நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 10 செப்டம்பர், 2011

7 ஆண்டுகள் கழிந்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பில் விடுதலை செய்க ! தமிழக அரசுக்கு பாப்பலர் ஃப்ரண்ட் வேண்டுகோள் !


கடையநல்லூர்: விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 18 ஆட்டோக்கள் பறிமுதல்


கடையநல்லூர் :  கடையநல்லூர் பகுதியில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 18 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
    
தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முத்துசாமி உத்தரவின் பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கடகிருஷ்ணன்,ஜெய்மனோகர் ஆகியோர் கடையநல்லூர் பகுதியில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்றது, ஷேர் ஆட்டோக்கள் போல் தனித்தனியாக டிக்கெட் வசூலித்துப் பயணிகளை ஏற்றிச் சென்றது உள்ளிட்ட பல்வேறு அரசு விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 18 ஆட்டோக்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
    
இதுபோன்ற ஆய்வு நடவடிக்கைகள் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முத்துசாமி தெரிவித்தார்.

அனைவருக்கும் அடையாள அட்டைகள்: முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்


சென்னை : முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இணையும் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்தத் திட்டத்தைக் கண்காணிக்க மாநில அளவில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டப் பேரவை விதி 110-ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை படித்த அறிக்கை:
"விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில், புதிய, விரிவுபடுத்தப்பட்ட, சமூக பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய திட்டம், ""முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்'' என்று அழைக்கப்படும்.
இந்தத் திட்டத்தின்கீழ், 2.5 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலம் முதலியவற்றை உடமையாகக் கொண்டு, அந்த நிலத்தில் நேரடியாகப் பயிர் செய்யும் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட குறு மற்றும் சிறு விவசாயிகள் பயன்பெறுவர்.
விவசாயம் சார்ந்த தொழிலில் ஊதியத்துக்காகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயது வரையுள்ள அனைத்து விவசாய குத்தகைதாரர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள்.
எந்த நிறத்தில் அட்டை: ஒரு குடும்பத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபடும் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் பண்பேறிய சிவப்பு வண்ணத்திலும் (மெரூன்) அவர்களைச் சார்ந்து வாழும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு சாம்பல் நிறத்திலும் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
இந்த அடையாள அட்டை பெறுபவர்கள் அனைவரும் அரசின் திட்ட உதவிகளைப் பெறத் தகுதி உடையவர்கள். இதுவரை குடும்பத் தலைவருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்த நிலை மாறி புதிய உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுவதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் திட்ட உதவிகளைப் பெற வழி ஏற்படும்.
கல்வி உதவி: விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வேறு எந்த கல்வி உதவித் திட்டத்தின்கீழ் உதவி பெற்றாலும், இந்தத் திட்டத்தின் கீழும் கல்வி உதவித் தொகை பெற வழி செய்யப்பட்டுள்ளது.
ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் இதர பட்டயப் படிப்புகளுக்கு ரூ.1,250 முதல் ரூ.1,950 வரை ஆண்டுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு ரூ.1,750 முதல் ரூ.2,500 வரை ஆண்டுக்க கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். முதுகலை பட்டப் படிப்புகளுக்கு ரூ.2,250 முதல் ரூ.3,750 ஆண்டுக்கு வழங்கப்படும். சட்டம், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை அறிவியல் போன்ற தொழில் கல்வி படிப்புகளுக்கு இளங்கலையில் ரூ.2,250 முதல் ரூ.4,750 வரையிலும், முதுகலையில் ரூ.4,250 முதல் ரூ.6,750 வரையிலும் ஆண்டுக்கு கல்வித் உதவித் தொகையாக அளிக்கப்படும்.
திருமண உதவி: சமூகநலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற தகுதி உள்ளவர்கள் அந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவர். திருமண உதவி திட்டங்களின் கீழ் உதவித் தொகை பெற இயலாதவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், ஆணுக்கு ரூ.8 ஆயிரமும், பெண்ணுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.
மகப்பேறு உதவித் தொகை-முதியோர் ஓய்வூதியம்: பதிவுபெற்ற உறுப்பினருக்கு சுகாதாரத் துறையால் மகப்பேறு உதவிக்கென செயல்படுத்தப்படும் திட்டத்தின் மூலம் இந்த உதவித் தொகை வழங்கப்படும். மகப்பேறு உதவித் தொகையினை எளிதாகப் பெறும்வகையில் தனி வட்டாட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மூலம் தேவையான சான்றிதழ்களை ஒருமுகப்படுத்தி வழங்க இந்தத் திட்டத்தின் கீழ் வசதிகள் செய்து தரப்படும்.
60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மாதத்துக்கு ரூ.1,000 ஓய்வூதியமாகப் பெறுவர். இந்தத் திட்டத்தின் உறுப்பினரோ அல்லது அவரைச் சார்ந்தவரோ இறக்க நேரிட்டால் அந்தக் குடும்பத்துக்கு ஈமச் சடங்குக்கான உதவித் தொகை உடனடியாக வழங்கப்படும். ஈமச் சடங்கு நிவாரணம் பெற இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படுகிறது.
திட்டச் செயலாக்கம்: ""முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்'' மாவட்ட அளவில் ஆட்சித் தலைவர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மூலமாகச் செயல்படுத்தப்படும்.திட்டச் செயல்பாட்டினை மேற்பார்வையிட அரசு அளவில் ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்படும்' என்றார் முதல்வர் ஜெயலலிதா.

