நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 5 செப்டம்பர், 2011

பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாடு திட்டம் 2011-2012 – ஒரு பார்வை


பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாடு திட்டம் 2011-2012 – ஒரு பார்வை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் சக்திபடுத்துவது மூலமே தேசத்தை சக்திபடுத்த முடியும் என்ற நோக்கத்ததை கொண்ட ஒரு புதிய சமூக இயக்கமாகும். இந்த இயக்கம் அதிகமாக முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டாலும் மற்ற பின்தங்கிய மற்றும் சமூகத்தின் சிறுபான்மை பிரிவுகளையும் இணைத்து செயல்படும் அமைப்பாகும். இது ஒரு சமூக மாற்றத்தை நோக்கி பயனிக்கும் இயக்கமாகும்.


பாப்புலர் ஃப்ரண்ட் இத்தகைய சமூக மாற்றத்தை ஏற்படுத்த குறிப்பிட்ட சில சேவைகளையோ அல்லது நிவாரண உதவிகளை செய்வதால் மட்டுமே கொண்டுவர முடியாது என்று நம்புகிறது. மாறாக தனி நபரை சக்திபடுத்தலிருந்து அனைத்து மக்களும் பங்கேற்கும் நம் ஜனநாயக முறையை சக்திபடுத்து வரை போன்ற  பரந்து விரிந்த பல துறைகளிலும் கவனம் செலுத்துகிறது. இந்த சமூக மாற்றத்தை கொண்டு வருவதில் பாப்புலர் ப்ரண்ட் உறுதியாக நின்று செயல்படுகிறது. எனவே தான் சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்து போராட்டங்களிலும் முன்னனியிலிருந்து செயல்படுகிறது.

நாட்டின் அனைத்து கடைகோடிகளிலும் தன் தொண்டர்களை கொண்ட வெகு ஜன மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் இரண்டு முக்கிய அம்சங்களை அவதானிக்கிறது. முதலில், ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு மற்றபிற சமூகங்களுக்கு இணையாக சம நீதி கிடைக்கப்பெற வேண்டும். இரண்டாவது, ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகத்தின் மக்களை அணிதிரட்டி தங்களது ஆற்றல்களை வளர்ச்சி திட்டங்களில் பால் முறையாக பயன்படுத்தவேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட்டின் அனைத்து திட்டங்களும் இந்த இரண்டு அம்சங்களும் உள்ளடக்கி செய்யபட்டுவருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாடு திட்டங்கள் பலவற்றை தீட்டி, பொது மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கவும், மற்றும் இந்த திட்டங்களை செயல்படுத்துவோர்க்கு வழிகாட்டுதலும் வழங்கி வருகிறது.

அடிப்படை தகவல்

நம் நாடு மனித வளர்ச்சி, இராணுவ வலிமை மற்றும் நிதி வளர்ச்சி அடிப்படையில் ஒரு வேகமாக வளரும் நாடு. ஆனால் நடைமுறையில், இந்திய மக்கள் தொகையில் ஒரு பெரும் சதவீதத்தினர் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகின்றார்கள். உலகிலே மிகவும் பின்தங்கிய மற்றும்  பசியால் பாதிக்கப்படும் மக்கள் வாழும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது. கல்வியறிவின்மை, நோய்வாய்படுதல், ஊட்டச்சத்தின்மை, குழந்தை இறப்பு ஆகிய விஷயங்களில் வளரும் நாடுகளிலே இந்தியா கீழ் நிலையில் உள்ளது.

பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் வசதி வாழ்வாதாரங்கள் எதுவுமில்லை, தங்குமிடம் வீடு வசதி, குழந்தைகளின் அடிப்படைக் கல்வி, மருத்துவ வசதி என எதுவுமில்லை. அரசாங்க நிதி உண்மையான பயனாளர்களை சென்றடைவதில்லை. வசதியிருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளி மிக அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.

