நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 14 ஜனவரி, 2012

பா.ஜ.க-அ.தி.மு.க:ஒரே எண்ணத்தை கொண்டுள்ளன – அத்வானி பெருமிதம்


சென்னை : ஜெயலலிதாவால் ‘செல்க்டீவ் அம்னீஷியா’ என புகழாரம் சூட்டப்பட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எல்.கே.அத்வானியும், குஜராத் 

முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியும் பார்ப்பன பாசிச ஏஜண்ட் சோ. ராமசாமியின் பத்திரிகையான துக்ளக்கின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினர்.

இஃவான்களை எதிர்கொள்ள ஸலஃபிகள் தயாராகிறார்கள்


கெய்ரோ : புதிய பாராளுமன்றத்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதிக்கத்தை தடுப்பதற்கு முக்கிய ஸலஃபி அரசியல் கட்சியான அந்நூர் இதர கட்சிகளை அணுகி வருகிறது.

ஆனால், ஸலஃபி அமைப்புகளுடன் மேற்கத்திய சார்பு கொள்கையை கொண்ட கட்சிகளால் கூட்டணியை ஏற்படுத்துவது சிரமம் என கருதப்படுகிறது.

முஸ்லிம்கள் என்றால் ஏமாளிகளா?


மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்றால் இந்தியாவில் வாழும் மிகப்பெரும் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்கு எல்லா பக்கமும் அடிதான் விழுந்துக் கொண்டிருக்கிறது.

பாசிச பயங்கரவாதம், அரசு பயங்கரவாதம், ஊடக பயங்கரவாதம் என பல தரப்பட்ட தாக்குதல்களை சந்திக்கும் துயரமான நிலைக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தம்: போர் சூழலை எதிர்கொள்ள தயாராகும் அமெரிக்கா


வாஷிங்டன் : அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானை தாக்குவதற்கு முயற்சியை இஸ்ரேல் துவக்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் ஈரானை தாக்க இருப்பதை முன்னிட்டு வளைகுடா பகுதியில் தங்களின் தளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. இச்செய்தியை வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

தலிபான்களின் உடல் மீது சிறுநீர் கழிக்கும் அமெரிக்க கடற்படை வீரர்கள்


கொல்லப் பட்ட தலிபான் உடல்கள் தரையில் கிடத்தப் பட்டு அதன் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சி யூ டியூப்பில் வெளியாகியுள்ளது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

அமெரிக்க வீரர்களின் இச்செயலைக் கண்டித்து அமெரிக்க இஸ்லாமிய நல்லுறவு கவுன்சில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனட்டாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. போர் விதிமுறைகளை மீறும்

வெளிநாடு வாழ் இந்தியர்களை(NRI) பதறவைத்த புரளிச் செய்தி


மும்பை : வெளிநாடுகளில் வசிக்கும்  இந்தியர்களின் உலகளாவிய வருமானத்தில் 30 சதவீத வரியை இந்திய அரசு விதித்துள்ளதாக இணையளங்களிலும், மின்னஞ்சல்களிலும் உலா வந்த புரளிச் செய்தி என்.ஆர்.ஐக்களை பதறவைத்தது.

ஜெ பெக்(jpeg)இமேஜ் வடிவிலான இச்செய்தி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி வெளியானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்நாளிதழில் இதுத்தொடர்பான எச்செய்தியும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த உடல்களை கொண்டுவர தீர்மானித்தது மோடியாக இருக்கலாம் – ஸதாஃபியா வாக்குமூலம்


அஹ்மதாபாத் : கோத்ரா ரெயில் தீவைப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அஹ்மதாபாத்திற்கு கொண்டுவர முதல்வர் மோடி தீர்மானித்திருக்கலாம் என குஜராத் முன்னாள் அமைச்சர் 

கோர்டன் ஸதாஃபியா நானாவதி கமிஷன் முன்னால் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை அவமதிக்கும் நிகழ்ச்சி: பி.பி.சி மீது இந்திய ஹைக்கமிஷன் புகார்


லண்டன் : இந்தியாவையும், இந்தியர்களை அவமதிக்கும் பி.பி.சி செய்தி அலைவரிசையின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டனில் இந்திய ஹைக்கமிஷன் சேனல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது.

ஜெரமி க்ளார்க்ஸனின் ‘டாப் கியர்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஹைக்கமிஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி அலைவரிசை நிபந்தனையின்றி மன்னிப்புக்கோர வேண்டும் எனவும், இதற்கு காரணமானவர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் இந்திய ஹைக்கமிஷனின் உயர் அதிகாரி பி.பி.சியிடம் நேரடியாக அளித்த புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளி, 13 ஜனவரி, 2012

சமூக இணையதளங்கள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி


புதுடெல்லி : 21 சமூக இணையதளங்கள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஃபேஸ்புக், கூகிள், யாஹு, மைக்ரோஸாஃப்ட் ஆகிய இணையதளங்கள் இதில் அடங்கும்.