போக்குவரத்துத் துறையில் "754 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்'


சென்னை : போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள 754 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை - 2, உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய 754 பணியிடங்கள் நிரப்பப்படும்.

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு


கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர்.

இது உளவுத் துறையின் தோல்வியால் நடந்த குண்டுவெடிப்பு - மன்மோகன் சிங்

டெல்லி : உளவுத் துறை சரியான நேரத்துக்கு துப்பு கொடுத்து எச்சரிக்காததால்தான் இந்த குண்டுவெடிப்பே நிகழ்ந்தது, என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

15-வது தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள், எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கிழக்கு ஆப்ரிக்காவில் ஏழு லட்சத்திற்கும் மேலானோர் மரணம் அடைய வாய்ப்பு: ஐ.நா அதிர்ச்சி தகவல்


லண்டன் : கிழக்கு ஆப்ரிக்காவில் அடுத்த நான்கு மாதங்களுக்குள் ஏழு லட்சத்திற்கும் மேலானோர் மரணம் அடைய வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை ஐ.நா அறிவித்துள்ளது.

கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள பஞ்சத்தின் காரணமாக அவர்களுக்கு தகுந்த முதலுதவி கிடைக்கவில்லையென்றால் அடுத்த நான்கு மாதங்களுக்குள் லட்சக்கணக்கானோர் இறக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்ததோடு, இந்த பகுதியில் 12 மில்லியனுக்கும் மேற்ப்பட்டோர் உணவு தேவை உள்ளதாகவும், அதில் நான்கு மில்லியனுக்கும் மேலானோர் சோமாலியாவை சேர்ந்த மக்களே  என்று பிரபல பத்திரிக்கை டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சும்மா விடமாட்டோம்! - ஜெயலலிதா

சென்னை : கடந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சும்மா விடமாட்டோம். கடும் நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

போக்குவரத்து துறைமானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சர் விஜய் பேசுகையில், "கடந்த ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனி புத்தகமே வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

அல்-மறாய் கம்பெனிக்கு வேலைக்கு ஆட்கள் தேவை

ரியாத் மாநகரிலுள்ள மிகப் பெரிய கம்பெனியான அல்-மறாய் கம்பெனிக்கு ஆட்கள் தேவை. விஸா மற்றும் அனைத்துவிதமான சலுகைகளும் இலவசம். உடனே தொடர்பு கொள்ளவும் . கீழ்கண்ட 

கத்தார் நாட்டுக்கு ஆட்கள் தேவை

டெல்லி குண்டுவெடிப்பு: குவியும் இமெயில்கள்


டெல்லி : டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்பு தொடர்பாக மூன்றாவதாக வந்துள்ள இமெயிலில் குஜராத்  மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஹுஜி தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக முதலில் ஒரு இமெயில் அனுப்பப்பட்டது. அந்த இமெயில் காஷ்மீரிலிருந்து வந்ததை அறிந்த அதிகாரிகள் சிலரை விசாரித்து கைது செய்தனர்.

