நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

வர்மத்தின் மர்மங்கள் சரசுவாசத்தின் நிலை...

            ரசுவாசத்தின் மூலம் உடலில் உள்ள உயிர் சக்திகள் அனைத்தும் திலர்த காலத்தில் ஒடுங்கி பிரபஞ்ச சக்தியோடு இணைந்து அண்ட சராசரங்களையும், கோள்களின் ஆதிக்கத்தையும் உணரச் செய்கிறது.  இந்த நிலைதான்  சித்தி நிலை, ஞான நிலை, அமிர்த நிலை, தேவர் நிலை என்கின்றனர்.  

இந்நிலையை அடைந்துதான் காலத்தால் அழியாத மருத்துவப் பொக்கிஷங் களைக் கண்டறிந்து சொன்னார்கள் சித்தர்கள்.  மேலும், வான சாஸ்திரம், சோதிட சாஸ்திரம் போன்ற வற்றையும் படைத்தார்கள்.

இவர்களால்தான் மனிதனின் உடற்கூறுகள் பற்றியும், நரம்பு நிதானம், எலும்பு, தசை, தமணி போன்றவற்றின் அமைப்புகள் பற்றி துல்லியமாக கணக்கிட்டுக் கூற முடியும்.  மேலும் உடலின் உயிர் முடிச்சான வர்ம ஸ்தலங்களை அறிய முடியும்.

சரநிலை சுவாசத்தின் போது பிராண சக்தியானது உடலின் 108 வர்மப் புள்ளிகளிலும் ஒடுங்குகிறது.  இதுபோல் சித்தர்கள் கூறும் அடங்கல் ஸ்தலங்களில் ஒடுங்குகிறது.  இந்த அடங்கலில் தான்  வர்மப் புள்ளிகளும் அடங்குகிறது.

அடங்கல்கள் பொதுவாக 18 வகைப்படும். உள்ளங்கை வெள்ளை அடங்கல் முதல் பாதம் வரை மொத்தம் 18 ஆக பிரித்துள்ளார்கள்.  இந்த அடங்கல் 18-லும் சர சுவாசத்தின் மூச்சுக்காற்று ஒடுங்கும்.  இதுதான் அடங்கல் ஒடுங்கும் இடமாகும்.

இந்த அடங்கல் 18 ஸ்தலங்களிலும் உயிர்க் காற்றானது ஒடுங்கி ஆதாரங்கள் அனைத்தையும் அடைந்து, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் சென்றடைந்து உடம்பினை சீரான நிலைக்குக் கொண்டு செல்கிறது.

இதனால் சலனமில்லாமல் உயிர்நிலை ஓட்டம் ஏற்பட்டு அங்க அவயங்களை சிறப்பாக செயல்பட வைக்கிறது.  இந்த முறைதான் சித்தர்கள் கூறும் காயசித்தி முறையாகும்.

மூலாதாரத்திற்குச் செல்கின்ற மூச்சுக் காற்றானது மேல் எழும்பி குண்டலினி சக்தியாக மாறி தனஞ்செயனை அடைகிறது.  அப்போது சுழிமுனை சூட்சமம் ஒடுங்குமிடமான திலர்த காலத்தில் தீப்பிழம்பாக பிரதிபலித்து அடங்கி ஒடுங்குகிறது.

இந்த திலர்த கால ஒளிப்பிழம்பே அடங்கல் 18-ல் முக்கிய இடமாகும்.

இந்த அடங்கல்களில் ஒடுங்கி நிற்கின்ற மூச்சுக் காற்றுதான் உயிரை இயக்கிக் கொண்டிருக்கும் உயிர்க்காற்றாகும்.  அப்படியென்றால் 108 வர்மப் புள்ளிகள் தான் உயிரை இயக்குகின்ற உயிர்முடிச்சு என்று சித்தர்கள் கூறியுள்ளனரே,.  அது என்ன என்ற கேள்வி தோன்றும்.

அகத்தியர்  பெருமான் 108 வர்மப் புள்ளிகளும் இந்த அடங்கல் முறை 18-ல் ஒடுங்கியுள்ளதாக அடங்கல் 18 என்ற வர்ம நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 108 வர்மப் புள்ளிகளையும் அடங்கல் 18-ம் தன் கட்டுப்பாட்டுக்குள் ஒடுக்கியுள்ளதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

வர்ம முறைப்படி சிகிச்சை செய்வோர்கள் 18 அடங்கலைப் பற்றி துல்லியமாக தெரிந்தால் தான் 108 வர்மப் புள்ளிகளைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.  அவற்றின் ஒடுக்கங்களை ஆராய்ந்து அறிந்து சிகிச்சையளிக்க முடியும்.

அண்ட சராசரத்தில் ஏற்படும் செயல் பாடுகளையும், கோள்களின் ஆதிக்கத்தையும், கிரகணங்களின் ஓட்டத்தையும் பொறுத்து அடங்களில் ஏற்படும் பாதிப்புதான் உடலையும், பாதிக்கச் செய்கிறது. 

வர்ம மருத்துவத்தில் இந்த 18 அடங்கல்களை முக்கியமாகக் கணக்கிட்டு எல்லா செயல் முறைகளையும் மருத்துவ முறைகளையும், உடற்கூறு தத்துவங்களையும் வகுத்துள்ளனர்.  இதன்படியே வர்ம சிகிச்சையும், வர்ம மருத்துவமும் செய்து வந்துள்ளனர்.

இந்த அடங்கல் 18ன் விளக்க முறைகளை துல்லியமாக அறிந்தவர்கள்தான் வர்ம மருத்துவத்தை முழுமையாகக் கையாளமுடியும். 

சித்த மருத்துவ முறையில் முழுமைபெற்ற மருத்துவராகத் திகழ அடங்கல் 18ன் தத்துவ முறைகளையும், அதன் செயல்பாடுகளையும் அறிந்திருக்க வேண்டும்.

அடங்கல் 18ல்தான் மனிதனின் உயிர்மூச்சு அடங்கியுள்ளது.  அதுதான் சக்தி நிலை.