டெல்லி மாநகர மாஜிஸ்திரேட் சுதேஷ்குமார் முன், மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘தேசிய

இஸ்ரேல்-இந்தியா ஒப்பந்தம்: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்


புதுடெல்லி : தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை பலப்படுத்த வேண்டும் என்ற பெயரால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்துள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.

இதுத்தொடர்பாக அவ்வமைப்பின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அத்வானி, மோடி இன்று சென்னை வருகை


சென்னை : பா.ஜ.கவின் ரதயாத்திரை புகழ் எல்.கே.அத்வானியும், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியும் இன்று சென்னை வருகின்றனர்.

தமிழகத்தில் பாசிஸ்டுகளின் ஏஜண்டாக செயல்பட்டுவரும் ‘சோ’ ராமசாமியின் துக்ளக் பத்திரிகையின் 43-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருவரும் வருகை தருகின்றனர். சிங்கப்பூரில் சிகிட்சை முடிந்து சென்னையில் ஓய்வெடுக்கும் நடிகர் ரஜினிகாந்தை இருவரும் சந்திப்பார்கள் என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரவுடி நாடான இஸ்ரேலின் கருவியாக இந்தியா செயல்படக்கூடாது!

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையைப் பலப்படுத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இஸ்ரேலுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சர்வதேச அளவில் தீவிரவாத செயல்களுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் இஸ்ரேலுடன் இத்தகைய ஒப்பந்தம் செய்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. துரதிஷ்ட வசமாக‌ நம்முடைய அரசு அமெரிக்கா மற்றும் அதனின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலின் கடுமையான கொள்கையை செயல்படுத்தும் கருவியாக செயல்பட்டு வருகின்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்த இருகின்ற போராட்டம் குறித்து பத்திரிக்கையில் வந்த செய்திகள்




வியாழன், 12 ஜனவரி, 2012

கடையநல்லூரில் இன்று முதல் ஆட்டு இறைச்சிக்கு தடை!!


கடையநல்லூரில் கடைகளில் விற்கப்படும் ஆட்டு இறைச்சி  பொதுவாக ஓர் இடத்தில வைத்து அறுக்கப்பட்டு அந்தந்த கடை உரிமையாளர்களால்  விற்பனையாகின்றன. இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய  பகுதியான கடையநல்லூரில் இறைச்சி போன்ற அசைவ உணவுகளை ஹலாலான முறையில் உண்பதே வழக்கம்.
    


ஆகவே ஆடுகள் அறுக்க கூடிய இடங்களில் ஊர் ஜமாத்தின் சார்பில் ஒருவரை நியமித்து ஆடுகள் ஹலால் முறையில் அறுக்கபட்டு விநியோகிக்க படுகிறதா என்று


முழி பிதுங்கும் சங்கப்பரிவாரங்கள்



வேலியில் மேய்ந்த‌ ஓநாணை எடுத்து எதற்குள்ளோ விட்ட கதையாகிப்போனது சங்கப்பரிவாரங்களின் தற்போதைய நிலை. ஆம்! கர்நாடக மாநிலத்தில் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய தேசியக்கொடியை மதிக்காத, அதனை தேசியக்கொடியாக அங்கீகரிக்காத பண்டார பரதேசிகளான சங்கப்பரிவார கும்பல்கள் பாகிஸ்தான் நாட்டுக்கொடியை ஏற்றி விட்டு தற்போது ஆப்பசைத்த குரங்காக முழி பிதுங்கி திரிந்து கொண்டிருக்கிறார்கள்.


சுதந்திர தினத்தை கொண்டாட சட்டரீதியான போராட்டம் தொடரும்..

சுதந்திர தினத்தை கொண்டாட சட்டரீதியான போராட்டம் தொடரும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் 11.01.2012 அன்று மதுரையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


சுதந்திர தினத்தை கெளரவிக்கும் விதமாகவும், தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, இரத்தம் சிந்திய தியாகிகலை போற்றும் விதமாகவும், பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் விதமாகவும்,

புதன், 11 ஜனவரி, 2012

நீதியை அடுத்த நஷ்ட ஈடும் மறுக்கப்படுகிறது


ஹைதரபாத் :  போலி வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு காவல்துறையினரால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு நீதியை போன்று தற்போது நஷ்டஈடும் மறுக்கப்பட்டுள்ளது. 
 

பசுபதி பாண்டியனின் படுகொலை! SDPI மாநில தலைவர் கண்டனம் !




நோ மொ ஃபோபியா(No-mo-phobia)


நோ மொ ஃபோபியா என்றால் நோ மொபைல் ஃபோபியா என பொருள். மொபைல் ஃபோனை உடன் எடுத்துச் செல்ல மறத்தல், மொபைல் ஃபோனின் பேட்டரி ரிப்பயர் ஆகுதல், சார்ஜ் தீர்ந்து போதல் ஆகிய வேளைகளில் ஏற்படும் கவலைதான் நோ மொ ஃபோபியா ஆகும். இக்கவலை வளர்ந்து வளர்ந்து மனோ நோயாக மாறிவிடுமாம்.

சாதாரணமாக இதற்கெல்லாம் யாரும் சிகிட்சையோ, கவுன்சிலிங்கோ பெறுவதில்லை.

