நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 25 ஏப்ரல், 2012

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம்பஸ் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு

சங்கப்பரிவார கும்பல்களின் மாணவர் பிரிவான "அகில பாரதிய வித்யார்த் பரிஷத்" ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைகழகத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர‌ மாநில தலைவர் டாக்டர் செய்யது பரகத்துல்லாஹ் குற்றஞ்சாட்டியுள்ளார். சங்கப்பரிவார்களின் தீர்மானங்களை ஏ.பி.வி.பி செயல்படுத்தி வருவதாகவும், தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் நிலவி வரும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்ச்சித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைகழகத்தில் "பீஃப் ஃபெஸ்டிவல்" (மாட்டிறைச்சி உண்ணும்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜாதி, மத பாகுபாடின்றி பெரும்பாலான மாணவர்கள் இதில் கலந்து கொண்டு மாட்டிறைச்சி சாப்பிட்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு மதச்சாயம் பூசி முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்த முயன்று, தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர். இவ்வாறு செய்யது பரகத்துல்லாஹ் தெரிவித்தார்.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதியை "குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்" என கடைபிடிக்கப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் தெருமுனைக்கூட்டங்கள் மற்றும் இன்னபிற நிகழ்ச்சிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

மேலும் சமூக மாற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இனி வரும் காலங்களில் சமூக நல்லணிகத்தை பரப்பவும் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் தனது உறுப்பினர்களை அதிகரிக்கும் பணியை மேற்கொள்ளும் என  பொதுச்செயலாளர் ஹஸன் ஷேக் தெரிவித்தார்.