இஸ்ரேலால் மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்கு ஆபத்து


ஜெருசலம் : லெபனானின் போராளி இயக்கமான ஹிஸ்புல்லா அமைப்பு மஸ்ஜித் அல் அக்ஸாவிற்கு அடியில் இஸ்ரேல் பூமியைத் தோண்டுவதால் அல் அக்ஸாவிற்கு ஆபத்து என அல்-ஊதில் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன் அன்று வெளியிடப்பட்டுள்ள ஹிஸ்புல்லாவின் அறிக்கையை சுட்டி காட்டி பிரஸ் டிவி நிரூபர் கூறியுள்ளதாவது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த அகழ்வானது முஸ்லிம்களின் முதல் கிப்லாவும் முஸ்லிம் உலகத்தின் தனித்துவமிக்க சின்னமான மஸ்ஜித் அல் அக்ஸாவிற்கு பெரிய ஆபத்தாக அமையும் எனக் கூறியுள்ளது.

சட்டவிரோத வெடிப்பொருட்கள் பறிமுதல் – மகாராஷ்டிரா முதல் இடம்


டெல்லி : இந்த வருட துவக்கத்திலிருந்து ஜூலை மாதம் வரை மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 12,667 கிலோ சட்டவிரோத வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோல், காஷ்மீரில் மட்டும் 2,796 சட்ட விரோத ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து அமைச்சர் எம்.ராமச்சந்திரன் தெரிவிக்கையில், மகாராஷ்டிராவை தொடர்ந்து ராஜஸ்தானில் 11,728 கிலோ, ஆந்திராவில் 7,269 கிலோ என சட்டவிரோத வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.

டெல்லி குண்டுவெடிப்பு மிருகத்தனமானது – அப்சல் குரு


டெல்லி : கடந்த புதனன்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு கோழைத்தனமானது மட்டும்மல்லாமல் மிருகத்தனமானது என்பதாக பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தற்போது டெல்லி சிறையில் வாடிவரும் அப்சல் குரு கூறியுள்ளார்.

எந்த ஒரு மதமும் அப்பாவிகளை கொலைச் செய்ய கூறுவதில்லை என்று கூறியுள்ள அப்சல், இதில் என் பெயரை சமந்தப்படுத்துவது என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தாருல் உலூம் மதரஸாவிடம் நட்பு பாராட்ட விரும்பியது – விக்கிலீக்ஸ்


லக்னோ : கடந்த 2008-ஆம் வருடம் 25 ஆம் தேதி நடந்த மாநாட்டில் தீவிரவாதம் இஸ்லாத்திற்கு எதிரான செயல் என பத்வா கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தாருல் உலூம் தேவ்பந்திற்கு கல்வி உதவிகள் மற்றும் சர்வதேச நிகழ்சிகளுக்கு அழைப்பு கொடுப்பதின் மூலம் தெற்கு ஆசியாவில் அமெரிக்க ஆதரவைப் பெற ஏதுவாக அமையும் என நினைத்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கம்பிவட தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

Time Management – நம் வாழ்வில் பின்பற்ற சில வழிகள்!


நேரத்தை தவற விடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும். இன்றைய இயந்திர உலகில் நேரம் என்பது மிக முக்கியமானது. நீங்கள் நேரத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும்? எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்? என்பதற்கான டிப்ஸ் பற்றி கீழே காணலாம்.

இமாம்களின் தியாக சுவடுகள்


அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றிருக்கும் நாம் அந்த மார்க்கத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அறிந்து கொள்ள வேண்டும். இந்த மார்க்கம் எவ்வாறு நம்மை வந்தடைந்ததுஇந்த மார்க்கத்திற்கும் நமக்கும் மத்தியிலுள்ள தொடர்புகள் எவ்வாறு அமையவேண்டும்என்பதையெல்லாம் நாம் புரிந்துக் கொண்டால் தான் இந்த மார்க்கத்தை முழுமையாக நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முடியும்.
 

