நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 21 ஏப்ரல், 2012

நகர் மன்றத்தில் சுகாதரத்துரை இணை இயக்குனரை SDPI-யினர் முற்றுகை

கடையநல்லூரில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பரவி வரும் மர்ம காய்ச்சல் இவ்வருடமும் பரவி சில உயிர்களை பலி கொண்டுள்ளது. தொடரும் இந்த நிலை குறித்து இன்று(21-04-2012) சுகாதாரத்துரை இணை இயக்குனரை நகர்மன்ற வளாகத்தில் வைத்து நகர கவுன்சிலர்களை மத்தியில் ஆலோசனை செய்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று SDPI மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.

பரவி வரும் காய்ச்சல் எந்த வகையானது என்றும், அதற்கான மருந்துமுறைகளை சுகாதாரத்துரையால் ஏன்? இதுவரை அறிவிக்கப்படவில்லை என்ற பல வகையான பல கோணங்களில் எஸ்.டி.பி-யினர் எழுப்பினர். சுகாதாரத்துறை இணை இயக்குனர் கொப்புளி முகம்மது மீறான் பதிலளித்தார். எனினும் திருப்தியான நடவடிக்கையும்,பதிலும் கிடைக்காதலால் கீழ் கண்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்து கோஷமிட்டவாறு கலைந்து சென்றனர்.

கோரிக்கைகள்

1. பல வருடமாக பரவி வரும் காய்ச்சல் எந்த வகையானது என ஆய்வு முடிவுகளோடு அறிவிக்க வேண்டும்.

நீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வந்தடைந்தது


சென்னை: தீவிரவாதத்திற்கு எதிராகவும், அப்பாவி இளைஞர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் " நீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை" என்ற தலைப்பில் மனித உரிமை அமைப்புகளின் சார்பில் ஏப்ரல் 12ம் தேதி புதுடெல்லி பட்லா ஹவுஸில் தொடங்கிய இந்த பிரச்சார யாத்திரை உத்திரபிரதேசம், போபால், மஹாராஷ்டிரா, கர்நாடகா வழியாக கடந்த 19ஆம் தேதி சென்னை வந்தடைந்தது. 

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களின் சந்திப்பு நடைபெற்ற பின்பு, அன்று மாலை 7 மணியளவில் சென்னை மண்ணடியிலுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமை அலுவலகத்தில் என்.சி.ஹெச்.ஆர்.ஓ சார்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

திரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக்கை


பட்டி தொட்டி எங்கும் பாமரன் முதல் பட்டணத்தில் இருக்கும் பட்டதாரிகள் வரை அனைவரையும் தன் வசம் வைத்திருப்பது தான் திரையுலகத்துறை. அப்பேற்பட்ட திரைத்துறையின் சாதனைகளில் சில,

1. மூடப்பழக்கவழக்கங்களில் சிக்குண்ட மூதாதையர்களின் மெளட்டீகங்களை அடையாளபப்டுத்தும் பகுத்தறிவு கண்ணை  திறந்தது தான் திரைத்துறை என்பதை காலத்தின் ஓட்டத்தில் நாம மறந்து விடக்கூடாது.

2. வரலாற்று நாயகர்களை நேரில் பார்க்காத மக்களுக்கு அவர்களை நமது மனக்கன் முன் கொண்டு வந்து நிறுத்தியது திரைத்துறை தான்.

3. கலாச்சார சீரழிவுகள் கட்டுண்டு மனம் போன போக்கில் வாழும் மானுடரை மாற்றி அமைத்து மனிதனாய் வாழ வழி சொல்லியது தான் திரைத்துறை.

இலங்கை:புத்த சாமியார்களின் வெறிச்செயல் – மஸ்ஜித் மீது தாக்குதல் – ஜும்ஆ தொழுவதற்கு தடை!


தம்புள்ளை: இலங்கை தம்புள்ளையில் 50 ஆண்டுகால பழமை வாய்ந்த மஸ்ஜித் மீது புத்த சாமியார்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குண்டுவீசப்பட்டதில் பள்ளிவாசல் சேதமடைந்துள்ளது. நேற்று(வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகையை நிறைவேற்ற முஸ்லிம்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
Buddhist monks vowed to destroy the mosque which was built in the 1960's
புத்தர்களின் புனித ரங்கிரி விகார் அமைந்துள்ள தம்புள்ளையை புனித பூமி என்று புத்த சாமியார்கள் கொக்கரிக்கின்றனர். இங்கு அந்நிய மத வழிப்பாட்டுத் தலங்கள் இருக்கக்கூடாது என்று அச்சுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்தான் வியாழக்கிழமை இரவு பள்ளிவாசலில் குண்டுவீசப்பட்டது. ஆனால் எவருக்கும் அபாயம் இல்லை. மேலும் நேற்று 2000 புத்தச் சாமியார்களும், புத்தர்களும் கலந்துகொண்ட பேரணி தம்புள்ளை நகரில் நடத்தப்பட்டது.

வியாழன், 19 ஏப்ரல், 2012

சமூக மாற்றத்தில் பங்கெடுக்க அழைக்கிறது விடியல் குடும்பம்


இஸ்லாத்தை ஏற்ற இளம்பெண்ணை காரில் கடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் – ஆதரவாக செயல்படும் போலீஸ்!