அரசாங்க நலத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட அரசாங்க நிதி உண்மையான பயனாளிகளான நமது சமூகத்திற்கும் நம் ஊர் மக்களுக்கும் நேரடியாக கிடைக்கச் செய்ய, அவர்கள் ஏமாற்றப்படாமல் இருக்க தொடர் முயற்சி அவசியம் என்பதில் சந்தேகமிருக்க முடியாது.  வறுமையை முற்றிலும் ஒழிக்க பிற ஏழைகளின் வாழ்வை வளப்படுத்த அவரவர்கள் தங்கள் சொந்த வளங்களை பயன்படுத்தி முன்னேறவேண்டும். வெகுஜன மக்களை வலிமைப்படுத்த அவர்களின் பிரச்சினைக்கு தீர்வாக பாப்புலர் ஃப்ரண்ட்டின் ஆத்மார்த்த முயற்சியே இத்தகைய சமூக மேம்பாட்டுத்திட்டம். நமது திட்டங்கள் பின் வருமாறு -

1.    கல்வி வளர்ச்சிக்கு ஊக்குவித்தல்
            பாப்புலர் ஃப்ரன்ட் கவனம் செலுத்தும் மிக முக்கிய பகுதியில் ஒன்று கல்வி வளர்ச்சி. மிகப்பெரிய முதலீட்டுடன் கல்வி நிருவனங்களை தொடங்குவதைவிட தற்போது இருக்கக்கூடிய வசதிகளைக்கொண்டு முறையாக கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி கொடுத்து ஊக்குவிப்பது , பெற்றோர்களையும் சமூகத்தில் பெரியவர்களையும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆர்வமூட்டுதல், பொருளாதாரரீதியாகவும் கல்விரீதியாகவும் உதவி செய்வது, மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவி செய்து ஆதரிப்பது போன்ற பல்வேறு திட்டங்களுக்கு முன்னிரிமை கொடுத்து வருகிறது. குறிப்பாக கீழ்கண்ட ஐந்து திட்டங்களை  செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

·         ஸ்கூல் சலோ
·         சர்வசிக்க்ஷா கிராம் - முழு கல்வியறிவு பெற்ற கிராமத்திட்டம்
·         கல்வி வழிகாட்டுதல்கள்
·         கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
·         கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்தல்

·         ஸ்கூல் சலோ
       மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஸ்கூல் சலோ என்ற தேசிய அளவிலான பிரச்சாரம் மேற்கொள்கிறது. இரண்டுமாத  பிரச்சாரம் காலம் கோடை விடுமுறை பள்ளிகள் திறக்கப்படும் காலத்தைப் பொறுத்து அந்தந்த மாநிலத்திற்கு தகுந்தாற்போல் இருக்கும். இந்த ஸ்கூல் சலோ அல்லது பள்ளிக்கூடம் செல்வோம்  கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கீழ்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்படும்
       அடிப்படைக் கல்வி பெறாத பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு கிராமங்களில் நட்த்தப்படும். குறிப்பாக பொருளாதார ரீதியாக மிகவும் பிந்தங்கியுள்ள கிராமங்களில் மேற்கொள்ளப்படும்.
       பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்களை பற்றி உள்ளூர் கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து படிப்பை தொடர ஆவன செய்யப்படும்.
       வீடுவீடாகவும் பொது நிகழ்ச்சிகளின் மூலமும் பெற்றோர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் விளக்கப்படும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
       பொருளாதார ரீதியில் வசதிபடைத்த செல்வந்தர்கள் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அணுகி அவர்களின் மூலமாக தேவையுள்ள மாணக்கர்களின் சீருடை, நோட்டு புத்தகங்கள் போன்ற கல்வி உபகரணங்கள் விநியோகிக்கப்படும். 
       பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் இந்த முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறிய புத்தகங்கள் விநியோகிக்கப்படும். மாணவர்கள் பேரணி, தெருவோர விழிப்புணர்வு நாடகங்கள் போன்றவை நடத்தப்படும்.

·         சர்வசிக்ஷா கிராம் திட்டம்
இது ஒரு முழு கல்வி அறிவு பெற்ற கிராம திட்டம். வெறும் வழிகாட்டுதல் அல்லது ஒருசில பொருளாதார உதவிகள் மட்டுமே இந்த தேசத்தின் கல்வித்தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக அமையாது. தொடர்ச்சியான கண்காணிப்பும் உதவிகளும் அவசியம். எனவே முழுமையான கல்வியறிவு பெற்ற கிராமமாக மாற்றுவது என்ற இத்திட்டம் அதற்கு உத்திரவாதம் அளிக்கிறது.  இது ஒரு கிராமத்தையே முழுமையாக  தத்தெடுத்து அந்த கிராமத்தில் ஆறு முதல் பதிநான்கு வயதிற்குட்பட்ட வயது குழந்த்தைகள் சீரான முறையான தொடக்கக் கல்வி பயில்வதை உறுதி செய்கிறது.

