முஸாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தீவிரவாதிகள் தொடர்பு கொண்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று டெல்லி சிறப்பு காவல்படை ஆணையர் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்திகள் ஏற்கனவே முஸாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை மென்மேலும்
வேதனைபடுத்துவதாக உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸாபர் நகர் மக்களை தீவிரவாதிகளோடு தொடர்பு படுத்தியதை அனைத்து முஸ்லிம்களும் கடுமையாக கண்டித்தனர். இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதும், அதனடிப்படையில் அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதும், தீவிரவாதிகளுடன் தொடர்பு படுத்துவது போன்ற இழி செயல்களை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது என்று மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.