உள்ளாட்சித் தேர்தல்: நகர்ப் பகுதிகளில் வாக்குப் பதிவு எந்திரம், கிராமப் பகுதிகளில் ஓட்டுச் சீட்டு



சென்னை : தமிழக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தெரிகிறது.

முதல் கட்டத் தேர்தலை அக்டோபர் 19-ம் தேதயும், இரண்டாம் கட்டத் தேர்தலை அக்டோபர் 22ம் தேதியும் நடத்தப்படலாம் என்று மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வியாழன், 8 செப்டம்பர், 2011

டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது


டில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே இன்று நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.
இந்த ஈனத்தனமான செயலுக்கு காரணமான, அதன் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை விரைவில் பிடிக்க மத்திய மாநில அரசாங்கங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஜகாத் வசூலிப்பை உளவுப் பார்க்க வேண்டும் என்னும் சுற்றறிக்கையை திரும்பப் பெறவேண்டும் – பாப்புலர் ஃபிரண்ட்



ஹைதராபாத் : இந்தியாவில் முஸ்லிம்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும் மற்றும் முஸ்லிம் மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் இயக்கங்களை கண்காணிப்பதையும் அவற்றின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாய் இருப்பதையும் தொழிலாக கொண்டுள்ள சில பாசிச சிந்தனை கொண்ட அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் இந்நாட்டின் சாபக்கேடு என்று சொன்னால் அது மிகையாகது. அவ்வாறு  பாசிச சிந்தனை கொண்ட ஒரு சுற்றறிக்கைதான் ஆந்திர காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநரால் தற்போது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர பிரிவுக்கு எதிராக ஆந்திராவில் அமலில் உள்ளது.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?




சுதந்திர காற்று எல்லா மனிதனும் சுவாசிக்க விரும்புவது. பல நூற்றாண்டுகள் அந்நியர்களின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த நம் நாடு, சுதந்திரம் அடைந்து தற்போது உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாக திகழ்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க தேசத்தின் சுதந்திர தினத்தை கொண்டாடுவது நிச்சயம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தர வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக நமது நாட்டில் முஸ்லிம்களுக்கு இந்த மகிழ்ச்சி கிடைப்பதில்லை.

ஈராக்: ஏழுவருடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது


பாக்தாத்:கடந்த 2003 முதல் 2010-ம் ஆண்டு வரை ஈராக்கில் நடந்த குண்டுவெடிப்புகளில் சுமார் பன்னிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களும், இருநூறுக்கும் மேற்பட்ட நேட்டோ படைவீரர்களும் பலியாகியுள்ளதாக புதிய அறிக்கையொன்று கூறுகின்றது.

டெல்லி குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று வழக்கம் போல வந்தது இமெயில்


டெல்லி : டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்கத்-உல்-ஜிகாத் அல்-இஸ்லாமி  (Huji-ஹூஜி) அமைப்பு பொறுப்பேற்புள்ளதாக பல்வேறு ஊடகங்களுக்கு இமெயில் வந்துள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளன.

புதன், 7 செப்டம்பர், 2011

சிறை வாசிகளை விடுதலை செய்யகோரி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக அடிக்கப்பட்ட சுவரொட்டி பிரச்சாரம்


கடையநல்லூரில் குழப்பம் விழைவிக்க முயற்சி…

கடையநல்லூரில் கடந்த சில தினங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற பெயரில் சில பெண்கள் முஸ்லீம்கள் இருக்கும் பகுதிகளான பேட்டையில் வீடுதோறும் சென்று எத்தனை பேர் வீட்டில் இருக்கிறார்கள் அதில் எத்தனை பேர் வெளிநாட்டில் வசிக்கிறார்கள் என்று கணக்கெடுத்து வந்துள்ளனர்.
3 பெண்கள் 1 ஆண் ஆகியோரை காவல்துறை அதிகாரி விசாரித்த போது...