·         நமது ஸ்கூல் சலோ திட்டத்தின் பிரச்சாரத்தின் போது அடிப்படை கல்வி உடனடியாக தேவைப்படும் கிராமங்கள் கண்டறியப்படும்.

·         மாணக்கரின் கல்வியறிவு மற்றும் அவர்களது பெற்றோர்களின் பொருளாதார நிலை பற்றி கணக்கெடுக்கப்படும்.
·         பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட அனைவரையும் பள்ளிக்கூடத்தில் மீண்டும் சேர்த்துவிட ஏற்பாடு செய்யப்படும்.
·         ஆறுவயது நிரம்பிய எல்லா குழந்தைகளும் கல்வி பயின்று வருவதை இத்திட்டம் உறுதி செய்யும்.
·         ஆரம்பக்கல்விகூடம் இல்லாத பகுதிகளில் அரசு சாரா தொண்டு நிறுவனகள் அல்லது இயக்கங்கள் மூலம் ஆரம்பக் கல்விக்கூடம் அல்லது ஒரு நபர் பள்ளிக்கூடங்கள் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
·         மாணவர்களுக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
·         குழந்தைகள் மனவள ஆலோசகர்கள் மற்றும் உளவியல் மருத்துவர்கள் துணைகொண்டு பள்ளிக்குழந்தைகளின் மன ஆரோக்கியம் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.
·         பெண்களுக்கு சிறிய அளவிலான சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் ஊக்குவிக்கப்படும். இதன்மூலம் குழந்தைகளை அவர்கள் வேலைக்கு அனுப்புவதை தடுக்க முடியும்.
·         இலவச டியூசன் சென்டர்கள் இலவச பயிற்சி வகுப்புகள் நிறுவப்படும். இதன்மூலம் பிற பள்ளிக்கூட மாணவர்களுடன் இவர்களும் போட்டிபோட்டு படிக்க முடியும்.
·         இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும் வெற்றிபெறச் செய்யவும்  தொடர்ச்சியாக பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப் படுவதைக் கொண்டு  உறுதிசெய்யப்படும்.

·         மேற்படிப்பு கல்வி வழிகாட்டுதல்
      உயர்கல்வியை தேர்ந்தெடுக்க முறையான வழிகாட்டுதல் இல்லாதது மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு  மிகப்பெரிய தடையாக உள்ளது. தேவையுள்ள எல்லா மாணவர்களுக்கும் போதுமான சரியான வழிகாட்டுதல் இருக்கவேண்டும். அதற்கான ஆரம்ப முயற்சியாக அதிகமான கிராமங்களில் மற்றும் பள்ளிக்கூடங்களில் மேற்படிப்பு வழிகாட்டும் வகுப்புகள் நடத்தப்படும். தற்போது மாநில அளவில் ஒரு மாணவர்கள் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மையமும், படிப்படியாக வரும் காலங்களில் எல்லா மாவட்டங்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படும்.
மத்திய மாநில அரசாங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் கொடுக்கும் கல்வி உதவித்தொகைகளை மாணவர்கள் சிரமமின்றி பெறுவதற்கு உதவிகள் செய்யப்படும்.

·         விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

பிற பகுதிகளில் இயன்ற அளவு கீழ்காணும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
·         கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஊக்குவித்தல்
·         சுலபமாக கற்கும் வழிமுறைகள் சொல்லிக் கொடுத்தல்
·         தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் நுணுக்கங்கள் சொல்லிக் கொடுத்தல்
·         பாதுகாவலர்கள் பெற்றோர்களுக்கான ஆலோசனை
·         வெற்றிபெறுவதற்கான யோசனை

·         கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்

எல்லா மாவட்டங்களும் கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும். அதனை இந்த ஆண்டே தொடங்கவேண்டும் என்று தேசிய தலைமை அறிவித்துள்ளது. தேசிய தலைமை மூலம் வழங்கப்படும் உதவித்தொகை நீங்கலாக அந்தந்த மாநிலங்கள் 2011 ல் சுமார் 1000 மாணவர்களுக்கும் 2012ல் சுமார் 3000 மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை பெற மாணவர்களை தேர்ந்தெடுக்க நல்ல மதிப்பெண் மற்றும் ஏழ்மை நிலை ஆகியவை தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.  


2. வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் :

இதனை மூன்றாக வகைப்படுத்தலாம்.
·         ஒன்று கடினமாக உழைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி யாரையும் சார்ந்திராமல் சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கலாம்
·         இரண்டு ஒருவரின் மனநிலைக்கேற்ப பொருத்தமான வேலையை தேர்ந்தெடுக்க அல்லது பெற சரியாக வழிகாட்டலாம்
·         மூன்றாவதாக படித்த இளைஞர்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை பெற அல்லது சுயதொழில் தொடங்க தகுதியுள்ளவர்களாக ஆக்கலாம்.

இதன் அடிப்படையில் கீழ்கண்ட ஒருசில பணிகள் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது
·         மாநில அளவிலான வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம் இந்த ஆண்டில் 2011 ல் ஏற்படுத்துதல் மாவட்ட அளவிலான மையங்கள் அடுத்த ஆண்டு 2012 ல் தொடங்குதல்
·         பொதுமக்கள், கல்லூரியில் பயிலும் மாணவர்கள், படித்த பட்டதாரிகள், மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழிற்கல்வி மற்றும் டிப்ளமோ பயின்றவர்கள் என அவரவர்கள் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்கள் நடத்துதல்
·         அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களிலுள்ள வேலைவாய்ப்புகள் பற்றி விளம்பரம் செய்து அந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க உதவுதல்.
·         போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல்
·         போட்டித்தேர்வுகளிலும் நேர்முகத்தேர்விலும்  வெற்றிபெற வல்லுநர்களைக்கொண்டு ஆளுமை வளர்ச்சிக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல்
·         ஆடைகள் தயாரிப்பு, தச்சு தொழில், கட்டிட தொழில், பிளம்பிங்க் மற்றும் வயரிங்க் போன்ற  பாரம்பர்ய தொழில் வளர்ச்சிக்கு சிறிய நிறுவனங்கள் நிறுவுதல்.

3.   சுகாதாரம்

ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் அவசியம் பேணப்படவேண்டிய விஷயங்கள். குறிப்பாக இக்காலகட்டத்தில் நோய்கள் மிக விரைவாக பரவுவதாலும் மருத்துவ சிகிச்சை ஏழைகளுக்கு எட்டாக்கனியாக அதிக செலவுபிடிப்பதாலும் நோய் வரும் முன்பாக ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் பேணுவது மிக மிக அவசியமாகிறது. வளமான தேசத்திற்கு ஆரோக்கியமான குடிமக்கள் அவசியம் என்று பாப்புலர் ஃப்ரண்ட் நம்புகிறது. ஆரோக்கியமாக வாழ சுத்தமான சுகாதாரமான வீடு மற்றும் சுற்றுப்புறசூழல், உடல் சுத்தம் பேணுதல், கழிப்பிட வசதி, ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், முறையான உடற்பயிற்சி ஆகியவை அடிப்படையான விசயங்கள். சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுகாக்க பாப்புலர் ஃப்ரண்ட் கீழ்க்காணும் நிகழ்ச்சிகளை நடத்தும்.

·         தேசிய சுகாதார வாரம்
ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் கடைபிடிக்கப்படும். மாரத்தான் தொடரோட்டம்  போன்ற மிகப்பெரிய பொது நிகழ்ச்சிகளின் மூலம் தொடங்கப்படும். இந்த பிரச்சாரம் ஒவ்வொருவரும் தினசரி ஏதேனும் உடற்பயிற்சி அல்லது ஓட்டப்பயிற்சி போன்றவை மேற்கொள்ள ஆர்வமூட்டும்.

·         கிராமங்களில் தடகளப்போட்டிகள், விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படும்.
·         தேசிய சுகாதார வாரத்தில் ஒரு நாள் கிளீனிங்க் டே என்ற சுத்தம் செய்யும் நாள் கடைபிடிக்கப்பட்டு அன்று அரசு மருத்துவமனை, அரசு பள்ளிக்கூடம், பேரூந்து நிலையம், சந்தை போன்ற பொது இடங்கள் விழிப்புணர்விற்காக சுத்தம் செய்யப்படும்.
·         ஆரோக்கியம் சுகாதாரம் பற்றிய கையேடுகள் நோட்டீஸ்கள் அச்சிட்டு விநியோகிக்கப்படும்.
·         யோகா கலையை பரப்ப யோகா செய்துகாட்டும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.

