நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 23 ஏப்ரல், 2012

அவதூறு செய்திகளை வெளியிடும் பத்திரிகை மற்றும் தொலைகாட்சி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை



புதுடெல்லி:
 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்பாக ஒட்டுமொத்த இந்தியாவிலும் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகள் அவதூறு செய்திகளை பரப்பி கொண்டிருக்கின்றனர். எத்துனை முறை அவ்வாறான செய்திகளை மறுத்த போதும் நமது மறுப்பை வெளியிடாமல் தொடந்து அவதூறுகளை பரப்பி வரும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தின் முதற்கட்டமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் தயினிக் ஜக்ரன் (ஹிந்து நாளிதழ்), ஹிந்துஸ்தான் டைம்ஸ் (ஆங்கில நாளிதழ்), தி ஏஸியன் ஏஜ் (ஆங்கில நாளிதழ்), ஐ.பி.என்-7 (ஹிந்து செய்தி சேனல்), டெக்கன் கிரோனிக்கல் (ஆங்கில நாளிதழ்), டைம்ஸ் நவ் (ஆங்கில செய்தி சேனல்), நவ பாரத் டைம்ஸ் (ஹிந்தி நாளிதழ்), இன்குலாப் (உருது நாளிதழ்), தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஆங்கில நாளிதழ்), தி சன்டே கார்டியன் (ஆங்கில வார இதழ்), சி.என்.என். ஐ.பி.என் (ஆங்கில செய்தி சேனல்) போன்ற செய்தி நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலே குறிப்பிட்ட பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி செய்தி சேனல்கள் அனைத்தும் பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்பாக எந்த ஒரு ஆதாரமும் இல்லாத பொய்யான செய்திகளை பரப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களான பாஹர் யு பாரிகி மற்றும் மஃரூஃப் அஹமது ஆகியோரால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மக்கள் தொடர்பு அதிகாரி எம்.கே.ஷர்புதீன் அவர்கள் மூலமாக பத்திரிகையாளர் சங்கத்திற்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில் ஒரு சாரார் தற்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை குறிவைத்து தாக்கி வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட்டிற்கு எதிராக‌ இவர்கள் வெளியிடும் செய்திகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இவர்கள் வெளியிடும் செய்திகள் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தோடு நின்றுவிடுவதில்லை. மாறாக ஒட்டுமொத்த இந்தியாவிற்கு இது பரவி வருவதை நம்மால் காண முடிகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் அறவே இல்லாத மாநிலங்களில் வெளிவரும் நாளிதழ்களிலும் அவதூறு செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்பாக வெளியிடப்படும் பெரும்பாலான செய்திகள் அபத்தமானதாகவே இருக்கிறது. இதனால் ஊடகங்களின் நம்பகத்தன்மை மீது இருமுறை யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் ஊடக நெறிமுறைகள் ஒழுங்காக கடைபிடிக்கப்படுவதில்லை. வெளியிடயிருக்கின்ற செய்திகள் உண்மைதானா என்பதை உறுதி செய்வதற்காக எந்த ஒரு முயற்சியையும் இத்தகைய ஊடகங்கள் மேற்கொள்வதற்கு தயாராக இல்லை. கடந்த சில மாதங்களாக வெளியிடப்பட்ட செய்திகளை பார்கும்போது இவர்களின் பாரபட்சத்தை தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.  


பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்பாக சசமீபத்தில் வெளிவந்த செய்திகளை பார்க்கும்போது இது ஒன்றும் எதேர்சையாக எழுதப்பட்ட செய்திகள் அல்ல என்றும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக மிகப்பெரிய சதி பின்னப்பட்டு வருகிறது என்ற முடிவுக்கு வர முடிவிற்கு வரலாம். இதற்காக எல்லா ஊடகங்களையும் நாம் குற்றம் சுமத்திவிடமுடியாது. சங்கப்பரிவார்களின் ஊதுகுழலாக செயல்படும் அனைத்து பத்திரிகைகளும்தான் இவ்வாறான செய்திகளை பரப்பி வருகிறது. இத்தகைய ஊடகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லிம் சமூகத்தை வலிமைபடுத்த முயற்சிக்கும் முஸ்லிம் இயக்கங்களுக்கு எதிராகவும் தங்களுக்குள் வெறுப்பை வளர்த்து கொண்டுள்ளனர். இந்த முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்தி முஸ்லிம் இளைஞர்களை எவ்வாறெல்லாம் விசாரணைக்கு உட்படுத்தினார்கள் என்பதை சமீபத்தில் வந்த செய்திகள் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.