மக்கள் தொகை கணக்கெடுப்பு சில மதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் இப்படியொரு சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் அதொனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் – இருவர் பலி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குர்நூல் மாவட்டம் அதொனியில் மதக்கலவரம் வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் பன்னிரெண்டு பேர் படுகாயமுற்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் 20 காவலர்களும் இதில் அடக்கம். 

நெல்லை மாவட்டம் ரம்ஜான் பெருநாள் விளையாட்டு போட்டி


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் நெல்லை மாவட்டம் பத்தமடை மற்றும் ஏர்வாடியில் வருடம் தோறும் ரம்ஜான் பெருநாள் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகின்றன.இவ்வருடம் பத்தமடையில்
கைப்பந்து மற்றும் சிலம்பாட்டம் போட்டி சிறப்புடன் நடை பெற்றது .

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

ஒரு தீண்டாமை கொடுமை கிராமம் - ஒழிப்பு நடவடிக்கை ( படங்கள் )


பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பேரளி கிராமம்.    இங்கு காலம்காலமாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  

தலித் அல்லாத தெருக்களில் தலித் மக்கள் சைக்கிள் மற்றும் எந்த வாகனங்களிலும் ஏறிச்செல்ல ஊர் 
கட்டுப்பாடு இருக்கிறது.

உடலெனும் பிரபஞ்சம் பித்த நீரே... சக்தி நீர்...

                பித்த நீரானது மனிதனின் எண்ணங்களை நல்வழிப்படுத்தி சிந்தனைகளை சீராக்கி வாழ்வின் உயர் நிலையை அடைய பல்வேறு வகையில் உதவுகிறது.

பித்தத்தை சீர்படுத்தினாலே மனிதன் நோயில்லாத ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம் என்பதை சித்தர்கள்  அன்றே கூறிச் சென்றனர், தற்கால இந்திய முறை மருத்துவர்களும் கூறி வருகின்றனர்.
பித்தமே மனிதனை செயல்படவைக்கும் உயிர்சக்தியாகும். ஆனால் இதுவே அதிகரித்தால் அது அழிக்கும் சக்தியாக மாறிவிடுகிறது.  பித்தமானது கல்லீரலின் செயல்பாட்டினைப் பொறுத்து சுரந்து பித்தப்பையில் சேர்கிறது.  உடற்கூறுகளுக்குத் தகுந்த வாறு அவற்றின் செயல் பாடுகள் அமைகின்றன.  ஒருவர் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தால் பித்தம் அதிகரித்து மறுநாள் காலையில் பித்த செயல் நரம்புகள் நிதானம் இழந்து, கிறுகிறுப்பு, மயக்கம், தலைச்சுற்றல்,  எந்த ஒரு செயலையும் செய்ய இயலாமை, மனச்சோர்வு, உடல் சோர்வு போன்ற வற்றை ஏற்படுத்தும்.

வர்மத்தின் மர்மங்கள் சரசுவாசத்தின் நிலை...

            ரசுவாசத்தின் மூலம் உடலில் உள்ள உயிர் சக்திகள் அனைத்தும் திலர்த காலத்தில் ஒடுங்கி பிரபஞ்ச சக்தியோடு இணைந்து அண்ட சராசரங்களையும், கோள்களின் ஆதிக்கத்தையும் உணரச் செய்கிறது.  இந்த நிலைதான்  சித்தி நிலை, ஞான நிலை, அமிர்த நிலை, தேவர் நிலை என்கின்றனர்.  

நில்... கவனி... புரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் சைக்காலஜி


         சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது.  மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?  ஏன் அடிக்கிறீர்கள்  என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.

செல்போனில் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க நடவடிக்கை



இந்தியாவில் தற்போது 85 கோடிக்கும் அதிகமான செல்போன் உபயோகிப்பாளர்களும், சுமார் 31/2 கோடி தொலைபேசி உபயோகிப்பாளர்களும் உள்ளனர். அவர்களுக்கு அடிக்கடி தேவையில்லாத அழைப்புகளும், எஸ்.எம்.எஸ்.களும் வந்து தொல்லை கொடுப்பதாக புகார்கள் வந்தன.
அந்த நிறுவனங்களை கட்டுப்படுத்தி, உபயோகிப்பாளர்களை சிரமத்தில் இருந்து மீட்க மத்திய தொலை தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த ஆண்டு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.21/2 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டு இருந்தது.