·         விழிப்புணர்வு வகுப்புகள்
கீழ்காணும் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள்,குறுந்தகடு ஒளிபரப்பு நிகழ்ச்சிகள், தெரு நாடகங்கள் நடத்தப்படும்.
·         உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி பரப்புதல்
·         ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம்
·         மன வளம் பேணுதல்
·         பொது சுகாதாரம்
·         சுத்தம்
·         சிறிய நோய்களுக்கான பாரம்பர்ய இயற்கை வைத்திய முறைகள்
·         போதை பொருளால் கேடுகள்
·         புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தின் ஆபத்துகள்
ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தப்படும்.

·         சுத்தம் செய் வெற்றி பெறு
குடிசைப்பகுதிகளில் சுத்தமான சுகாதாரமான சுற்றுப்புறச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசின் சுகாதாரத்துறை உதவிகொண்டு  ஒத்துழைப்புடன் ஆவணப்படங்கள் மற்றும் சிறப்பு வகுப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

·         கல்லூரி மாணவர்கள் ஒத்துழைப்புடன் சுத்தம் செய்யும் சிறப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்
·         கழிப்பிடம் மற்றும் குளியலறை தற்போது இல்லாத பகுதிகளில் கட்டிக் கொடுத்தல்
·         வீட்டை சுத்தமாக சுற்றுப்புறச்சூழ்லை சுகாதாரமானதாக வைத்திருக்க போட்டிகளை அறிவித்து நன்கு பராமரித்துவந்து முதல் நிலையில் வெற்றி பெறும் குடும்பங்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குதல்.

·         இலவச மருத்துவ முகாம்கள்

அரசாங்கம் மற்றும் சேவை மனப்பான்மையுள்ள தனியார் மருத்துவமனை அல்லது மருத்துவர்கள் இயக்கங்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல்.
மருத்துவர்களின் இலவச மருந்துகள் அல்லது உள்ளூர் தனவந்தர்களின் உதவியுடன் ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகள் விநியோகித்தல்
நமது இலக்கு இந்த வருடத்தில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ முகாம் நடத்துதல்.

·         பேலியேடிவ் கிளினிக்

கேன்சர் மற்றும் சிறுநீரக கோளாரால் பாதிப்புக்குள்ளான  நோயாளிகளின் விகிதம் இக்காலகட்டத்தில் அதிகரிப்பதால் அவர்களுக்கு  ஆறுதலளிக்கும் வகையில் குறிப்பாக  பொருளாதாரரீதியாக பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் இச்சேவை மிகவும் அவசியமாகியுள்ளது. இந்த துறையில் முக்கிய தடையாக இருப்பது பெரும் பொருளாதார சுமை. எனினும் நம்மாலான சிறிய முயற்சிகள் முதலில் ஏற்படுத்த முடியும். படிப்படியாக பொருளாதார வசதிவாய்ப்பை பொறுத்து விரிவுபடுத்தலாம்.

·         முதலில் நமது சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய பேலியேடிவ் கிளினிக்கை பொதுமக்கள் நன்கு உபயோகப்படுத்த வழிகாட்டவேண்டும்
·         இது போன்ற  வசதிகள் இல்லாத பகுதிகளில் இத்தகைய கிளினிக்குகள் கட்டுவதற்கு முதலீடு செய்யும் உள்ளூர் அரசு சாரா நிறுவனத்தை கண்டறிய வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் அதற்கு தேவையான தன்னார்வ தொண்டர்களை  கொடுத்து உதவும். 
·         முதல் கட்டமாக பெங்களூரில் பேலியேடிவ் கிளினிக் ஒன்றும் கேரளா மற்றும் கர்நாடகத்தில் தலா ஒரு டையாலிசிஸ் யூனிட்டும் இந்த ஆண்டு நிறுவப்படும். கிடைக்கும் வரவேற்பையும் ஆதரவையும் பொறுத்து இந்த சேவைகள் பிற இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

4.பொருளாதார வளர்ச்சி

பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் ஏழை எளியவர்களுக்கும் பல்வேறு வகையில் ஊனமுற்றவர்களுக்கும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. எனினும் அரசின் நலத்திட்டங்கள் மட்டுமே அவர்களின் எல்லா தேவையையும் பூர்த்திசெய்வதில்லை. மக்கள் தங்களின் வாழ்வாதாரதிற்கும் வளர்ச்சிக்கும் தங்களின் சொந்த திட்டங்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும் கவனம் செலுத்த வேண்டும்.

