மும்பை : வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் உலகளாவிய வருமானத்தில் 30 சதவீத வரியை இந்திய அரசு விதித்துள்ளதாக இணையளங்களிலும், மின்னஞ்சல்களிலும் உலா வந்த புரளிச் செய்தி என்.ஆர்.ஐக்களை பதறவைத்தது.
ஜெ பெக்(jpeg)இமேஜ் வடிவிலான இச்செய்தி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி வெளியானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்நாளிதழில் இதுத்தொடர்பான எச்செய்தியும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் உலகாளாவிய(worldwide incom) வருமானத்தில் 30 சதவீத வரிவிதிக்கப்படும் தகவலை வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவிகடந்த வாரம் ஜெய்ப்பூரில் நடந்த பிரவாசி பாரதீய திவஸ்(PMD)யில் வெளியிட்டதாகவும் அந்த புரளிச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.