திங்கள், 5 செப்டம்பர், 2011

செருப்பு வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய மாயாவதி: விக்கிலீக்ஸ் அம்பலம்



அரசுப்பணத்தில் மாநிலம் முழுவதும் தனக்கு சிலை வைக்க உத்தரவிட்டு சர்ச்சையை கிளப்பினார் உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி.  அரசு உயர் அதிகாரியை தனது ஷூவை கர்ச்சிப்பால் துடைக்கவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
மேலும் பல சர்ச்சைகளில் சிக்கிய இந்த சர்ச்சை ராணி,   மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்குகிறார். 

ஜப்பானை தாக்கிய தாலஸ் புயலுக்கு 32 பேர் பலி, 57 பேர் மாயம்

டோக்கியோ: ஜப்பானை தாக்கிய தாலஸ் புயலால், நிலசரிபு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இதுவரை 32 பலியாகியுள்ளனர். 57 பேரை காணவில்லை. இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிக்கிறது.

ஜப்பான் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் இயற்கை சீற்றங்களால், அந்நாட்டு மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். நேற்றுமுன்தினம் இரவு துவங்கிய தாலஸ் என்ற பலத்த புயலால், ஜப்பானின் தென் பகுதியில் உள்ள கரையை கடந்தது. ஆனால், அதன்பின்னும் 20 கி.மீ., வேகத்தில் வீசியதால், பலத்த மழைப் பொழிவை ஏற்படுத்தியது.

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம்: 12 வயது சிறுவன் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் காலை 12.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 52 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 6.6 ரிக்டர் என பதிவானது.

கருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ்!



கருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார்மோன்களைத் தருகிறது. கருப்பை அகற்றியவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, கருப்பையை எப்படி பாதுகாப்பது போன்றவை குறித்து விளக்குகிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் சுமதி செந்தில்குமார்.


பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினைமுட்டைப் பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும்.


அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும் சினைப்பையும், கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்.

நம்பர் பிளேட்டில் விதிமுறை மீறல்: நெல்லையில் 100 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு; மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அதிரடி நடவடிக்கை


தமிழகம் முழுவதும் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் விதிமுறைகளை மீறி பதிவு எண்கள் எழுதப்பட்டுள்ளதை தடுக்க அரசு உத்தரவிட்டது. இதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான வாகனங்களில் நம்பர் பிளேட்டில் போக்குவரத்து விதிப்படி எண்கள் எழுதப்படவில்லை.
 

இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் காயிதே மில்லத் ஆற்றிய உரை


தமிழின் பொற்காலம்

(சென்னையில் -1968  நிகழ்ந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் "தமிழின் பொற்காலம்" என்று மாநாட்டு அரங்கில் காயிதே மில்லத் ஆற்றிய தலைமை உரை)
மூத்த மொழி
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை படிக்கும்போது நமக்கு ஏற்ப்படுகின்ற உணர்ச்சி தரம் பிரித்துக் கூற முடியாதது. சிலப்பதிகாரத்தில் என்னென்ன சொற்கள் கையாளப்பட்டனவோ, அத்தனையும் இரண்டே இரண்டு வார்த்தைகள் தவிர இன்றும் நமது தமிழ் மொழியில் வழங்கப்படுகின்றன. " வண்ணமும் கண்ணமும்" என்ற இந்த இரண்டு

எதிர்ப்பு ஐக்கிய அமெரிக்க நிலைப்பாடு தொடர்ந்தும்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா......