·         இலவச ரேசன் பொருட்கள் வழங்குதல்
அவசர உதவிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு இலவச உணவுப் பொருட்கள், உடை, வீட்டை சரிசெய்ய தேவையான பொருட்கள் போன்றவைகளை கொண்டு உதவி செய்தல். இது மிக அத்தியாவசிய பகுதிகளுக்கு மட்டும் என வரைமுறைப்படுத்தப்படும். இத்திட்டங்கள் அம்மக்களை சுயமாக வாழ வழிவகை செய்யும் பட்சத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

·         சுய வேலைவாய்ப்புத்திட்டம்
டில்லி உத்திரபிரதேசம் பீஹார் மேற்கு வங்காளம் மற்றும் ஹர்யானா ஆகிய மாநிலங்களில் 10 இடங்களில் இத்திட்டம் இந்த ஆண்டே அமுல்படுத்தப்படும். மேலும் 25 இடங்கள் அடுத்த ஆண்டு 2012 ல் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படும்.
·         வட்டியில்லா சிறுகடன் உதவி திட்டம் :  சிறு வணிகர்களுக்கும் திறமையான தொழிலாளிகளுக்கும் வட்டியில்லாத சிறு கடனுதவிகள் வழங்குதல்.
·         தொழிற்பயிற்சி: தச்சு கட்டிட வேலை நெசவு கைவினைப் பொருட்கள் போன்ற பாரம்பர்ய தொழிற் திறமையுள்ளவர்கள் அவர்களின் தொழிலை ஊக்குவிக்கவும் நவீன கருவிகள் பயன்படுத்த கையாள் அவர்களுக்கு பயிற்சியளித்தல்
·         கூட்டுறவு சங்கங்கள் மூலம் குடிசைத்தொழில் பொருட்களை விற்பனை செய்தல்

5.அடிப்படை வசதிகள்

குடிதண்ணீர், உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மனித வாழ்வின் அடிப்படை தேவை. சாலை வசதி போக்குவரத்து வசதி, எரிபொருள் மின்சாரம் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். இத்தகைய அடிப்படை வசதிகள் இல்லாத பின்தங்கிய பகுதிகள் குறித்த கணக்கெடுப்பை பாப்புலர் ஃப்ரன்டின் உள்ளூர் கிளை குறிப்பாக கிராமப்புறங்களில் கணக்கெடுக்க கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் சிறிய நலத்திட்டங்கள் மூலம் ஏழை குடும்பங்களின் துயர் துடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

·         குடிதண்ணீர் வழங்குதல் நீர் நிலைகளை பாதுகாத்தல், மழைநீர் சேகரிப்பு, பொதுக் கிணறுகள், ஆழ்துழை கிணறுகள், நீர் விநியோகம் செய்யும் அமைப்புகளை பாதுகாத்தல் போன்றவை செய்யப்படும்
·         ஏழை குடும்பங்களின் புனர்வாழ்விற்காக வீட்டு வசதி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்
·         குடிசைப்பகுதிகளில் கழிவுநீர் மற்றும் குப்பை அகற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
·         பொதுக் கழிப்பிட வசதி அல்லது குறைந்த செலவில் குடும்பத்திற்கொரு கழிப்பறை கட்டிக்கொடுக்கப்படும்.
·         அரசியல் மற்றும் நிர்வாக சபைகளின் உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டும், அரசுசாரா நிறுவனங்களின் துணைகொண்டும் சொந்த திட்டங்கள் தயாரித்து நடைமுறைப்படுத்தியும்,  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமும் அடிப்படை வசதிகள் இல்லாதவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வழிமுறைகள் ஆராய்ந்து கண்டறியப்பட்டு உதவிகள் செய்யப்படும் 

6.பேரிடர் நிவாரணம்

இயற்கை சீரழிவுகள் ஏற்படும்போது தன்னார்வ தொண்டர்கள் அதிக அளவில் தேவைப்படும். இதற்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து அவசர தேவைகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். அவர்களுக்கு கீழ்கண்ட துறைகளில் சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கப்படும்.

