நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

மக்கா மஸ்ஜிதை வந்தடைந்த யாத்திரை

ஹைதராபாத்: கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி டெல்லி பட்லா ஹவுஸில் வைத்து தொடங்கிய விழிப்புணர்வு யாத்திரை 5000 கி.மீ கடந்து ஏப்ரல் 21 அன்று ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் வந்தடைந்தது. முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதை எதிர்த்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த யாத்திரை தொடங்கப்பட்டது. என்.சி.ஹெச்.ஆர்.ஓ உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த யாத்திரை திட்டமிட்ட படி சிறப்பாக செயல்பட்டு தனது பணியை நிறைவு செய்துள்ளது.
இந்த யாத்திரையில், டெல்லியைச் சேர்ந்த ஃபைசல் கான், ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பல்வந்த் சிங் யாதவ், பாண்டிச்சேரியைச் சேர்ந்த இனாமுல் ஹஸன், குஜராத்தைச்சேர்ந்த வழக்கறிஞர் பிலால் காஜி, உத்திர பிரதேசத்தைச்சேர்ந்த முஹம்மது ஃபைஜான், கஷ்மீரைச்சேர்ந்த சபீர் ஹஸன் மற்றும் டெல்லியைச்சேர்ந்த ராஹில் இஃக்பால் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.

கடந்த சனிக்கிழமை அன்று இந்த பயணக்குழு ஹைதராபாத் வந்தடைந்தது. அங்குள்ள பிரசித்தபெற்ற மக்கா மஸ்ஜித்திற்கு வந்தடைந்த போது அங்குள்ள முஸ்லிம்கள் பெருமளவில் வரவேற்பளித்தனர். அங்கு அவர்கள் தங்களுடைய லுஹர் தொழுகையை நிறைவேற்றினர். 


இந்த பயணம் நிறைவடைந்த பின்னர் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் குற்றவாளியாக்கப்பட்டு பின்னர் நிரப‌ராதி என்று உறுதி செய்யப்பட்டு விடுதலை அடைந்த ஷேக் அப்துல் கலீமின் வீட்டிற்கு சென்றனர். ஷேக் அப்துல் கலீம் விடுதலை அடைந்தது சுவாரஸ்யமானது, காரணம் அவரோடு சிறைச்சாலையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி சுவாமி அசிமானந்தா கலீமின் நல்ல நடத்தையை கண்டு நெகிழ்ந்து மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிற்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான். இதே மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்னர் நிரபராதி என்று உறுதிசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்து அவர்களுக்கு நிவாரணத்தொகைகளை வழங்கிய அரசு ஷேக் அப்துல் கலீமிற்கு எவ்வித நிவாரணத்தொகையையும் வழங்கிடவில்லை.

பின்னர் குஜராத் சிறைச்சாலையில் 6 ஆண்டுகள் கழித்த முன்னால் சிமி இயக்கத்தலைவர் மெளலானா நஸீருதீன் அவர்களின் வீட்டிற்கு சென்றனர். இன்று வரை அவருடைய மூன்று மகன்களும் சிமி இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சியாசட் உருது பத்திரிக்கையின் சார்பாக அன்று மாலை மெஹபூர் ஜிகார் மஹாலில் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியின் போது யாத்திரையில் பயணம் மேற்கொண்டவர்கள் கடந்த 10 நாட்களின் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். சியாசட் பத்திரிக்கையின் ஆசிரியர் ஜாஹித் அலி கான் அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

வழக்கறிஞர் பிலால் காஜி தனது அனுபவத்தை பற்றி கூறும்போது "எங்களுடைய இந்த யாத்திரை நாங்கள் எதிர்பார்த்ததை விட வெற்றியை கண்டுள்ளது. உளவுத்துறை நிறுவனம் எங்களை தீவிரமாக கண்காணித்து வந்தது. இருந்த போதிலும் எங்களுடைய எந்த நிகழ்ச்சிக்கும் அவர்களால் தடைவிதிக்க இயலவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும்திரளான மக்கள் எங்களின் இந்த யாத்திரைக்கு ஆதரவளித்தனர்." இவ்வாறு அவர் கூறினார்.
ஃபைஜல் கான் கூறும்போது " நாங்கள் இந்த யாத்திரைக்காக ரூபாய் 10,000 முதல் 12,000 வரை தான் செலவு செய்தோம். எங்களுடைய இந்த யாத்திரையில் மிகப்பெரிய வெற்றியாக நாங்கள் கருதுவது எங்களுடைய இந்த நிகழ்ச்சிகள் பெருமளவில் முஸ்லிம் அல்லாதவர்களும் கலந்து கொண்டனர் என்பதுதான். எங்களுடைய இந்த பயணத்தின் போது நாங்கள் மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சில சமயங்களில் பிலாட்ஃபார்ம்களில் தான் படுத்து உறங்கினோம். அச்சமயத்தில் கூட எங்களுடைய பிரச்சாரங்களை எடுத்துச்சென்றோம்." இவ்வாறு கூறினார்.

இந்த யாத்திரையின் நோக்கம் முஸ்லிம் இளைஞர்களுக்கு அவர்களுடைய பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். நீதிக்கான இந்த போராட்டத்தில் அவர்களோடு பலர் இருக்கின்றனர் என்பதை அவர்கள் மறந்துவிட வேண்டாம். எல்லா  நிலையிலும் மனித உரிமை மீறல்களை எதிரத்து தங்களுடைய போராட்டம் தொடரும். இவ்வாறு மேலும் கூறினார்.