நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 5 செப்டம்பர், 2011

நம்பர் பிளேட்டில் விதிமுறை மீறல்: நெல்லையில் 100 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு; மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அதிரடி நடவடிக்கை


தமிழகம் முழுவதும் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் விதிமுறைகளை மீறி பதிவு எண்கள் எழுதப்பட்டுள்ளதை தடுக்க அரசு உத்தரவிட்டது. இதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான வாகனங்களில் நம்பர் பிளேட்டில் போக்குவரத்து விதிப்படி எண்கள் எழுதப்படவில்லை.
 
இத்தகைய வாகனங்களின் ஆர்சி புத்தகங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
 
நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து துணை ஆணையர் பாலன் மேற்பார்வையில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் வெங்கட்ரமணி, ராமலிங்கம், முத்துசாமி ஆகியோர் இன்று நெல்லையில் 5 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
 
சோதனையில் 15 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போலீசாரும் ஈடுபட்டனர். சோதனையின் போது 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உரிய அனுமதி இல்லாமலும், நம்பர்பிளேட்டில் விதிமுறைகளை மீறி நம்பர் மற்றும்வாசகம் எழுதியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.