நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 5 செப்டம்பர், 2011

இந்திய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டில் தற்கொலை

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்டில், இந்திய குடும்பம் ஒன்றை சேர்ந்த 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் உள்ள ராஸ் அல் கைமா பகுதியில் இந்தியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தை வசித்து வந்தனர். அவர்களி வீடு கடந்த 3 நாட்களாக திறக்காமல் மூடியே கிடந்தது.


அந்த வீ்ட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதியினர் போலீசாரிடம் புகார் செய்தனர். இதையடுத்து அந்த வீட்டின் கதவை உடைத்த போலீசார் உள்ளே சென்று பார்த்த போது, 44 வயது மதிக்கத்தக்க ஒருவர், அறையின் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து உடல் தொங்கி கொண்டிருந்தார்.

வீட்டின் படுக்கையறயில் 31வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் தற்கொலை செய்திருந்தார். மற்றோரு அறையில் 8 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகம் மூடிய நிலையில் காற்றில் தொங்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 3 பேரின் உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்காக உண்மையான காரணம் தெரியவில்லை. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தற்கொலை செய்ய கொண்ட நபருக்கு அதிக கடன்கள் இருந்ததாகவும், 31 வயது பெண் அவரது மனைவி என்பதும், 8 வயதில் சிறுமி அவரது மகள் என்பதும் தெரிகிறது. அதிக கடன்களால் குடும்பத்தினர் தற்கொலை முடிவு செய்திருக்கலாம் என தெரிக்கிறது.