கொச்சி: இஸ்லாத்தை எவ்வித வற்புறுத்தலும் இன்றி தாமாகவே முன்வந்து தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இளம்பெண்ணை டாடா சுமோ காரில் கடத்திச்செல்ல முயன்ற ஆர்.எஸ்.எஸ் குண்டர்களுக்கு போலீஸ் ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Sarath
கேரள மாநிலம் காயங்குளத்தைச் சார்ந்த நிம்மி என்ற 25 வயது பெண்மணி தாமாகவே முன்வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவர் தனது பெயரை அம்னா என்று மாற்றிக் கொண்டார்.

புதன், 18 ஏப்ரல், 2012

“ச‌ஃபாரே இன்ஸாஃப் ஓ பசார்ய யாத்திரா”


புதுடெல்லி: தீவிரவாதத்திற்கு எதிராகவும் அப்பாவி இளைஞர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “ச‌ஃபாரே இன்ஸாஃப் ஓ பசார்ய யாத்திரா” (நீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான பயணம்) என்ற தலைப்பில் மனித உரிமை அமைப்புகளின் சார்பில் யாத்திரை நடத்தப்படுகிறது.
கடந்த 12-ம் தேதி புதுடெல்லி பாட்லா ஹவுஸ் அருகே தொடங்கிய இந்த யாத்திரை உத்திரபிரதேசம் (ஆக்ரா மற்றும் ஜான்ஸி), போபால் (காந்த்வா, புர்ஹான்பூர் மற்றும் ஜால்கான்), மஹாராஷ்டிரா (மாலேகான், புனே), கர்நாடகா (பெல்கம், ஹூப்லி, பெங்களூர்) வழியாக வருகின்ற 20-ம் தேதி சென்னை வந்தடைகிறது.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் முஸ்லிம் கவுன்சிலர்கள் எண்ணிக்கை உயர்வு!


புதுடெல்லி:டெல்லியில் 3 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் வெற்றிப் பெற்ற முஸ்லிம் கவுன்சிலர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த முறை 11 பேர்களே வெற்றிப் பெற்றனர். ஆனால், இம்முறை 15 பேர் வெற்றிப் பெற்றுள்ளனர்.
MCD
மேலும் வெற்றிப் பெற்றவர்களில் முஸ்லிம் பெண் கவுன்சிலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த முறை 3 முஸ்லிம் பெண்கள் மட்டுமே வெற்றிப் பெற்றனர். இம்முறை 7 பேர் வெற்றிப் பெற்றுள்ளனர்.

குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஜியாவுர் ரஹ்மான் குறைந்த வாக்குகளில் தோல்வி!


புதுடெல்லி:டெல்லி மற்றும் அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு வழக்குகளில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜியாவுர் ரஹ்மான் டெல்லி மாநகராட்சி வார்டு தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.
Abdur Rahman holding a campaign poster of his imprisoned son Ziaur Rahman
தெற்கு டெல்லி மாநகராட்சியில் அமைந்துள்ள ஸாக்கிர் நகர் வார்டில் ஜியாவுர் ரஹ்மான் சுயேட்சையாக போட்டியிட்டார். இவரை எதிர்த்து முக்கியமாக காங். கட்சி சார்பில் சோயப் டேனிஸ் போட்டியிட்டார். நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த வேளையில் சோயப், ஜியாவுர் ரஹ்மானை வெறும் 517 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். சோயப் டேனிஸ் 8194 வாக்குகளையும், ஜியாவுர் ரஹ்மான் 7677 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்


மைசூர்: நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) சார்பாக மைசூர் பேகம் ரஜியா சுல்தான் மேடை (மெஸ்கோ ஐ.டி.ஐ வளாகம்) யில் வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
Anti-Dowry Campaign
வரதட்சனை என்பது கொடிய விஷமாகும், இதனால் சமுதாயமும், பல குடும்பங்களும் சீரழிந்துள்ளது. வரதட்சனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட NWF தேசிய தலைவர் ஷாஹிதா தஸ்னீம் கூறும்ப்போது திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஓர் புதிய உறவாகும். அது மணமக்களை மட்டுமல்லாது அவர்களின் குடும்பங்களை இணைக்கிறது.

ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது!

நெல்லை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக கடந்த 17ம் தேதி (நேற்றையதினம்) கடயநல்லூர் ரஹ்மானியாபுரம் 5 வது தெருவில் வசித்து வரும் ரம்ஜான் என்ற ஏழை பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது. 
கடயநல்லூர் நகர செயலாளர் எஸ். முஹம்மது கனி தையல் இயந்திரத்தை வழங்கிய போது 
ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் வலிமைப்படுத்துவது என்ற லட்சியத்துடன் இயங்கி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் சமூகத்தை மேம்படுத்தக்கூடிய பல பணிகளில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் டி.ஜி.பி


குஜராத்: கடந்த 2002ஆம் வருடம் பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்ற முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தில் முன்னால் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி உட்பட 69 நபர்கள் கொடூரமான முறையில் சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர்.


