நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 13 ஜனவரி, 2012

சமூக இணையதளங்கள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி


புதுடெல்லி : 21 சமூக இணையதளங்கள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஃபேஸ்புக், கூகிள், யாஹு, மைக்ரோஸாஃப்ட் ஆகிய இணையதளங்கள் இதில் அடங்கும்.

டெல்லி மாநகர மாஜிஸ்திரேட் சுதேஷ்குமார் முன், மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘தேசிய
ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் மற்றும் இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டும் வகையிலான தகவல்கள் மற்றும் செய்திகளை சமூக வலைதளங்கள் வெளியிட்டுள்ளன. இந்த வகையில், 21 வலைதளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153-ஏ, 153-பி மற்றும் 295-ஏ போன்றவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். சமூக வலைதளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்கும் அதிகாரியும், அவற்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் பரிசீலித்து விட்டார். அதில், அவர் திருப்தி அடைந்துள்ளார்.’ இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பத்திரிகையாளர் வினய் ராய் என்பவர், டெல்லி மாநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “சில சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான தகவல்கள், படங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த வலைதளங்களில் வெளியாகும் ஆட்சேபகரமான தகவல்கள் மற்றும் படங்களால், சமூகத்துக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இதுபோன்ற ஆட்சேபகரமான தகவல்களை வெளியிடும் வலைதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, மாஜிஸ்திரேட் சுதேஸ் குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. பேஸ்புக் இந்தியா வலைதளம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, “இந்த விவகாரம், டில்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வரும் 16ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களும், தற்போது எங்களிடம் இல்லை. எனவே, இந்த மனு மீதான வழக்கை, இன்று ஒரு நாள் மட்டும் ஒத்தி வைக்க வேண்டும்’ என்றார். இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,”இந்த மனு மீதான அடுத்த விசாரணை, வரும் மார்ச் 13-க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட வலைதள நிர்வாகிகள், அடுத்த விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்புவதற்கு கோர்ட் உத்தரவிடுகிறது.’ என கூறினார்.