சென்னை : ஜெயலலிதாவால் ‘செல்க்டீவ் அம்னீஷியா’ என புகழாரம் சூட்டப்பட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எல்.கே.அத்வானியும், குஜராத்
முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியும் பார்ப்பன பாசிச ஏஜண்ட் சோ. ராமசாமியின் பத்திரிகையான துக்ளக்கின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் அத்வானி பேசியது: ‘பாஜக-வுக்கும் அதிகமுக-வுக்கும் இடையே இயற்கையான கூட்டணி அமைந்துள்ளது என்பதை ஆரம்பம் முதலே கூறி வருகிறேன்.தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் அதிமுக நேரடியாகக் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை என்றபோதும், நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் இரு கட்சிகளின் ஒற்றுமையும் மேலோங்கி வருகிறது.
இவ்வாறு கூறுவதால், ஏதாவது அரசியல் தந்திரம் உள்ளதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். பல்வேறு விவகாரங்களில் இரண்டு கட்சியும் ஒரே கருத்தை, எண்ணத்தைக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.
ஜெயலலிதா, நரேந்திர மோடி போன்ற வெளிப்படையான தலைவர்கள்தான் நம்முடைய நாட்டுக்கு இப்போது தேவை’ என்றார்.
பாசிச ஹிந்துத்துவம், பார்ப்பணீயம் ஆகியவற்றில் சில வேளைகளில் பா.ஜ.கவையும் மிஞ்சும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர் ஜெயலலிதா. அதனடிப்படையில் அத்வானி இவ்வாறு கூறியிருக்கலாம்.