உதாரணமாக பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஹனீஃப் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஆஸ்திரேலியாவில் செயல்படும் ஊடகங்கள் அனைத்தும் அவரை அப்பாவி என்று கூறி செய்திகள் வெளியிட்ட போது இந்தியாவில் செயல்பட்ட ஊடகங்கள் அவரின் மீது தீவிரவாதி என்ற முத்திரையை குத்தினர். இதனை அடுத்து ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் நிலை கேள்விக்குறியானது. காரணம் இதற்கு பின்னர் தொலைக்காட்சி நிறுவனங்கள் "தீவிரவாத இயக்கங்களில் படிக்காத முஸ்லிம்களை விட படித்த முஸ்லிம் இளைஞர்கள் இணைகிறார்களா?" என்ற தலைப்பில் விவாதங்களை நடத்தினர். புதுடெல்லி பட்லா ஹவுஸ் போலி எண்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் மாணவர்களை இதுபொன்ற ஊடகங்கள் தீவிரவாதிகளாக சித்தரித்தனர். அவர்களை சுட்டுக்கொன்றது சரிதான் என்ற ரீதியில் இத்தகைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லிம் இயக்கங்களுக்கு எதிராகவும் அவதூறு செய்திகள் வெளியிடப்படுவது என்பது அவர்களது பொழுதுபோக்கான காரியம் அல்ல, மாறாக ஒட்டு மொத்த சமூகத்தின் எதிர்காலத்தை பாழ்படுத்துவதற்கான சதிவேலைகளே என்பது நிரூபனமாகிறது.


சமீபத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்பாக வெளியிடப்பட்ட அவதூறு செய்திகள்:



எண்
தலைப்பு
பத்திரிகையின் பெயர்
1
தீவிரவாத இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் தடைசெய்யப்பட்டது
தயினிக் ஜக்ரன்
2
வாரணாசி வழக்கை காவல்துறையினரால் முடிக்க இயலவில்லை
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
3
பி.எஃப்.ஐயின் தேசிய அலுவலகம் டெல்லிக்கு மாற்றம்
தி ஏசியன் ஏஜ்
4
பாப்புலர் ஃப்ரண்டிற்கு "சிமிஇயக்கத்திற்கும் தொடர்பு
ஐ.பி.என்-7
5
உளவுத்துறையின் கேள்விகளுக்கு பதில் அளிக்க பாப்புலர் ஃப்ரண்ட் தன்னுடைய உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கிறது
டைம்ஸ் நவ்
6
குண்டுவெடிப்பு, 3 இயக்கங்கள் மீது குற்றச்சாட்டு
நவ பாரத் டைம்ஸ்
7
தூதரக அதிகாரி மீது தாக்குதல் - பாப்புலர் ஃப்ரண்ட் மீது சந்தேகம்
தயினிக் ஜக்ரன்
8
டெல்லி கார் குண்டுவெடிப்பு - பி.எஃப்.ஐ ஈடுபட்டதாக ஆதாரம்
தி நியு இந்தியன் எக்ஸ்பிரசி.என்.என். ஐ.பி.என்
9
உளவுத்துறை அதிகாரிகளால் பி.எஃப்.ஐ தீவிரவாக கண்காணிக்கப்படுகிறது
தி இன்குலாப்
10
பயங்கரவாத அமைப்பான பி.எஃப்.ஐ டெல்லிக்கு மாற்றம் - உளவுத்துறை தகவல்
தி சண்டே கார்டியன்

பெரும்பாலான மீடியாக்கள் குற்றஞ்சாட்டி வருகின்ற ஒரு விஷயம் என்னவெனில் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் தடைசெய்யப்பட்ட இயக்கமான "சிமி"க்கும் தொடர்பு உண்டு என்ற செய்திதான். இவ்வாறு செய்தி குறிப்பிட்ட பத்திரிகைகளை தொடர்பு கொண்டு கேட்டதற்கு யாருக்குமே தெரியாத இரகசிய பாதுகாப்பு துறை அதிகாரிகள் தான் இதனை தெரிவித்தனர் என கூறுகிறார்கள். பாப்புலர் ஃப்ரண்டிற்கு சிமி இயக்கத்தோடும், இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தோடும் தொடர்பு உண்டு என கற்பனை கதைகள் பல்வற்றை வெளியிட்டுள்ளது. ஆனால் இதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் அவர்கள் வெளியிட்டதாக தெரியவில்லை. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கும் வேறு எந்த இயக்கத்திற்கும் தொடர்பு இல்லை. இத்தகைய செய்திகள் எப்பொழுதுமே தங்களுக்கு கிடைத்த செய்தியின் பின்னனியை வெளியிடுவதில்லை. "உளவுத்துறை" என பெயர் வைத்துக்கொண்டு இதுபோன்ற முட்டாள்தனமாக செய்திகளை பத்திரிகைகளுக்கு கொடுப்பது என்பது உளவுத்துறையினரின் தொடர்கதையாகிவிட்டது.

