அரசுப்பணத்தில் மாநிலம் முழுவதும் தனக்கு சிலை வைக்க உத்தரவிட்டு சர்ச்சையை கிளப்பினார் உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி. அரசு உயர் அதிகாரியை தனது ஷூவை கர்ச்சிப்பால் துடைக்கவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
மேலும் பல சர்ச்சைகளில் சிக்கிய இந்த சர்ச்சை ராணி, மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்குகிறார்.
விக்கிலீக்ஸ் இணையதளம் இது குறித்த ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
"புதிதாக காலணி வாங்க வேண்டுமானால் தனது ஜெட் விமானத்தை மும்பைக்கு அனுப்பி விருப்பப்பட்டவற்றை மாயாவதி வாங்கி கொள்வார்.
மேலும் உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காகவே 9 சமையல்க்காரர்கள் மற்றும் 2 சுவை அறிபவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார்.
இத்தகவல் அக்டோபர் 23, 2008 தேதியில் பதிவாகியுள்ளது.
அதே போன்று, ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது, கட்சி உறுப்பினர்கள், அரசு துறை ஊழியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரிடமிருந்து கோடிக்கணக்கில் பரிசு பொருட்களை பெற்றுக்கொள்வது வழக்கம்" என்ற தகவலையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.