நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 10 செப்டம்பர், 2011

சட்டவிரோத வெடிப்பொருட்கள் பறிமுதல் – மகாராஷ்டிரா முதல் இடம்


டெல்லி : இந்த வருட துவக்கத்திலிருந்து ஜூலை மாதம் வரை மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 12,667 கிலோ சட்டவிரோத வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோல், காஷ்மீரில் மட்டும் 2,796 சட்ட விரோத ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து அமைச்சர் எம்.ராமச்சந்திரன் தெரிவிக்கையில், மகாராஷ்டிராவை தொடர்ந்து ராஜஸ்தானில் 11,728 கிலோ, ஆந்திராவில் 7,269 கிலோ என சட்டவிரோத வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.
எனினும், சிக்கிம், உட்டர்கந்து, திரிபுரா, பஞ்சாப், ஹிமாச்சலம், ஹரியானா மற்றும் அருணாசலம் ஆகியிடங்கலிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறைந்தபட்சமாக, மணிப்பூரிலிருந்து 32 கிலோவும், மேற்கு வங்காளத்திலிருந்து 35.5 கிலோவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்ட விரோத ஆயுதங்களை பொருத்தவரை காஷ்மீரை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் 1,066, ராஜஸ்தானில் 660 மற்றும் டெல்லியில் 417 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாண்டியிலிருந்து ஒன்றும், தமிழகத்திலிருந்து இரண்டும், ஹிமாச்சலத்திலிருந்து மூன்று ஆயுங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.