நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 11 ஜனவரி, 2014

“இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை” – அபூதபியில் EIFF நடத்திய நிகழ்ச்சியில் SDPI மாநிலத் தலைவர் சிறப்புரை!

அபூதபி: அமீரகத்தில் பல்வேறு நலப்பணிகளை ஆற்றி வரும் எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அபூதபி ஏர்லைன்ஸ் பார்ட்டி ஹாலில் நேற்று (10.01.2014) பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றை வெகு சிறப்பாக நடத்தியது. 
சிறப்புரையாற்றும் SDPI மாநிலத் தலைவர் தெஹ்லான் பாக்கவி
அதில் சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) தமிழ் மாநிலத் தலைவர் மௌலவி K.K.S.M. முஹம்மது தெஹ்லான் பாக்கவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வெள்ளி, 10 ஜனவரி, 2014

பி.ஜே.பி யின் பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டுவோம் ! ஃபாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கம் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவிப்பு !

நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. 
சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து

வியாழன், 9 ஜனவரி, 2014

அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் - பாப்புலர் ஃப்ரண்ட்!

முஸாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தீவிரவாதிகள் தொடர்பு கொண்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று டெல்லி சிறப்பு காவல்படை ஆணையர் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். 
இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்திகள் ஏற்கனவே முஸாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை மென்மேலும்

புதன், 8 ஜனவரி, 2014

முஸ்லிம் சிறுவனின் வாயில் சுட்ட போலீஸ்:சென்னையில் பரபரப்பு!

சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சிறுவன் தமீம் அன்சாரியின் வாயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டத்தில் தொண்டையில் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த அந்தச் சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக இமாம்கள் சந்திப்பு நிகழ்சி....

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இமாம்கள் சந்திப்பு நிகழ்சி நடைபெற்றது.

திங்கள், 6 ஜனவரி, 2014

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் கண்டனம்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் கண்டனம்! இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்… 


பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான எரிவாயு சிலிண்டர் தற்போது ஆண்டுக்கு

நியாயமான கோரிக்கை

செங்கோட்டை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலை....

செங்கோட்டையில் 21வது வார்டு துப்புரவு செய்யமலிருந்த பகுதியை. எஸ்.டி.பி.ஐ.கவுன்சிலர் சாகுல்ஹமீது பாதுஷா அவர்களின் முயற்சியால் சுத்தம் செய்யப்பட்டது.


முகைதீன் பாதுஷா's photo.முகைதீன் பாதுஷா's photo.முகைதீன் பாதுஷா's photo.
மற்றும் நகராட்சி நிர்வாகத்தால் கண்டுகொள்ளத 21வது வார்டில் அண்ணாநகர தெருவில் உள்ள ஓடை பாலம் உடைந்து அதை பார்வையிடும் எஸ்.டி.பி.ஐ. நகரசெயளாலர் அஸ்கர் அலி மற்றும் ஜாபர் அவர்கள்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக மக்கள் மாநாடு:பாப்புலர் ஃப்ரண்ட்,எஸ்.டி.பி.ஐ உள்பட பல கட்சிகள்,இயக்கங்கள் பங்கேற்ப்பு


நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் 04.01.14 அன்று அணுவுலை எதிர்ப்பு மாநாடு துவங்கியது.இந்த எதிர்ப்பு மாநாட்டில் அணுவுலை எதிர்ப்புகுழு தலைவர் உதயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார்,அணுவுலை எதிர்ப்புகுழுநிர்வாகி புஷ்பராயன் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.இந்த மாநாட்டிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் A .S இஸ்மாயில்,எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் நாஞ்சில் செய்யதலி ,விடியல் வெள்ளி பத்திரிக்கை துணை ஆசிரியர் ரியாஸ் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் நவவி உள்ப்பட அனைத்து கட்சிகள்,இயக்கங்கள் ,சமுக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கொலம்பஸிற்கு முன்பே அல்பிரூனி அமெரிக்காவை கண்டுபிடித்தார்!


வாஷிங்டன்: ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த மாலுமியும், தேடலாய்வாளருமான கிறிஸ்டோபர் கொலம்பஸிற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே பிரபல கணித மேதையும், விஞ்ஞானியுமான அல்பிரூனி அமெரிக்காவை கண்டுபிடித்துள்ளார் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹிஸ்டரி டுடே பத்திரிகையில் பிரபல அமெரிக்க ராஜீய வல்லுநரும் வரலாற்று ஆய்வாளருமான ஃபெடரிக் இதுக்குறித்து ஆய்வை வெளியிட்டுள்ளார்.