் ஒடுங்கிவிடும் என கருத வேண்டாம் என ஃபலஸ்தீன் காஸ்ஸா பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா தெரிவித்துள்ளார்.
Gaza prime minister Ismail Haniyeh
கடந்த வெள்ளிக்கிழமை காஸ்ஸாவில் உள்ள மஸ்ஜிதுல் அமீனில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியது: