வேலூரில் நேற்றுமாலை விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. வேலூர் மாங்காய் மண்டி எதிரே உள்ள தெருவில் ஊர்வலம் சென்று தேசிய நெடுஞ்சாலை வழியாக சதுப்பேரிக்கு செல்ல போலீசார் ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிலையில் கொணவட்டம் பகுதியில் வைக்கப்பட்ட 7 சிலைகள் கொணவட்டம் சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் அந்த சிலைகள் ஊர்வலமாக சென்று கொண்டு இருந்தன. கொணவட்டம் பெரிய மசூதி அருகே சென்றபோது ஊர்வலத்தின் முன்பு மேளம் அடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது மசூதி இருகே இருந்தவர்கள் இங்கு மேளம் அடிக்ககூடாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது.
அப்போது திடீரென ஊர்வலத்தின் மீது கற்கள் வீசப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அத்துடன் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் சூழல் உருவானது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு ஏ.ஜி.பாபு இருதரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி னார். அப்போது கல்வீசியவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் பெரிய மசூதி வழியாக ஊர்வலம் செல்ல அனுமதிக்ககூடாது என்றுகூறினார்கள்.
இந்த பிரச்சினை குறித்து அடுத்த ஆண்டு உதவி கலெக்டர் தலைமையில் அமைதிக் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் கூடுதல் போலீசார் பாதுகாப்புடன் அங்கிருந்து விநாயகர் சிலைகள் சதுப்பேரி ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. சம்பவ இடத்தில் ஆயுதப்படை அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.