காஸ்ஸா:அரபுலகில் நடந்துகொண்டிருக்கும் வசந்த புரட்சிகள் தற்போதைய சூழலுடன் ஒடுங்கிவிடும் என கருத வேண்டாம் என ஃபலஸ்தீன் காஸ்ஸா பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காஸ்ஸாவில் உள்ள மஸ்ஜிதுல் அமீனில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியது:
சில அரபு ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். கிலாஃபத் திரும்ப வராது என்றும், சியோனிஸ்டுகளின் விருப்பங்களை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாப்போம் என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வாலைப் பிடித்துக்கொண்டுதான் முஸ்லிம் உம்மத் முன்னேற வேண்டும் என்றும் அந்த அரபு ஆட்சியாளர்கள் தீர்மானித்துள்ளார்கள்’ என்று ஹானிய்யா தனது உரையில் குறிப்பிட்டார்.