கடையநல்லூரில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பரவி வரும் மர்ம காய்ச்சல் இவ்வருடமும் பரவி சில உயிர்களை பலி கொண்டுள்ளது. தொடரும் இந்த நிலை குறித்து இன்று(21-04-2012) சுகாதாரத்துரை இணை இயக்குனரை நகர்மன்ற வளாகத்தில் வைத்து நகர கவுன்சிலர்களை மத்தியில் ஆலோசனை செய்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று SDPI மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.
பரவி வரும் காய்ச்சல் எந்த வகையானது என்றும், அதற்கான மருந்துமுறைகளை சுகாதாரத்துரையால் ஏன்? இதுவரை அறிவிக்கப்படவில்லை என்ற பல வகையான பல கோணங்களில் எஸ்.டி.பி-யினர் எழுப்பினர். சுகாதாரத்துறை இணை இயக்குனர் கொப்புளி முகம்மது மீறான் பதிலளித்தார். எனினும் திருப்தியான நடவடிக்கையும்,பதிலும் கிடைக்காதலால் கீழ் கண்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்து கோஷமிட்டவாறு கலைந்து சென்றனர்.
கோரிக்கைகள்
1. பல வருடமாக பரவி வரும் காய்ச்சல் எந்த வகையானது என ஆய்வு முடிவுகளோடு அறிவிக்க வேண்டும்.
2. இதுவைரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனே நிவாரணம் வழங்க வேண்டும்.
3. நடமாடும் மருத்துவ ஆய்வகம் ஒன்று உடனடியாக அமைக்க பட வேண்டும்.
4. சுகாதார சீர்கேட்டையும் பல விதமான நோய்களையும் ஏற்படுத்தும் பாப்பாங்கால்வாய் மற்றும் உடைந்த குடிநீர் குழாயையும் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
5. அசுத்தங்கள் மண்டிக்கிடக்கும் நீர் நிலைகளை உடனடியாக சுத்தம் செய்வதற்கு உத்தரவு விடவேண்டும்.
6. செத்த ஆடு மற்றும் நாய் கடித்த ஆடு போன்ற நோய் பரப்பும் காரணிகளை மக்கள் அடையாளம் காட்டியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.போன்ற கோரிக்கைகளை வலியறுத்தி மனு அளித்தனர்.
எஸ்.டி.பி-யின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி தலைமையில் நடைபெற்ற இம்முற்றுகையில் பாப்பலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம் , எஸ்.டி.பி-யின் நெல்லை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் யாசர்கான் மற்றும் திரளான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.