கோழிக்கோடு : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதை தெளிவாக அதன் பிரகடனம் மற்றும் நிலையான எதிர்ப்பு ஐக்கிய அமெரிக்க நிலைப்பாட்டை கொண்டு போ என்று செய்தது. அறிக்கை உலகம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்திய வடிவமைப்புகளை எதிராக அதன் வலுவான பிரச்சாரத்தை அடுத்து புதிய அரசியல் வெளிப்பாடுகள் மீது உள்ளது. 

விக்கிலீக்ஸ் 'யார் நிலையான மற்றும் ஐக்கிய அமெரிக்க மற்றும் அதன் ulterior வடிவமைப்புகளை எதிரான தனது நிலைப்பாட்டை நேர்மையான என்று வெளிப்படுத்தியது, பி அப்துல் ஹமீது, இங்கே ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் இன்று அமைப்பின் மாநில பொது செயலாளர் தெரிவித்தது. 

மணப்பாறை அருகே இரு பஸ்கள் மோதியதில் 14 பேர் பரிதாப பலி-30 பேர் படுகாயம்

மணப்பாறை: மணப்பாறை அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த அனைவரும் அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் ஆவர்.

திருச்சியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. எதிர் திசையில் அரசுப் பேருந்து புதுச்சேரியிலிருந்து மதுரைக்கு ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாடு திட்டம் 2011-2012 – ஒரு பார்வை


பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாடு திட்டம் 2011-2012 – ஒரு பார்வை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் சக்திபடுத்துவது மூலமே தேசத்தை சக்திபடுத்த முடியும் என்ற நோக்கத்ததை கொண்ட ஒரு புதிய சமூக இயக்கமாகும். இந்த இயக்கம் அதிகமாக முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டாலும் மற்ற பின்தங்கிய மற்றும் சமூகத்தின் சிறுபான்மை பிரிவுகளையும் இணைத்து செயல்படும் அமைப்பாகும். இது ஒரு சமூக மாற்றத்தை நோக்கி பயனிக்கும் இயக்கமாகும்.

பெல்லாரி சுரங்க ஊழல்: ஜனார்த்தன் ரெட்டி, பிவி ஸ்ரீனிவாஸை கைது செய்தது சிபிஐ


பெல்லாரி: சுரங்க ஊழல் தொடர்பாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி இன்று காலை சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார்.
பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கப் பணிகள் நடந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததில் எதியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் ரெட்டி சகோதரர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ நடத்திய மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்

அச்சன்புதுர் -  நெல்லை மேற்கு மாவட்டம் அச்சன்பதுரில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா நடத்திய மாபெரும் அரசியல் எழுச்சி பொர்க்கூட்டம் மிகவும் சிறப்பான முறையில் நடந்தது. இதில் எஸ்.டி.பி.ஐ -ன் செயல் வீரர்களும் பொதுமக்களும் திரளாக வந்து கலந்து கொண்டனர். 



பொருளாதார வளர்ச்சியைத் தடையாக மாறி வரும் இந்தியர்களின் தங்க மோகம்

டெல்லி: மின்னும் பொன்னைப் பார்ப்பதற்கு பளிச்சென சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இது கடுமையாக பாதிக்கும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்- இதுதான் அதிர்ச்சியாக உள்ளது.

எனது சொத்து மதிப்பு ரூ.51.5 கோடி: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்

சென்னை: எனது சொத்து மதிப்பு 51.4 கோடி ரூபாய் தான் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் குடியரசுக் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான செ.கு. தமிழரசன் பேசுகையில்,

இந்திய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டில் தற்கொலை

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்டில், இந்திய குடும்பம் ஒன்றை சேர்ந்த 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் உள்ள ராஸ் அல் கைமா பகுதியில் இந்தியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தை வசித்து வந்தனர். அவர்களி வீடு கடந்த 3 நாட்களாக திறக்காமல் மூடியே கிடந்தது.

