நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

சங்கப்பரிவாரங்கள கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பேரணி


கூர்க் (கர்நாடகா) :  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கர்நாடக மாநில கூர்க் மாவட்டத்தின் கிளை சார்பாக பாகிஸ்தான் கொடியை ஏற்றிய சங்கப்பரிவாரங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.

protest in Coorg
கடந்த வெள்ளிக்கிழமை அன்று துணை ஆணையர் அலுவலகம் முன்பு மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சங்கப்பரிவாரங்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மத்திய மற்றும் மாநில அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தாங்களாகவே பாகிஸ்தான்  நாட்டுக்கொடியை தாசில்தார் அலுவலகத்தில் வைத்து ஏற்றிவிட்டு இதனால வரை முஸ்லிம்கள் மீது வீண்பழி சுமத்தி பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் இன்று அவர்களே செய்து விட்டு பழியை முஸ்லிம்கள் மீது சுமத்தியுள்ளனர் என்பது தெரியவந்திருக்கிறது. இவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டு அதன் மூலம் வகுப்பு வாத கலவரங்களை தூண்டுவதற்காகவே இவ்வாறு செய்திருக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் துவக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட தலைவர் கே.பி அஃப்சர், எஸ்.டி.பி.ஐயின் மாவட்ட தலைவர் ஃபஜலுல்லாஹ், செயலாளர் அமீன் முஹ்சீன் மற்றும் செயலாளர் தம்லிக் தாரிமி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
 

protest in Coorg