தனக்கு நீதி கிடைக்க வேண்டுமென இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி கடந்த 10 வருடங்களாக போராடி வருகிறார். இவர் அளித்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக்குழு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. விசாரணையின் இறுதி அறிக்கையை அஹமதாபாத் பெருநகர நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது. அதன் படி விசாரணை மேற்கொண்டு தனது இறுதி அறிக்கையை சமர்பித்தது அக்குழு. அதில் நடைபெற்ற வன்முறைக்கும் நரேந்திர மோடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் இவ்வழக்கை இத்தோடு தள்ளுபடி செய்ய பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

கைது அச்சம்:சி.பி.ஐ அலுவலகம் நோக்கி மார்க்சிஸ்ட் பேரணி!


கொச்சி:கம்யூனிச கொள்கையில் வகுப்புவாத வெறியை கலப்படம் செய்த கேரள மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் என்.டி.எஃப் உறுப்பினர் ஃபஸல் கொலைவழக்கில் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் மத்திய புலனாய்வு துறை அலுவலகம் நோக்கி கண்டன பேரணியை நடத்தியுள்ளனர்.
CPI-M march towards the office of the Central Bureau of Investigation
முஹம்மது ஃபஸல் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தொண்டராக இருந்தவர். அக்கட்சியின் கோணலான கொள்கையால் வெறுப்புற்ற ஃபஸல் என்.டி.எஃபில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இந்நிலையில் ஃபஸலின் மீது கேரள காம்ரேடுகளுக்கு ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக அவர் 2006-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி காலையில் கொலை செய்யப்பட்டார்.

மத்திய அரசின் முஸ்லிம் கல்வி உதவித் தொகையை மறுத்துவிட்டு வக்ஃப் போர்ட் மூலம் வழங்கும் மோடியின் நாடகம்!


அஹ்மதாபாத்: மத்திய அரசின் முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி தொகையை வழங்க மறுத்த குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி குஜராத் மாநில வக்ஃப் போர்ட் மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்க முனைந்துள்ளார்.
modi
2005-ஆம் ஆண்டு துவங்கிய மத்திய அரசு வழங்கும் முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை மோடி அரசு ஒவ்வொரு வருடமும் அதனை வழங்காமல் திருப்பி அனுப்பி வருகிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாய மாணவர்களுக்கு மட்டும் அளிக்கும் கல்வி உதவி தொகை பாரபட்சமானது என்ற காரணத்தை மோடி அரசு கூறுகிறது.

திங்கள், 16 ஏப்ரல், 2012

இன்னும் 3 நாட்களே உள்ளன இட ஒதுக்கீடுக்கான போராட்டத்திற்கு

பேரணி துவங்கும் இடம் :-  பாளை வ.உ.சி மைதானம்.
சேரும் இடம் :- பாளை ஜவஹர் மைதானம்.

பழனியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம்

பழனி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் ஐந்து இடங்களில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டினை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இதற்கான பிரச்சாரம் தமிழகம் முழுவது நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழனியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், மாநில பேச்சாளர் அன்ஸர் இமாம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட்

உலகம் காலணி ஆதிக்கத்தின் பிடியில் சிக்கித்தவித்த காலம் தான் மனிதனின் வரலாற்றில் ஒரு மோசமான கால கட்டம் என்று கூறலாம். காலனி ஆதிக்கம் லட்சக்கணக்கான மக்கலை பலிகொண்டதோடு மட்டுமல்லாமல் பல நாடுகளின் கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும் சீரழித்திருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகள் காலனி ஆதிக்கத்தை விரட்டியடிப்பதற்காக லட்சக்கணக்கான உயிர்களை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. மனிதனின் வரலாற்றில் மோசமான காலகட்டத்தின் அத்தியாயம் இத்தோடு முடிந்துவிட்டது என்று கருதினோம். 
ஆனால் நம்முடைய எண்ணம் தவறானதாகும் என்பது தற்போது புரிகிறது, காரணம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏகாதிபத்திய சக்திகள் இன்றும் நேரடி படையெடுப்பின் மூலமாகவும், ஆயுத பரிமாறுதல் மூலமாகவும், பயங்கரவாத நாடுகளை உருவாக்குவதின் மூலமாகவும் இன்றளவிலும் உலகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்து வருகிறது.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்

சென்னை: சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி வடசென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட சென்னை மாவட்ட தலைவர் எஸ். அமீர் ஹம்ஜா தலைமை தாங்கினார்.
தமிழக மக்களால் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்ற திட்டம் தான் சேது சமுத்திர திட்டம். பொருளாதார ரீதியிலும், வேலை வாய்ப்பிலும் தமிழகத்தை முன்னேறச் செய்யும் இந்த திட்டத்தை முடக்கவும் இதனை செயல்படுத்தவிடாமல் தடுக்கவும் ஃபாசிஸ கும்பல்கள் இராமர் பெயரை உபயோகப்படுத்திக்கொண்டு அந்த மணல் திட்டை இராமர் பாலம் என்றும் அதனை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் எனக்கூறி சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்து வருகின்றனர்.