பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் 2012 செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் கீழ்கானும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. மாநில தலைவர் A.S. இஸ்மாயில் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் A. ஹாலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் S. பைசல் அஹமது செயற்குழு உடனே நிஜாம் முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த ரம்ஜான் பெருநாள் தினத்தன்று அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைப்பதற்க்காக தமிழகம் முழுவதும் மசூதிகளில் அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வசூல்செய்யப்பட்டது. இதில் மொத்தம் ரூபாய் 39,95,121 வசூல் செய்யப்பட்டது. இத்தொகையை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைமையிடம் ஒப்படைப்பது என்றும் அஸ்ஸாம் நிவாரணமுகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக தமிழகத்திலிருந்து ஒரு குழு நேரடியாக செல்வது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.