நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 5 செப்டம்பர், 2011

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம்: 12 வயது சிறுவன் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் காலை 12.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 52 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 6.6 ரிக்டர் என பதிவானது.


பந்தா அசே பகுதிக்கு தென்மேற்கில் 400 கி.மீ., சுற்றளாவில் அதன் பாதிப்பு இருந்தது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த இயற்கை சீற்றத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்படும் என்பதால், சிறிது நேரம் பரபரப்படைந்த மக்கள் தங்கள் பணிகளை தொடர்ந்தனர். முன்னதாக, கடந்த 2004ம் ஆண்டு சுமித்ரா தீவில் 9.9 நிலநடுக்கம் ஏற்பட்டு, 2,20,000 மேற்பட்ட மக்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.