நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 6 செப்டம்பர், 2012

செத்துருக்கலாமோ? நரகத்தின் நடுவில்..............





அஸ்ஸாமில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டு உயிரோடிருக்கும் முஸ்லிம்களின் மனநிலைதான் மேலே கொடுக்கப்பட்ட தலைப்பின் வார்த்தை.ஏன் அடிக்கிறார்கள்? எதற்கு அடிக்கிறார்கள்? ஏன் ஊரை விட்டு வீட்டை விட்டு காலி செய்து வந்தோம் என பல கேள்வி கணைகளோடு அகதிகள் முகாமில் கலவரம் என்ற கோரதாண்டவத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் முஸ்லிம்களின் நிலையை பார்த்தால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.அமைப்புக்களை கண்காணிக்கிறோம் நிறுவனங்களை கண்காணிக்கிறோம் என அரசாங்கத்தால் சொல்லப்படும் அமைப்புக்களும் நிறுவனங்களும் இல்லை என்றால் என்றோ இவர்களும் செத்து போயிருக்கலாம்.முகாமுக்கு வெளியேயான உலகம் குண்டுகளாலும் அம்புகளாலும் ஆனது என்றால் முகாமிற்குள்ளான வாழ்க்கையை நரகம் என்று சொல்லலாம்.அந்த அளவிற்கு மிக மோசமாகவும் இன்னொரு கொடுமைகளும்தான் அங்கு நடக்கிறது.
முகாம்களில் இருக்கும் ஒரு சில நிலைகளை அவர்களே கூறியதை நான் இங்கு பதிவு செய்கிறேன்.
திறந்த வெளி சமையலறை, கழிப்பறையிலிருந்து சில மீட்டர்கள் தள்ளி இருக்கிறது.குழந்தைகள் அங்கும் இங்கும்  ஓடிக் கொண்டிருப்பதால் மனிதக்கழிவுகளுக்கு நடுவேதான் நடமாட வேண்டியிருக்கிறது.முகாமில் பலருக்கு வயிற்றுபோக்கு மற்றும் அதிக காய்ச்சளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.வாரத்திற்குஒரு முறை டாக்டர் வருகிறார்.ஆனால் எங்களுக்கு தேவை இருக்கும் போது அவர் வருவதில்லை.


முகாமிலேயே நிறைமாத கர்ப்பிணியான 23 வயதான நூர்நிசா என்ற பெண்மணி குழந்தையை பெற்றெடுத்தாள் .அதனை தொடர்ந்து குழந்தையும் தாயும் சரியான முறையில் கவனிப்பாரற்று கிடக்கும் நிலை.குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதா?என தாயிடம் கேட்டால் அப்பெண்மணி இருகண்களையும் மலங்க மலங்க முளிப்பதையே பதிலாக வைத்துள்ளாள்.


உண்பதர்க்கு உணவுகள் சரியாக கொடுக்கப்பட வில்லை.பருப்பும் சாதமும் கொடுக்கபடுகிறது.ஒரு நபருக்கு 3 நாட்களுக்கு ஒரு கிலோ அரிசி என கொடுக்கபடுகிறது.அதை கொண்டுதான் என்னுடைய உணவையும் எனது 2 குழந்தைகளுக்கும் பங்கிட்டு கொள்கிறோம்.
இவ்வாறான சூழலில்தான் முகாமிற்கு வெளியே சென்றாவது நமக்கு தேவையானதை வாங்கி வருவோம் என்ற ரீதியில் பஜார் பக்கம் சென்றால் 5 முஸ்லிம்கள் மங்கோலிய பஜாரில் அடித்தே கொல்லப்பட்டிருக்கின்றனர்.


அங்கு உள்ள அரசு பற்றி அகதிகள் முகாம்களில் உள்ள மக்களின் மனநிலையில் எவ்வாறு பதிந்துவிட்டது என்றால் "எவ்வளவு வேதனையாக இருந்தாலும் பரவாயில்லை முகாமிற்குள் இருந்தால் உயிரோடாவது இருப்போம் வெளியே சென்றால் செத்து விடுவோம் என்ற அச்சம் மேலோங்கி இருக்கிறது.அரசாங்கம்
பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளித்தாலும் கூட நாங்கள் இந்த முகாமை விட்டு போக மாட்டோம்.நாங்கள் இந்த அரசை நம்ப மாட்டோம்.அது போடோக்கள் பக்கம் இருக்கிறது.ஒரு சிறிய அறையில் 15 பேருக்கு இடையில் நான் தங்கியிருப்பது ஒரு பாதுகாப்பாக நான் உணர்கிறேன்.வெளியில் இருக்கும் நிலத்தை விட என்னுடைய உயிர் எனக்கு வேண்டும் என்கிறார்கள்.


இப்பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கமும் போடோலாந்து தலைவர்களும் எடுத்து கொண்ட விசயங்கள் இன்னும் வேடிக்கையாக இருக்கிறது.
முஸ்லிம்களுக்கு அகதிகள் முகாமிலிருந்து விடுவிப்பு கொடுத்து மறு வாழ்வு அளிக்கப் பட வேண்டுமெனில் முஸ்லிம்களின் நில ஆவணங்களின் மூலம் சரிபார்க்க பட்டும் 2011ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலும் மாநில அரசு அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் என்பதே.


78வயதான மன்சூர் அலி என்ற அஸ்ஸாமியர் கூறுகிறார்"எனது நில ஆவணங்கள் கலவரத்தில் எரிக்க பட்டுவிட்டது அதனால் என்னால் நிருபிக்க முடியாது ஆனால் எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது என்கிறார்".


போடோ தலைவர் ஒருவர் கூறுகிறார் "வாக்காளர் பட்டியலில் இடம் பிடிப்பது என்பது அஸ்ஸாமில் ரொம்ப எளிதானது அவர் உண்மைதான் சொல்கிறார் என்பதை எப்படி நிருபிப்பார்கள்?" என்று.
கலவரங்களை ஏற்படுத்துவார்கள்
 அதன் மூலமாக எனது நில ஆவணங்களை எரிப்பார்கள்,
வாக்காளர் அட்டையை எரிப்பார்கள்,
குடும்ப அட்டையை எரிப்பார்கள்,
எனது வீட்டை எரிப்பார்கள் முடிவில் இதெல்லாம் இருந்தால்தான் நீ இந்தியன் என்பார்கள்???????????


யாருக்கு என்ன நடந்தால் எனக்கென்ன.எனக்கு என் நாற்காளி முக்கியம் என்ற கேடுகெட்ட அரசியல் கொள்கையின் அடிப்படையில் ஆட்சியாளர்கள் அடுத்த இலக்கை நோக்கி நகர ஆரம்பித்து விட்டார்கள்.


ஆம் அடுத்த மக்களவை தேர்தலில் தனது முஸ்லிம் வாக்கு வங்கியை [தேர்தல் வரை முஸ்லிம்கள் வந்தேறிகள் தேர்தல் சமயம் மட்டும் இந்தியர்கள்] இந்தகலவரம் பாதித்து விடும் என்று கட்சி அஞ்சுகிறது.அதற்காக அதனை சரிபடுத்தும் விதத்தில் உயிரோடிருக்கும் முஸ்லிம் வாக்குகளை தேர்தல் வரை உயிரோடுமீட்டெடுக்கும் களப்பணியாளர்களை நியமித்து இருக்கிறது.

பாதிக்கபட்டவன் மீண்டும் தயாராகிறான் யாருக்கு வாழ்க?வாழ்க? கோஷம் போடலாம் என எதிர்பார்த்தவனாய்???????????