நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 8 செப்டம்பர், 2011

டெல்லி குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று வழக்கம் போல வந்தது இமெயில்


டெல்லி : டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்கத்-உல்-ஜிகாத் அல்-இஸ்லாமி  (Huji-ஹூஜி) அமைப்பு பொறுப்பேற்புள்ளதாக பல்வேறு ஊடகங்களுக்கு இமெயில் வந்துள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக அந்த தீவிரவாத இயக்கத்திடமிருந்து harkatuljihadi2011@gmail.com என்ற முகவரியிலிருந்து வந்துள்ள அந்த மெயிலில், இந்தத் தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவின் எல்லா முக்கிய நீதிமன்றங்களையும் உச்ச நீதிமன்றத்தையும் தாக்குவோம் என்று கூறப்பட்டுள்ளது.
(சமீபத்தில் ராஜிவ் கொலை விவகாரத்தில் தூக்கு தண்டனை பெற்ற மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.) இதனை திசைதிருப்பும் முயற்சியாக கூட நடந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இந்த மெயிலை என்.ஐ.ஏ (National Investigation Agency) உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இது குறித்து முழுமையாக விசாரித்த பின்னரே ஹூஜிக்கு இதில் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று என்ஐஏ டைரக்டர் ஜெனரல் சின்ஹா கூறியுள்ளார்.