நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 14 ஜனவரி, 2012

தலிபான்களின் உடல் மீது சிறுநீர் கழிக்கும் அமெரிக்க கடற்படை வீரர்கள்


கொல்லப் பட்ட தலிபான் உடல்கள் தரையில் கிடத்தப் பட்டு அதன் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சி யூ டியூப்பில் வெளியாகியுள்ளது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

அமெரிக்க வீரர்களின் இச்செயலைக் கண்டித்து அமெரிக்க இஸ்லாமிய நல்லுறவு கவுன்சில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனட்டாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. போர் விதிமுறைகளை மீறும் வகையில் அமெரிக்க கடற்ப படை  வீரர்கள் செயல்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது. அநாகரிகமானது என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வீடியோ காட்சி குறித்தும் அதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் பற்றி தெரிவித்த பெண்டகன் மற்றும் அமெரிக்கக் கடற்ப் படை செய்தித் தொடர்பாளர்கள் ”இந்தக் காட்சியை வீடியோ எடுத்து  இணையதளத்தில் வெளியிட்டது யார்  என்பது தெரியவில்லை.

போர் விதிமுறைகளில் மிகவும் கண்ணியம், நேர்மையை பின்பற்றும் நாடு அமெரிக்கா. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இணையதளத்தில் வெளியான இக்காட்சி உண்மையெனில் பாரபட்சமின்றி அமெரிக்க வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக அண்மையில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவுக்கு அமெரிக்கா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் அமெரிக்கா கடற்ப் படை வீரர்கள் குறித்த விடீயோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.