நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 5 செப்டம்பர், 2011

மணப்பாறை அருகே இரு பஸ்கள் மோதியதில் 14 பேர் பரிதாப பலி-30 பேர் படுகாயம்

மணப்பாறை: மணப்பாறை அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த அனைவரும் அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் ஆவர்.

திருச்சியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. எதிர் திசையில் அரசுப் பேருந்து புதுச்சேரியிலிருந்து மதுரைக்கு ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது.

அப்போது திருச்சி-துவரங்குறிச்சி இடையே, மணப்பாறை அருகே கோவில்பட்டி என்றஇடத்தில் இரு பேருந்துகளும் வந்தபோது, திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த கோர விபத்தில் 14 பேர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை இடிபாடுகளிலிருந்து மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

தனியார் பேருந்தில் பயணித்த யாரும் உயிரிழக்கவில்லை. மாறாக அரசுப் பேருந்துதான் பெரும் சேதத்தை சந்தித்தது. இறந்த 14 பேருமே அரசுப் பேருந்தில் பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.