இறைவனின் உதவியைக் கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும், எஸ்.டி.பி.ஐ கட்சியும் இந்தியாவில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டுகொண்டிருப்பது நாம் அறிந்ததே!
மர்மகாய்ச்சலால் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடங்களில் இந்த காய்ச்சலால் 30க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்குள்ளாகி பலியாகினர். இந்த வருடமும் பல மக்கள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் ஒரு பெண் பலியாகியுள்ளார்.
சென்ற வருடம் இந்த பிரச்சினை வந்த போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒரு மருத்துவ அணியுடன் கடையநல்லுரிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் இந்த காய்ச்சல் சம்பந்தமான துண்டு
பிரசுரங்கங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் ஒவ்வொரு
வீடுகளின் தண்ணீர் தேக்க தொட்டிகளின் மேல் ஏறி மருந்துகளை ஊற்றினர்.
இந்த
வருடமும் வழக்கம்போல மர்ம
காய்ச்சல் பரவ ஆரம்பித்தது. இதனை கட்டுப்படுத்த வேண்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும், எஸ்.டி.பி.ஐ கட்சியும் ஆலோசித்துக்
கொண்டிருக்கும் போது, 21-04-2012 அன்று கடையநல்லுர் நகராட்சியில் வைத்து மாவட்ட சுகாதார இணை இயக்குனர் கடையநல்லுர்
கவுன்சிலர்களுடன் மர்ம காய்ச்சல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடப்பது தெரிய
வந்தவுடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்களும், எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் சுகாதார இணை
இயக்குனரை நகராட்சிக்கு சென்று முற்றுகையிட்டனர்.
பின்பு சுகாதார இணை இயக்குனரிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத் தலைவர் ஜே.ஜாபர் அலி உஸ்மானி அவர்கள் மர்ம காய்ச்சல் சம்பந்தமான
விளக்கங்கங்களை கேட்டு அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி
வலியுறுத்தினார்.
மேலும், மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்குண்டான செயல்களில்
நகராட்சி ஈடுபடும் போது சென்ற வருடம் தன்னார்வ தொண்டர்களை தந்ததுபோல இந்த வருடமும் தொண்டர்களை தருவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டத் தலைவர் லுக்மான் ஹக்கீம் அவர்கள் சுகாதார இணை இயக்குனரிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் கடைநல்லுர் மர்மகாய்ச்சலினால் பல மக்கள் பாதிக்கப்பட்டு நெல்லை சுதர்சன்
மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும், இந்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தம்
அதிகமாக தேவைபடுகின்றது. பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் இதுநாள் வரைக்கும் கடையநல்லுர்,வடகரை,செங்கோட்டை,தென்காசி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதி
மக்களுக்கும் இரத்தம் கொடுத்து வருகின்றார்கள்.
மேலும், திருநெல்வேலி சுதர்சன் மருத்துவமனைக்கு
இந்நோயினால்
பாதிக்கப்பட்டவர்கள்
நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இந்நோயினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தம் அதிகமாக தேவைப்படுகின்றது. மக்களுடைய சிரமத்தை
குறைக்க பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ-யின் சகோதரர்கள் 20க்கும் மேற்பட்டோர் 22-04-2012 அன்று காலை இட ஓதக்கீட்டுக்கான ஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பும் முன்பு சுதர்சன் மருத்துவமனைக்கு சென்று அங்கு இந்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து
விட்டு அம்மருத்துவமனையின் மேல் தளத்தில் அமைந்திருக்கின்ற LIFE LINE BLOOD BANK--ல் இரத்ததானம்
செய்தனர்.