ஆந்திராவில் 40 முஸ்லிம் இளைஞர்கள் கைது


ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் நகரில் 40-க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை தார்மீக(Moral) போலீசாக செயல்பட்டதாகக் கூறி ஆந்திர காவல்துறை கைது செய்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட 40 இளைஞர்கள் மீதும் கடுமையான குற்றப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைதுக்குப் பின் அவர்களை காவல்துறையினர் அவர்களை கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர்.

உலக பயங்கரவாதிகளோடு உறவாடும் இந்தியா!


ஜெருசலம் : மத்தியக் கிழக்கில் பயங்கரவாதத்தை விதைத்து ஃபலஸ்தீன் மக்களின் நிலங்களை அபகரித்து மண்ணின் மைந்தர்களை அகதிகளாக்கி வரும் இஸ்ரேலுக்கு இந்தியாவின் சைபர் நகரமான பெங்களூரில் தூதரகத்தை திறக்க தாராள மனசுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்தர் லிபர்மனும் நடத்திய பேச்சுவார்த்தையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஊட்டச்சத்துக் குறைவு:தேசிய அவமானம் – மன்மோகன்


புதுடெல்லி:இந்தியாவில் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் பிறப்பது தேசத்திற்கே அவமானம் என பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுடன் குழந்தைகள் பிறப்பு ஆகியவற்றிற்கு எதிரான குடிமக்கள் அமைப்பின் ஆய்வு அறிக்கையை டெல்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார் அவர்.

செவ்வாய், 10 ஜனவரி, 2012

கூடா நட்பு கேடாய் முடியும்


இஸ்ரேல் – ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடு இல்லாத நாடு, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பல முறை மீறிய நாடு, அப்பாவி குழந்தைகளை குறிவைத்து கொலை செய்வதில் வல்லவர்கள், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 

உதவி செய்ய வரும் நிவாரண குழுக்களை சர்வதேச எல்லையில் வைத்து தாக்குபவர்கள் என பல விரும்பத்தகாத சிறப்புகளை கொண்ட நாடு. இந்த நாடு உருவாகிய விதமும் அதனை பாதுகாக்க இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளின் கடும் கண்டனத்தை சந்தித்து வருகின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் மத்திய ஆசியாவின் கேன்சர் தான் இஸ்ரேல்.

பு அஸீஸி மாதிரியில் மீண்டும் துனீசியாவில் தற்கொலை


துனீஸ் : ஜனநாயக புரட்சிக்கு காரணமான நடைபாதை காய்கறி வியாபாரி முஹம்மது பு அஸீஸியின் தற்கொலையை போன்று மீண்டும் ஒரு சம்பவம் துனீசியாவில் நிகழ்ந்துள்ளது.

அம்மார் கர்ஸல்லா என்ற 48 வயது நபர் தென்மேற்கு துனீசியாவில் தீவைத்து தற்கொலைச் செய்துள்ளார்.
வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர்கள் குழுவை சந்திக்க அனுமதிக்காததால் கர்ஸல்லா பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தற்கொலைச் செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடுமையான தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ஸல்லா நேற்று மரணமடைந்தார்.
மரண செய்தி வெளியானதை தொடர்ந்து துனீசியாவின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே எதிர்ப்பு வலுத்தது.

ஸ்ரீராமசேனாவை தடைச்செய்ய எதிர்கட்சிகள் கோரிக்கை


பிஜாப்பூர் : கர்நாடகா மாநிலம் பிஜாப்பூரில் தாசில்தார் அலுவலக வளாகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய ஸ்ரீராமசேனாவை தடைச் செய்யவேண்டும் என கர்நாடாகா மாநிலத்தில் பல்வேறு எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளன.

முஸ்லிம்களுக்கு உள் இடஒதுக்கீடு(Reservation): குர்ஷிதின் மனைவிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்


புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலம் ஃபாரூக்காபாத் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷிதின் மனைவியுமான லூயிஸ் குர்ஷிதிற்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு வேலைகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டில் 9

நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் SDPI கடும் கண்டனம்



சில நாட்களுக்கு முன்பு நக்கீரன் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில், முதல்வரைப்பற்றி விமர்சிக்கப்பட்டிருந்தது என்று காரணம் காட்டி நக்கீரன் பத்திரிகை அலுவலகம் பல முறை தாக்கப்பட்டிருப்பதும், நக்கீரன் பத்திரிகை அலுவலகத்திற்கான மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது.

திங்கள், 9 ஜனவரி, 2012

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்பாட்டம்



முஸ்லிம்களுக்கு மாநில அளவில் உள்ள இட ஒதுக்கீடை உயர்த்த கோரியும் ,மத்திய அளவில் இடஒதுக்கீடு அளிக்க கோரியும் மாபெரும் கண்டன பேரணி மற்றும் ஆர்பாட்டம் நெல்லை உட்பட தமிழகத்தில் ஐந்து பகுதிகளில் நடைபெற இருக்கிறது .

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான போராட்டம்!



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு ஜனவரி 6,7 ஆகிய தேதிகளில் தேனியில் மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.