நோ மொ ஃபோபியா என்றால் நோ மொபைல் ஃபோபியா என பொருள். மொபைல் ஃபோனை உடன் எடுத்துச் செல்ல மறத்தல், மொபைல் ஃபோனின் பேட்டரி ரிப்பயர் ஆகுதல், சார்ஜ் தீர்ந்து போதல் ஆகிய வேளைகளில் ஏற்படும் கவலைதான் நோ மொ ஃபோபியா ஆகும். இக்கவலை வளர்ந்து வளர்ந்து மனோ நோயாக மாறிவிடுமாம்.
சாதாரணமாக இதற்கெல்லாம் யாரும் சிகிட்சையோ, கவுன்சிலிங்கோ பெறுவதில்லை.
என்ன டெக்னாலஜி என்றாலும் அதில் நன்மையும், தீமையும் உண்டு. மனிதர்களின் குணநலனின் அடிப்படையில்தான் அதிகமாக பாதகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இளம் பெண்களை காதல் வலையில் சிக்கவைப்பதில் பெற்றோரால் வாங்கி கொடுக்கப்படும் மொபைல் ஃபோன்களும் அதிக பங்கை வகிக்கிறது.குழந்தைகள் 15 வயதாகும்வரை அவர்களுக்கு மொபைல் ஃபோன்களை வாங்கிக் கொடுக்காதீர்கள் என லண்டனில் இண்டிபெண்டண்ட் ஸ்கூல்ஸ் கவுன்சில் சேர்மன் பர்னபி லினன் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கம்ப்யூட்டர் உபயோகத்தை ஒன்று அல்லது இரண்டு மணிநேரமாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் லினன் கூறுகிறார். கட்டுப்பாடில்லாத கம்ப்யூட்டர் பயன்பாடு குழந்தைகளின் வாசித்தல் மீதும், உரையாடல் மீதும் வெறுப்பை உருவாக்குகிறது. இதனால் அவர்களின் ஆளுமைத் தன்மை(personality) பாதிப்படைகிறது.
தொலைக்காட்சியை பார்ப்பதிலும் கட்டுப்பாட்டை ஏற்படுத்துதல் அவசியம். இதுவெல்லாம் ஐரோப்பாவிற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் பொருந்தும். ஏனெனில் உலகில் மொபைல் ஃபோன் பயனீட்டாளர்களில் ஐந்தில் ஒருவர் இந்தியர் ஆவார். மூன்று வருடத்திற்குள் மொபைல் டிஜிட்டல் சமூகத்தில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என கருதப்படுகிறது.
ஆகையால் குழந்தைகள் டெக்னாலஜியின் அடிமைகளாக மாறிவிடாமல் பாதுகாக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும்.