ஹெட்லி.. 'நாங்க சும்மா சத்தம் போடுவோம்'.. எம்.கே.நாராயணனை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்

டெல்லி: மும்பை தாக்குதலில் தொடர்புடைய டேவிட் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு நாங்கள் கோருவது ஒரு கண்துடைப்பு நாடகம் தான் என்று முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறிய விவரத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை நூதன முறையில் சித்திரவதை செய்யும் இஸ்ரேல்

ராமல்லா: இஸ்ரேல் நாட்டில் சிறைகளில் உள்ள சிறைக் கைதிகளுக்கு புதுவித தண்டனைகளை விதித்து கொடுமைப்படுத்துவதாக, மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் பல நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை சிறைபிடித்து வைத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். இவர்களை நூதன முறையில் கொடூரமாக சித்திரவதை செய்கிறார்களாம் இஸ்ரேலியர்கள்.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி வேலூரில் இருந்து 5 நாள் நடைபயணம்: சீமான்

ம் நாளை (6-9-11) முதல் 5 நாட்களுக்கு வேலூரில் இருந்து சென்னைக்கு நாம் தமிழர் கட்சி நடைபயணம் மேற்கொள்கிறது என்று அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் தானே முன்மொழிந்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று

வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்தார் அப்துல்லா என்கிற பெரியார்தாசன்

சென்னை : பேராசிரியர் அப்துல்லா என்கிற பெரியார்தாசன் மதிமுகவில் சேர்ந்துள்ளார்.

தீவிர பெரியார் தொண்டராக விளங்கியவர் பெரியார்தாசன். திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார். சில வருடங்களுக்கு முன்பு திடீரென அவர் மெக்கா சென்றார். பின்னர் இஸ்லாமில் தான் சேர்ந்துள்ளதாக அறிவித்தார். தனது பெயரையும் அப்துல்லா என்று மாற்றிக் கொண்டார்.

இந்த நிலையில், நேற்று மதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்த பெரியார்தாசன் அங்கு கட்சி பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்தார்.

கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சி விமான நிலையத்தில் கைது

கொச்சி: முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி, ராமஜெயம் இன்று காலை கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்ட வாங்கப்பட்ட நிலம், மிரட்டப்பட்டு பறிக்கப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருகிறது உள்ளாட்சித் தேர்தல் திருவிழா-பணிகள் தொடங்கின-10 நாளில் தேதி தெரியும்


சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் திருவிழாவைத் தொடர்ந்து அடுத்து உள்ளாட்சித் தேர்தல் பெருவிழா வரவுள்ளது. தேர்தல் தேதி இன்னும் 10 நாட்களில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராசாத்தி அம்மாளின் கட்டாயத்தால் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார் கருணாநிதி-விக்கிலீக்ஸ்


சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தனது மகள் கனிமொழி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. ஆனால் துணைவி ராசாத்தி அம்மாளின் கட்டாயத்தால்தான் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார் கருணாநிதி என்று முன்னாள் அமெரிக்கத் துணைத் தூதர் டென்னிஸ் ஹாப்பர், அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

ஃப்ளோடில்லா தாக்குதல்: ஐ.நா. அறிக்கைக்கு கடும் கண்டனம்


பொருளாதாரத் தடை மூலம் சொல்லொணா துயரத்தை அனுபவித்து வரும் ஃபலஸ்தீனர்களுக்கு உதவுவதற்காக புறப்பட்ட துருக்கியின் தலைமையில் வந்த உதவிக் கப்பல்களை இஸ்ரேல் அநியாயமாகத் தாக்கியது குறித்த ஐ.நா. அறிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ஒரு கொருவர்த்திச் சுருள் 100 சிகரெட்டுகளுக்குச் சமம்: அதிர்ச்சிகர தகவல்


புதுதில்லி:ஒரு கொசுவர்த்திச் சுருள் உமிழும் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்குச் சமமானது என்றும், இது இந்தியாவில் ஏராளமானோரைப் பாதிக்கிறது என்றும் ஒரு நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.
“நிறைய மக்களுக்கு இது தெரிவதில்லை. ஆனால் ஒரு கொசுவர்த்திச் சுருள் உங்கள் நுரையீரலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு 100 சிகரெட்டுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு ஈடானது. இது சமீபத்தில் மலேசியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்று நெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம் (Chest Research Foundation) இயக்குனர் சந்தீப் சால்வி கூறினார்.