ஜெருசலம் : மத்தியக் கிழக்கில் பயங்கரவாதத்தை விதைத்து ஃபலஸ்தீன் மக்களின் நிலங்களை அபகரித்து மண்ணின் மைந்தர்களை அகதிகளாக்கி வரும் இஸ்ரேலுக்கு இந்தியாவின் சைபர் நகரமான பெங்களூரில் தூதரகத்தை திறக்க தாராள மனசுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்தர் லிபர்மனும் நடத்திய பேச்சுவார்த்தையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
புதுடெல்லி மற்றும் மும்பையில் தற்பொழுது இஸ்ரேலுக்கு தூதரகங்கள் உள்ளன.பெங்களூரில் தூதரகம் திறக்க அனுமதி வழங்கிய எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட இந்திய பிரதிநிதிக் குழுவிற்கு லிபர்மன் நன்றியை தெரிவித்தார். இத்தீர்மானம் இரு நாடுகளிடையே வர்த்தக உறவை மேம்படுத்த உதவும் என்றும், இந்தியாவும், இஸ்ரேலும் தூதரக உறவை துவக்கி 20 ஆண்டுகளை கழிந்த சூழலில் இச்செய்தி மகிழ்ச்சியை அளிப்பதாக லிபர்மன் தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் பெங்களூரில் பல்வேறு ஹைடெக் துறை பிரதிநிதிகள் தூதரகத்தை திறப்பதற்கான தீர்மானத்தை வரவேற்றனர்.
இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினருக்கான இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு அளிப்போம் என இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸ், கிருஷ்ணாவிடம் தெரிவித்தார்.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவது தங்களின் விருப்பமும் ஆகும் என பெரஸ் கூறினார்.
சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளதாக எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு இதனை கிருஷ்ணா அறிவித்தார்.
இந்த உலகில் பல ஆண்டுகளாக மனிதன் நிம்மதியற்ற வாழ்வை சந்தித்து வருகிறான். மனித இனப்படுகொலைகள், குண்டுவெடிப்புகள், தீவிரவாத செயல்கள், மனிதனின் வாழ்வை சீரழிக்கும் அணு உலைகள் என பல்வேறு காரணங்களால் இன்றைய உலகம் சின்னாபின்னாமிக்கொண்டிருக்கி றது. இத்தகை நிகழ்வுக்கெல்லாம் முதற்காரணமாகவும் உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக திகழ்ந்து கொண்டிருக்கும் இஸ்ரேலுடன் நமது இந்தியா நாடு உறவாடிக்கொண்டிருப்பதை பார்த்தால் தேசத்தின் மீது அக்கறை கொண்ட மனிதனின் உள்ளத்தில் கவலைகள் உதிக்காமல் இருப்பதில்லை.
எதிர்காலத்தில் இந்தியா இஸ்ரேல் உடனான உறவுகளை வலுப்படுத்துவதற்காகவும், தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காகவும் என்று கூறி கடந்த செவ்வாய்கிழமை அன்று இருதரப்பு வெளியுறவுக்கொள்கையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும் சிறந்த கலாச்சாரத்தை கொண்ட நாடு என்று புகழ்ந்த இஸ்ரேலிய பிரதமர் சிம்மோன் பியர்ஸ் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடத்தை பெற்றுத்தருவதற்கு முயற்ச்சித்து வருகிறார்.
வெளிஉறவுத்துறை அமைச்சர் எஸ்.எஸ். கிருஷ்ணா சமீபத்தில் இஸ்ரேலிய வெளிஉறவுத்துறை அமைச்சரையும் அந்நாட்டு துணை பிரதமரையும் சந்தித்து பேசினார். அதில் வர்த்தக சாகுபடி, முதலீடு, தீவிரவாத எதிர்ப்பு தாக்குதல், உலக நிதி நெருக்கடி போன்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா இஸ்ரேலுக்கிடையே தண்டனை கைதிகள் பிரிமாற்ற உடன்படிக்கையிலும் கையெழுத்திடப்பட்டது.
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மாநிலமும் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நகரமான பெங்களூரில் இஸ்ரேல் தனது தூதரகத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இரண்டு நாடுகளுக்குமிடையே போடப்பட்ட உடன்படிக்கைகள் இன்னும் விரிவடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
11 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஒரு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் பிரதமரை சந்தித்து பல உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
இந்த உலகில் பல ஆண்டுகளாக மனிதன் நிம்மதியற்ற வாழ்வை சந்தித்து வருகிறான். மனித இனப்படுகொலைகள், குண்டுவெடிப்புகள், தீவிரவாத செயல்கள், மனிதனின் வாழ்வை சீரழிக்கும் அணு உலைகள் என பல்வேறு காரணங்களால் இன்றைய உலகம் சின்னாபின்னாமிக்கொண்டிருக்கி