நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது.
சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து
வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம். இந்த சங்கபரிவார அமைப்புகளின் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சியின் மதவாதம், ஊழல், போலி தேசிய வாதம், தீவிர வாதம் போன்ற பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டும் முகமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தை மாநில அளவில் நடத்த உள்ளது. இதன்படி ஜனவரி 2014 முதல் ஏப்ரல் 2014 வரை மாநிலம் முழுவதும் பாசிசத்திற்கு எதிரான நோட்டீஸ் மற்றும் போஸ்டர் பிரச்சாரம், சமூக வலைதளங்களில் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைக் கூட்டங்களை நடத்த உள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள், அனைத்து இயக்க தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து பாசிசத்திற்கு எதிராக ஒருங்கிணைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளது. தேசத்தின் இறையாண்மைக்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், வேற்றுமையில் ஒற்றுமை தத்துவத்திற்கும் எதிராக செயல்படும் சங்பரிவார பாசிசத்தின் உண்மை முகத்தை தோலுரிக்கும் இந்த பிரச்சார இயக்கத்தில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து தரப்பு மக்களையும் அழைக்கின்றது.
இப்படிக்கு,
A. ஹாலித் முகமது,
மாநில பொதுச் செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.
மாநில பொதுச் செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.