இப்பேற்பட்ட ஊடகங்கள் நடத்துவது கபட நாடகம் என்பது தெளிவாகிறது. காரணம் இத்தகைய குற்றச்சாட்டிற்கான மறுப்புகளை நாம் வெளியிடும்போது அதனை பிரசுரிப்பதே இல்லை. இத்தகைய செய்திகளுக்கான ஆதாரங்கள் என்ன என்பதை அப்பதிரிகைகளிடம் கேட்டபின்பும் இது வரை எந்த பதிலும் வரவில்லை. இத்தகைய செய்திகள் அவர்களுக்கு கிடைக்கும்போதும் கூட இது தொடர்பான உண்மையை அறிந்து கொள்வதற்கு ஒரு முறை கூட இந்த ஊடகங்கள் பாப்புலர் ஃப்ரண்டை தொடர்பு கொண்டதில்லை. எல்லாவிதமான தீவிரவாத செயல்களுக்கு எதிராகவும், தேசிய பாதுக்காப்பிற்கு எதிராக செயல்படும் அனைத்து சக்திகளுக்கு எதிராகவும் பாப்புலர் ஃப்ரண்ட் தீவிரமாக போராடி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை. இருந்தபோதிலும் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தீவிரவாத செயல்களுக்கும், தேசவிரோத செயல்களிலும் பாப்புலர் ஃப்ரண்டை தொடர்பு படுத்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

மும்பையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்கு பின்னர்  "தயினிக் ஜக்ரன்" என்ற பத்திரிகை மத்திய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் தடை செய்யப்பட்டுவிட்டதாகவும், அதன் தலைவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது. இத்தகைய செய்திகள் இந்தியர்கள் உண்மையை புரிந்து கொள்வதற்கு போதுமானதாக இருக்கும் என கருதுகிறோம். பதிவு செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் தடைசெய்யப்பட்டுவிட்டதாக வெளியிட்ட பத்திரிகையின் செய்தியை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? 

இந்தியாவிலேயே மிகப்பெரிய சமூக நல இயக்கமாக செயல்பட்டு வரும் பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கம் என்று செய்தி வெளியிடுவது என்பது ஏதோ ஏதேர்ச்சையாகவோ அல்லது தவறுதலாக நடந்த ஒன்றோ அல்ல, மாறாக அதன் வளர்ச்சியை தடுக்கவும், மக்களிடம் இருக்கும் ஆதரவை தடுக்கவும் இவ்வாறான செய்திகள் வெளியிடப்படுகிறது. சென்ற காலங்களில் பாப்புலர் ஃபர்ண்ட் ஆஃப் இந்தியா தென் இந்தியாவில் மட்டுமே இயங்கக்கூடிய இயக்கமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கால்பதித்து வேகமாக வளந்து வருகிறது. கடந்த வருடம் நவம்பர் மாதம் புது டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற "சமூக நீதி மாநாட்டில்"திரண்ட மக்கள் வெள்ளமே இதற்கு சாட்சியாகும். வட இந்தியாவில் வேகமாக வளந்து வரும் வேளையில் சங்கப்பரிவார்களின் தூண்டுதலின் பேரிலேயெ இத்தகைய செய்திகள் வெளியிடப்படுகிறது.

இதனையெடுத்து இவ்வாறான அவதூறு செய்திகளுக்கு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முடிவெடுத்துள்ளது. இதனை தொடர்ந்து அப்பத்திரிகைகளுக்கு எதிராகவும், செய்தி நிறுவனங்களுக்கு எதிராகவும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படும் மேலும் பத்திரிகை சங்கத்திற்கு இந்த செய்தியினை கொண்டு சென்று அவதூறுகளை வெளியிட்ட பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.

இவ்வாறு கே.எம்.ஷரீஃப் செய்தி வெளியிட்டுள்ளார்