பு அஸீஸி மாதிரியில் மீண்டும் துனீசியாவில் தற்கொலை
துனீஸ் : ஜனநாயக புரட்சிக்கு காரணமான நடைபாதை காய்கறி வியாபாரி முஹம்மது பு அஸீஸியின் தற்கொலையை போன்று மீண்டும் ஒரு சம்பவம் துனீசியாவில் நிகழ்ந்துள்ளது.
அம்மார் கர்ஸல்லா என்ற 48 வயது நபர் தென்மேற்கு துனீசியாவில் தீவைத்து தற்கொலைச் செய்துள்ளார்.
வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர்கள் குழுவை சந்திக்க அனுமதிக்காததால் கர்ஸல்லா பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தற்கொலைச் செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடுமையான தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ஸல்லா நேற்று மரணமடைந்தார்.
மரண செய்தி வெளியானதை தொடர்ந்து துனீசியாவின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே எதிர்ப்பு வலுத்தது.