கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் கண்டனம்! இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் நிஜாம் முஹைதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான எரிவாயு சிலிண்டர் தற்போது ஆண்டுக்கு
ஒன்பது மட்டுமே மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் தேவைபடுவோர் மானியம் இல்லாத சிலிண்டர்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி, ஏற்கனவே மத்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களை வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் மூன்றாவது முறையாக எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மானியமில்லாத சமையல் எரிவாயு விலையை 220 ரூபாய் உயர்த்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே பொதுமக்களின் கொந்தளிப்பு காரணமாக ஒரு வருடத்திற்கு ஆறு சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்கின்ற தனது முந்தைய நிலையை மத்திய அரசு மாற்றி, வருடத்திற்கு ஒன்பது சிலிண்டர்களை தற்போது மானிய விலையில் வழங்கி வருகிறது. இந்த எண்ணிக்கை தற்போதைய வாழ்க்கை முறையில் ஒரு குடும்பத்திற்கு போதுமானது அல்ல. அதை வருடத்திற்கு குறைந்த பட்சம் பனிரெண்டு சிலிண்டராவது மானிய விலையில் வழங்கிட வேண்டும் என்கிற தனது முந்தைய நிலைபாட்டை எஸ்.டி.பி.ஐ கட்சி மீண்டும் வலியுறுத்துவதோடு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலையேற்றத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.