·         முதல் உதவி செய்வதற்கான பயிற்சி
·         பேரிடர் மேலாண்மை பயிற்சி
·         நீச்சல் மற்றும் தீயணைப்புக்கான பயிற்சி
·         மீட்பு நடவடிக்கைகள்
·         நிவாரண பொருட்கள் சேகரிப்பது மற்றும் விநியோகிப்பது
·         மறுவாழ்வு பணிகள்

7.கலாச்சார மேம்பாடு

பல்வேறுபட்ட உள்ளூர் சமூகத்தின் தனித்துவ கலாச்சார பாரம்பர்யத்தை அடையாளத்தை பாதுகாப்பது மற்றும் அதனை வளர்ப்பது அரசாங்கம் மற்றும் சிவில் குடிமக்கள் மீது விதிக்கப்பட்ட கடமையாகும்.மொழி, இலக்கியம், கலை போன்றவை நவீன கலாச்சாரத்தாலும் பிற கலாச்சார உட்செரிதலாலும் ஒதுக்கப்பட்டும், அழிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.  நாட்டின் பல்வேறுபட்ட இனக்குழுக்கள் மற்றும் சமூகத்தின் கலாச்சார அடையாளத்தை பாதுகாக்க பல்வேறு பிராந்தியங்களில் கீழ்காணும் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.   
·         பாதுகாக்கப்படவேண்டிய பழங்கால கையெழுத்து பிரதிகள் இதுவரை வெளியிடப்படாத அரிய வகை ஆவணங்களை பாதுகாக்க முயற்சி மேற்கொள்தல்
·         பாரம்பர்ய பழங்கால நூல்களை வெளியிடுவது
·         பாரம்பர்ய பாடல்கள் கவிதைகளை சேகரிப்பது
·         பாரம்பர்ய கலைகளில் பயிற்சி பெறுதல்
·         குழுவாக சேர்ந்து செய்யப்படும் கலை நிகழ்ச்சிகளை ஊக்குவித்தல்
·         கலாச்சாரம் பாரம்பர்யம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வது ஆவணப்படுத்துவது

8.  தன்னார்வ தொண்டர்களின் குழு ஒருங்கிணைப்பு

மேற்கூறப்பட்ட தேசிய அளவிலான விரிவான  சமுதாய மேம்பாட்டுத்திட்டங்களை செம்மையாக செயல்படுத்த அர்ப்பணிப்பும் தியாகமனப்பான்மையுள்ள தன்னார்வ தொண்டர்களின்  ஒருங்கிணைப்பு இல்லாமல் இது சாத்தியமாகாது. எனவே பாப்புலர் ஃப்ரண்ட் இதற்கான ஏற்பாட்டை அனைத்து மட்டங்களிலும் செயல்படுத்துவதற்காக தொண்டர்களை தயார்படுத்தியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்டின் மேல்மட்ட  தேசிய செயற்குழு முதற்கொண்டு கடைநிலை ஏரியா கவுன்சில் வரை சமூக மேம்பாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மாநில அளவிலான திட்ட ஒருங்கிணைப்பாளர் முறைப்படி கண்காணிப்பார். குறிப்பிட்ட கால இடைவெளியில் திட்டத்தின் செயல்பாடு குறித்து  மீளாய்வு செய்வார். இந்த சிறிய அளவிலான மைக்ரோ திட்டங்களுக்கு தேவையான நிதியாதாரம் அந்தந்த பிராந்திய அளவில் அல்லது உள்ளூரில் திரட்டப்படும். பாப்புலர் ஃப்ரண்ட் கீழ்காணும் மனித வள மேம்பாட்டு நிகழ்சிகளை தொடர்ந்து நடத்தும்.

·         அந்தந்த ஏரியாக்களில் தன்னார்வ தொண்டர்களின் மாதாந்திர கூட்டம்
·         மூன்று  மாதத்திற்கொருமுறை மாவட்ட அளவிலான அரை நாள் அமர்வு
·         வருடத்திற்கொருமுறை மாநில அளவிலான பயிற்சி முகாம் (ரிஃப்ரெசர் கேம்ப்) ஆகியவை.